மூளைக் காய்ச்சலால் குழந்தைகள் பலியாவதை தடுக்க என்ன செய்ய வேண்டும்!

19-07-2019 03:36 PM

பீகார் மாநி­லம் முசா­பர்­பூர் மாவட்­டத்­தி­லும், அதனை சுற்­றி­யுள்ள பகு­தி­க­ளில் இருந்­தும் இந்த கோடை­யில் மூளைக்­காய்ச்­சல் நோய் கார­ண­மாக 150க்கும் மேற்­பட்ட குழந்­தை­கள் பலி­யா­கி­யுள்­ள­னர். இது ‘அக்­யூட் என்­செ­ப­லி­டிஸ் சிண்ட்­ரோம்’ [Acute Encephalitis Syndrome (AES)] என்று ஆங்­கி­லத்­தில் அழைக்­கப்­ப­டு­கி­றது. இதை மூளைக்­காய்ச்­சல் அல்­லது மூளை­ய­ழற்சி நோய் என்று கூற­லாம்.  பீகா­ரில் 1995ம் ஆண்டு இந்த நோய் தாக்­கு­தல் பற்றி முதன் முத­லில் தெரிந்­தது. அதில் இருந்து இன்று வரை வருடா வரு­டம் மூளைக்­காய்ச்­சல் கார­ண­மாக குழந்­தை­கள் பலி­யா­வது தொடர்­க­தை­யா­கி­விட்­டது. இந்த நோய் பற்றி கடந்த மூன்­றரை வரு­டங்­க­ளாக முசா­பர்­பூ­ரில் உள்ள பிர­பல குழந்­தை­கள் நல மருத்­து­வர் டாக்­டர். அருண் ஷா ஆராய்ச்சி செய்து வரு­கி­றார். இவர் ‘தி வயர்’ இணை­ய­த­ளத்­திற்­காக உமேஷ் குமார் ரேவுக்கு அளித்த பேட்­டி­யின் சுருக்­கம்.

கேள்வி: பீகா­ரில் கடந்த சில வரு­டங்­க­ளாக மூளைக்­காய்ச்­சல் நோய் கார­ண­மாக குழந்­தை­கள் பலி­யா­வது குறைந்து வந்­தது. ஆனால் இந்த வரு­டம் 150க்கும் மேற்­பட்ட குழந்­தை­கள் பலி­யா­கி­யுள்­ள­னர். அரசு எங்கே தவறு செய்­துள்­ளது?

பதில்: இந்த முறை பீகார் அரசு இது பற்­றிய விழிப்­பு­ணர்வை சரி­யாக செய்­ய­வில்லை என்­பதை ஒத்­துக் கொண்­டுள்­ளது. இதற்கு கார­ணம் கிரா­மப்­பு­றங்­க­ளில் மருத்­துவ வசதி போதிய அளவு இல்­லா­ததே. தற்­போது முசா­பர்­பூர் மாவட்­டத்­தில் 103 ஆரம்ப சுகா­தார நிலை­யங்­கள் உள்­ளன. இவை எல்­லாம் சமூக தணிக்­கை­யில் ‘பூஜ்­யம்’ மதிப்­பெண் பெற்­றுள்­ளன. இதற்கு கார­ணம் அடிப்­படி வச­தி­கள் இல்­லா­ததே. இந்த ஆரம்ப சுகா­தார நிலை­யங்­க­ளில் மருத்­து­வர் அல்­லது நர்ஸ் இல்லை.

மத்­திய அரசு 50 ஆயி­ரம் பேருக்கு ஒரு ஆரம்ப சுகா­தார நிலை­யம் இருக்க வேண்­டும் என்று பரிந்­து­ரைத்­துள்­ளது. முசா­பர்­பூர் மாவட்­டத்­தின் மக்­கள் தொகை கணக்­குப்­படி தற்­போது உள்ள 103  ஆரம்ப சுகா­தார நிலை­யங்­களை 170 ஆக அதி­க­ரிக்க வேண்­டும். அத்­து­டன் அடிப்­படை வச­தி­க­ளை­யும், தேவை­க­ளை­யும் மேம்­ப­டுத்த வேண்­டும். இதை தீவி­ர­மாக அமல்­ப­டுத்த வேண்­டும். இந்த ஆரம்ப சுகா­தார நிலை­யங்­க­ளில் சிறந்த முறை­யில் சிகிச்சை அளிக்க வேண்­டும்.

கேள்வி: ஆரம்ப சுகா­தார நிலை­யங்­க­ளில் முறை­யான சிகிச்சை அளிக்­கப்­பட்டு இருந்­தால், பல குழந்­தை­க­ளின் உயிரை காப்­பாற்றி இருக்­க­லாம் என்­கின்­றீர்­களா?

பதில்: ஆரம்ப சுகா­தார நிலை­யங்­க­ளில் முறை­யான வச­தி­கள் இருந்­தி­ருந்­தால், பல குழந்­தை­க­ளின் உயிரை காப்­பாற்­றி­யி­ருக்­க­லாம் என்று கரு­து­கின்­றேன். தனி­யார் மருத்­து­வ­ம­னை­யில் என்­னி­டம் அழைத்து வந்த சில குழந்­தை­கள் மூளைக்­காய்ச்­ச­லால் பாதிக்­கப்­பட்டு இருந்­த­னர். அவ்­வாறு அழைத்­து­வ­ரப்­பட்ட ஒரு குழந்தை மயக்­கத்­தில் இருந்­தது. அந்த குழந்தை ‘சாம்கி’ காய்ச்­ச­லால் பாதிக்­கப்­பட்டு இருப்­ப­தாக நர்ஸ் கூறி­னார். (பீகா­ரில் மூளைக்­காய்ச்­சலை உள்­ளூர் மக்­கள் சாம்கி காய்ச்­சல் என்று கூறு­கின்­ற­னர்.) நான் அந்த குழந்­தையை பரி­சோ­தித்த போது, அந்த குழந்­தைக்கு இரத்­தத்­தில் சர்க்­கரை அளவு பூஜ்­ய­மாக இருப்­பது தெரி­ய­வந்­தது. அந்த குழந்­தைக்கு உட­ன­டி­யாக 10 சத­வி­கி­தம் ‘இன்ட்­ரெ­வன்ஸ் டெக்ஸ்ட்­ரோஸ்’ (intravenous dextrose) கொடுத்­தோம். 45 நிமி­டத்­தில் அந்த குழந்தை குண­ம­டைந்­தது. அந்த குழந்தை தண்­ணீர் கேட்டு குடித்­தது. சில பிஸ்­கட்­டு­க­ளை­யும் சாப்­பிட்­டது. ஒரு மணி நேரத்­தில் அந்த குழந்தை இயல்­பான நிலைக்கு திரும்­பி­யது.

இது போன்ற வசதி கிரா­மப்­பு­றங்­க­ளில் உள்ள ஆரம்ப சுகா­தார நிலை­யங்­க­ளில் இருந்­தி­ருந்­தால், நிச்­ச­ய­மாக பல குழந்­தை­க­ளின் உயிரை காப்­பாற்­றி­யி­ருக்­க­லாம். அரசு வழி­காட்டி நெறி­மு­றை­க­ளி­லும், கோடை காலத்­தில் இது போன்ற மூளைக்­காய்ச்­சல் வந்­தால், மருத்­து­வர் உடனே குளு­கோ­மீட்­டரை கொண்டு இரத்­தத்­தில் உள்ள சர்க்­கரை அளவை காண்­கா­ணிக்க வேண்­டும். சர்க்­கரை அளவு குறை­வாக இருந்­தால், உட­ன­டி­யாக 10 சத­வி­கி­தம் இன்ட்­ரெ­வன்ஸ் டெக்ஸ்ட்­ரோஸ் கொடுத்து சர்க்­கரை அளவை அதி­க­ரிக்க வேண்­டும் என்று கூறப்­பட்­டுள்­ளது. இறந்த 150 குழந்­தை­க­ளில் பெரும்­பா­லான குழந்­தை­க­ளுக்கு நஞ்சு பாதிப்­பி­னால் இரத்­தத்­தில் சர்க்­கரை அளவு குறைந்­துள்­ளது. அந்த குழந்­தை­க­ளுக்கு 10 சத­வி­கி­தம் இன்ட்­ரெ­வன்ஸ் டெக்ஸ்ட்­ரோஸ் கொடுத்­தி­ருந்­தால், இரத்­தத்­தில் சர்க்­கரை அளவை அதி­க­ரித்து இயல்பு நிலைக்கு கொண்டு வந்­தி­ருக்­க­லாம்.

லிச்சி பழத்­தின் விதை விஷத்­தன்மை வாய்ந்­தது. இந்த பழத்­தின் விதையை சாப்­பிட்­ட­தால் அதில் இருந்த விஷம், இரத்­த­தில் சர்க்­கரை அளவை குறைத்­துள்­ளது என்று நிபு­ணர்­கள் கூறி­யுள்­ள­னர். இதில் முழு உண்மை இல்லை.  யாரும் லிச்சி பழத்­தின் விதையை சாப்­பி­டு­வ­தில்லை. லிச்சி பழத்­தின் விதை மட்­டு­மல்ல, பழம் பழுக்­கா­மலோ அல்­லது கீழே விழுந்து அடி­பட்டு அழு­கிப் போயி­ருந்­தால் கூட விஷத்­தன்­மை­யாக மாறி­வி­டும். பாதிக்­கப்­பட்ட குழந்­தை­க­ளின் பெற்­றோர் லிச்சி பழத் தோட்­டங்­க­ளில் வேலை செய்­கின்­ற­னர். அந்த குழந்­தை­கள் பெரும்­பா­லான நேரத்தை லிச்சி பழத்­தோட்­டங்­க­ளில் கழிக்­கின்­ற­னர். கீழே விழுந்த லிச்சி பழங்­களை சாப்­பி­டு­கின்­ற­னர்.

அதே நேரத்­தில் இந்த குழந்­தை­க­ளுக்கு வேறு­வ­ழி­யில்லை. அவர்­க­ளது கிரா­மங்­க­ளுக்கு சென்று, அவர்­கள் எப்­படி வாழ்­கின்­ற­னர் என்­பதை பாருங்­கள். அவர்­க­ளின் நிலை மிக மோச­மாக உள்­ளது. இந்த மாதி­ரி­யான சுழ்­நி­லை­யில் வாழ்­ப­வர்­கள் யாராக இருந்­தா­லும் உடல் சுக­வீ­னம் அடை­வார்­கள். இதற்கு அடிப்­படை கார­ணம் குழந்­தை­க­ளுக்கு போதிய ஊட்­டச்­சத்து இல்­லா­ததே. லிச்சி பழத்­தின் மீது பழியை போட்டு தப்­பிக்க பார்க்­கின்­ற­னர். பாவம் அந்த குழந்­தை­கள்.

கேள்வி: 1995ல் முதல் முசா­பர்­பூர் மாவட்­டத்­தில் மூளைக்­காய்ச்­சல் தாக்­கு­த­லுக்கு கார­ணம் என்ன? ஏன் அதற்கு முன் இல்லை?

பதில்: 1995ல் இருந்து மூளைக்­காய்ச்­சல் கார­ண­மாக குழந்­தை­கள் பலி­யா­வதை பார்க்­கின்­றோம். இது பற்றி அர­சின் பாரா­மு­கத்­தை­யும் பார்க்­கின்­றோம். நான் 1984 முதல் இங்கு வேலை பார்க்­கின்­றேன். அதற்கு முன் இந்த நோயை பற்றி சிறிய அள­வில் கேள்­விப்­பட்­டுள்­ளேன். உண்­மை­யி­லேயே நடந்­தது என்­ன­வென்­றால், 1995க்கு பிறகு பத்­தி­ரிகை, ஊட­கங்­கள் பரந்த அள­வில் மக்­கள் மத்­தி­யில் போய் சேரு­கின்­றன. மக்­கள் (சமூக) ஊட­கங்­க­ளும் பல­மாக உள்­ளன. இந்த வரு­டம் மூளைக்­காய்ச்­சல் கார­ண­மாக 150 குழந்­தை­கள் மர­ண­ம­டைந்­துள்­ள­னர். இந்த நோயால் 500க்கும் மேற்­பட்ட குழந்­தை­கள் மர­ண­ம­டைந்­துள்­ளன. 2014ல் 400க்கும் மேற்­பட்ட குழந்­தை­கள் மர­ண­ம­டைந்­தன. 1995க்கு முன்­பும் குழந்­தை­கள் மர­ண­ம­டைந்­துள்­ள­னர். ஆனால் அவை வெளியே தெரி­ய­வில்லை.

1995க்கு பிறகு பத்­தி­ரிகை, ஊட­கங்­கள் பல­ம­டைந்­தன. அதன் பிறகு வெளியே தெரி­கி­றது. 1995க்கு பிறகு அர­சும் சில நட­வ­டிக்­கை­களை எடுத்­துள்­ளது. ஆனால் இவை மூன்­றாம் நிலை நட­வ­டிக்­கை­களே. இது வெட்­கப்­பட வேண்­டிய விஷ­யம். நீங்­கள் நோயின் மூல கார­ணத்தை அறி­ய­வேண்­டும். இந்த நோய் தாக்­கு­த­லுக்கு மூல கார­ணம் ஏழ்மை, சுகா­தா­ர­மின்மை, ஊட்­டச்­சத்து குறை­பாடு போன்­ற­வை­களே. இதை எல்­லாம் எதிர்த்து போராட வேண்­டும். உங்­க­ளால் வெப்­பத்தை எதிர்த்து போராட முடி­யாது. ஆனால் நீங்­கள் வறுமை, ஊட்­டச்­சத்து குறை­பாடு, சுகா­தா­ர­மின்­மையை எதிர்த்து போராட முடி­யும். ஆரம்ப சுகா­தார நிலை­யங்­க­ளில் மூளைக் காய்ச்­ச­லால் பாதிக்­கப்­பட்ட குழந்­தை­க­ளுக்கு சிகிச்சை அளிக்­கும் வசதி ஏன் செய்­யப்­ப­ட­வில்லை என்ற கேள்வி எழு­கி­றது.

கேள்வி: ஒரு குழந்­தைக்கு ஊட்­டச்­சத்து குறை­பாடு உள்­ளது. அந்த குழந்தை அழு­கிய அல்­லது காயாக உள்ள லிச்சி பழத்தை சாப்­பி­ட­வில்லை. அப்­படி இருந்­தா­லும் அந்த குழந்­தைக்கு மூளைக்­காய்ச்­சல் தாக்­கு­தல் இருக்­குமா?

பதில்: இல்லை. ஊட்­டச்­சத்து குறை­பாடு வரு­டம் முழு­வ­தும் இருக்­கும் போது, ஏன் குழந்­தை­கள் மே அல்­லது ஜூன் மாதங்­க­ளில் மட்­டும் பாதிக்­கப்­ப­டு­கின்­ற­னர். இதற்கு கார­ணம் லிச்சி பழங்­களை காயா­கவோ, அழு­கிய பழங்­களை உட்­கொள்­வதே. அதே நேரத்­தில் நான் லிச்சி பழத்தை மட்­டும் குறை கூற­வில்லை. ஊட்­டச்­சத்து குறை­பாடே முக்­கிய கார­ணம்.

கேள்வி: லிச்சி பழத்தை தவிர்த்து, முசா­பர்­பூர் பிராந்­தி­யத்­தில் காற்­றில் சில கிரு­மி­கள் இருப்­ப­தும், இவை மே, ஜூன் மாதங்­க­ளில் செயல்­பட தொடங்­கு­வ­தும் மூளைக்­காய்ச்­சல் தாக்க கார­ணமா?

பதில்: நாங்­கள் இதைப்­பற்­றி­யும் ஆராய்ச்சி செய்­துள்­ளோம். ஆனால் எந்த வைர­ஸை­யும் (கிருமி) அடை­யா­ளம் காண­வில்லை. இது பற்றி செய்த எல்லா ஆராய்ச்­சி­க­ளி­லும் வைரஸ் இருப்­ப­தற்­கான சாத்­தி­யக்­கூறு இல்லை என்றே தெரி­ய­வந்­தது. நாங்­கள் 2014ல் செய்த ஆராய்ச்­சி­யில் இரத்­தத்­தில் சர்க்­கரை அளவு குறைந்த குழந்­தை­க­ளுக்கு, 10 சத­வி­கி­தம் இன்ட்­ரெ­வன்ஸ் டெக்ஸ்ட்­ரோஸ் கொடுத்­தோம். அந்த குழந்­தை­கள் குண­மா­கின. இதில் இருந்து வளர்ச்­சிதை மாற்ற செய­லி­ழப்­பால் மூளைக்­காய்ச்­சல் வரு­வது தெரி­கி­றது.  வைரஸ் தாக்­கு­த­லால் அல்ல. வைரஸ் தாக்­கு­தல் எனில் 10 சத­வி­கி­தம் இன்ட்­ரெ­வன்ஸ் டெக்ஸ்ட்­ரோஸ் கொடுப்­ப­தால் பலன் இருந்­தி­ருக்­காது. இது பற்றி பல குழுக்­கள் ஆய்வு செய்­துள்­ளன. பாதிக்­கப்­பட்ட் குழந்­தை­க­ளின் இரத்­தத்தை பரி­சோ­தித்­துள்­ளன. எதி­லும் வைரஸ் தாக்­கு­தல் இல்லை.

கேள்வி: 1995ல் இருந்து செய்து வரும் ஆராய்ச்­சி­க­ளால் மூளைக்­காய்ச்­சல் பற்றி என்ன தெரி­ய­வந்­துள்­ளது?

பதில்: 2014க்கு முன் இந்த நோயை பற்றி எவ்­வித ஆய்­வு­க­ளும் செய்­யப்­ப­ட­வில்லை. எல்­லோ­ருக்­கும் கார­ணம் தெரி­யா­மல், ஊகங்­களை மட்­டுமே கூறி­வந்­தோம். சிலர் இது வெப்­பத்­தால் வரு­கி­றது என்­ற­னர். மற்­ற­வர்­கள் இது நோய் தொற்­றால் வரு­கி­றது என்­ற­னர். அப்­போது நான் இது பற்றி தனிப்­பட்ட முறை­யில் ஆராய்ச்சி செய்­வது என முடிவு செய்­தேன். ஒவ்­வொரு வரு­ட­மும் மே, ஜூன் மாதங்­க­ளில் ஏன் குழந்­தை­கள் பலி­யா­கின்­ற­னர் என்­பதை பற்றி ஆராய்ச்சி செய்­வது கடமை என எண்­ணி­னேன். அர­சின் எவ்­வித நிதி உத­வி­யும் இல்­லா­மல், நாங்­கள் ஆய்வு செய்ய தொடங்­கி­னோம். நான், டாக்­டர். ஜேக்­கப் ஜான், டாக்­டர். முகுல் தாஸ் ஆகிய மூவ­ரும் ஒரு குழு­வாக சேர்ந்து ஆராய்ச்­சி­யில் ஈடு­பட்­டோம்.  

இதில் டாக்­டர் ஜேக்­கப் ஜான் தலைமை ஆய்­வா­ளர். அவர் முசா­பர்­பூ­ரில் செய்­யும் ஆராய்ச்­சிக்கு அவ­ரது சொந்த பணத்தை செலவு செய்­தார். நாங்­கள் மூளைக்­காய்ச்­ச­லால் பாதிக்­கப்­பட்ட எல்லா குழந்­தை­கள் குறித்­தும் ஆராய்ச்சி செய்ய தொடங்­கி­னோம். பாதிக்­கப்­பட்ட குழந்­தை­கள் அனை­வ­ரும் ஏழை குடும்­பத்­தைச் சேர்ந்­த­வர்­கள். எல்­லோ­ரும் ஊட்­டச்­சத்து குறை­பாடு உள்ள குழந்­தை­கள். ஒவ்­வொரு வரு­ட­மும் மே, ஜூன் மாதங்­க­ளில் இதன் தாக்­கு­தல் இருப்­ப­தை­யும் கண்­டோம். மூளைக்­காய்ச்­சல் தாக்­கிய எல்லா குழந்­தை­க­ளின் இரத்­தத்­தில் சர்க்­கரை அளவு மிக குறை­வாக உள்­ளது.  

இதில் கவ­னிக்க வேண்­டிய விஷ­யம் என்­ன­வெ­னில், இந்த நோய் தாக்­கு­த­லுக்கு உள்­ளான குழந்­தை­க­ளில் 90 சத­வி­கி­தம் குழந்­தை­க­ளுக்­கும் ஒரே மாதி­ரி­யான பாதிப்பு இருப்­ப­து­தான். அந்த குழந்­தை­கள் வழக்­கம் போல் காலை­யில் எழுந்து விளை­யா­டி­யுள்­ளன. அதன் பிறகு பெற்­றோ­ரு­டன் லிச்சி பழப்­பண்­ணைக்கு சென்­றுள்­ளன. வெயி­லும் அதி­க­ரித்­துள்­ளது. பழப்­பண்­ணை­யில் குழந்­தை­கள் கையில் கிடைத்­ததை எல்­லாம் சாப்­பிட்­டுள்­ளன. இரவு வீட்­டிற்கு திரும்பி, உறங்­கி­யுள்­ளன. மூளைக்­காய்ச்­ச­லின் தாக்­கு­த­லின் பாதிப்பு நடு இரவு 3 மணி முதல் 4 மணிக்­குள் தெரிந்­துள்­ளது. நஞ்சு வேலை செய்ய ஆரம்­பித்­துள்­ளது. இது பற்றி மேலும் ஆய்வு செய்த போது, அந்த நஞ்சு லிச்சி காய், பாதி பழுத்த பழம், அழு­கிய பழத்­தில் இருப்­பது தெரிய வந்­தது.

கேள்வி: இந்த நோயால் மேலும் உயிர்­பலி ஏற்­ப­டா­மல் இருக்க என்ன முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்?

பதில்: இந்த நோய்க்கு மூல கார­ணம் ஊட்­டச்­சத்து குறை­பாடே. ஊட்­டச்­சத்து குறை­பாட்டை களைய நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும். தேசிய கிரா­மப்­புற சுகா­தார திட்­டம், மதிய உணவு, ஒருங்­கி­ணைந்த குழந்­தை­கள் மேம்­பாட்டு சேவை, உண­வுப் பொருட்­கள் பொது­வி­நி­யோக முறை, பீகார் மாநில அர­சின் குழந்­தை­கள் ஊட்­டச்­சத்து திட்­டம் போன்­ற­வை­களை கிராம மட்­டத்­தில் திறம்­பட செயல்­ப­டுத்த வேண்­டும்.

ஆரம்ப சுகா­தார நிலை­யங்­களை அதி­க­ரிக்க வேண்­டும். ஏழை­க­ளுக்கு ஊட்­டச்­சத்து, சுகா­தா­ரம் பற்றி விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்த வேண்­டும். ஆனால் அரசு எவ்­வித முயற்­சி­க­ளை­யும் செய்­ய­வில்லை. எனக்கு அரசு அதன் கட­மையை செய்­ய­வில்லை என்று கூறு­வ­தில் எவ்­வித தயக்­க­மும் இல்லை.

கேள்வி: மூளைக்­காய்ச்­சல் பற்­றிய ஆராய்ச்­சிக்கு பீகார் அரசு ஏதா­வது நிதி உதவி செய்­கி­றதா?

பதில்: இது வரை மாநில அரசு சார்­பில் எவ்­வித ஆராய்ச்­சி­யும் செய்­ய­வில்லை. மற்­ற­வர்­கள் செய்­யும் ஆராய்ச்­சிக்கு நிதி உத­வி­யும் செய்­ய­வில்லை. ஆனால் மத்­திய அரசு அமெ­ரிக்க நிறு­வ­னத்­தி­டம் சேர்ந்து ஆராய்ச்சி செய்­துள்­ளது. நாங்­கள் 2014ல் தனி­யாக ஆராய்ச்சி செய்­தோம். இந்த வரு­ட­மும் ஆராய்ச்சி மேற்­கொண்­டுள்­ளோம்.

அமெ­ரிக்­கா­வைச் சேர்ந்த அட்­லாண்டா சென்­டர் பார் டிசிஸ் கண்ட்­ரோல் அண்ட் பிரி­வென்­சன் நிறு­வ­ன­மும், மத்­திய அர­சின் நேஷ­னல் சென்­டர் பார் டிசிஸ் கண்ட்­ரோல் இணைந்து செய்த ஆராய்ச்­சி­யின் முடி­வு­க­ளும், நாங்­கள் செய்த ஆராய்ச்­சி­யின் முடி­வு­க­ளும் ஒரே மாதி­ரி­யாக உள்­ளன. எங்­க­ளது ஆராய்ச்சி கட்­டுரை, 2014ல் லான்­செட் ஆய்வு இத­ழில் பிர­சு­ர­மா­னது. மத்­திய அரசு, அமெ­ரிக்க நிறு­வ­னம் சேர்ந்து செய்த ஆராய்ச்சி கட்­டுரை, 2017 லான்­செட் ஆய்வு இத­ழில் வெளி­யா­னது. அதே நேரத்­தில் இந்த ஆராய்ச்­சி­க­ளில் பீகார் அர­சுக்கு துளி­யும் பங்கு இல்லை.

பீகார் அர­சும் தனி­யாக எவ்­வித ஆராய்ச்­சி­யும் செய்­ய­வில்லை. அதே நேரத்­தில் பீகார் மாநில அரசு 2016ல் டாக்­டர். ஜேக்­கப் ஜானை அழைத்து மூளைக்­காய்ச்­ச­லுக்கு சிகிச்சை அளிக்க வேண்­டிய முறை குறித்து கேட்­டது. நாங்­கள் அர­சி­டம் நான்கு வித­மான நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்று தெரி­வித்­தோம். ஊட்­டச்­சத்து குறை­பாட்டை நீக்க வேண்­டும். எந்த குழந்­தை­யும் இர­வில் உணவு சாப்­பி­டா­மல் பசி­யு­டன் உறங்க செல்ல கூடாது. வெறும் வயிற்­றில் குழந்­தை­கள் லிச்சி பழம் சாப்­பி­டு­வதை தடுக்க வேண்­டும். ஆரம்ப சுகா­தார நிலை­யங்­களை மேம்­ப­டுத்த வேண்­டும் என்று தெரி­வித்­தோம்.

கேள்வி: பிர­த­மர் நரேந்­திர மோடி, பீகா­ரில் மூளைக்­காய்ச்­சல் கார­ண­மாக குழந்­தை­கள் பலி­யா­கி­யி­ருப்­பது வெட்­கக்­கே­டா­னது என்று ஆயுஸ்­மான் பாரத் திட்­டத்­தின் போது கூறி­யுள்­ளார். ஆய்ஸ்­மான் பாரத் திட்­டத்­தில், இந்த நோயை எதிர்த்து உருப்­ப­டி­யாக நட­வ­டிக்கை எடுக்க முடி­யுமா?

பதில்: ஆயுஸ்­மான் பாரத் திட்­டத்­தால் மூளைக்­காய்ச்­சல் நோய்க்கு எது­வும் செய்ய முடி­யாது. இந்த திட்­டத்­தின் கீழ் சுக­வீ­னம் அடைந்­த­வ­ருக்கு சிகிச்­சைக்­காக ரூ.5 லட்­சம் வரை (காப்­பீடு திட்­டத்­தில்) வழங்­கப்­ப­டு­கி­றது. மத்­திய சுகா­தா­ரத்­துறை அமைச்­சர் டாக்­டர். ஹர்ஸ்­வர்­தன், முசா­பர்­பூர் நக­ருக்கு வருகை தந்­தார். அவர் ஸ்ரீகி­ருஷ்ணா மருத்­துவ கல்­லூரி மருத்­து­வ­ம­னை­யில் உள்ள 50 படுக்­கை­கள் 150 படுக்­கை­க­ளாக அதி­க­ரிக்­கப்­ப­டும் என்று கூறி­னார். இது கேலிக்­கூத்­தாக இல்­லையா?

நீங்­கள் மருத்­து­வ­ம­னை­யில் படுக்­கை­களை அதி­க­ரிப்­பது சரி. ஆனால் கிரா­மப்­பு­ரங்­க­ளில் குழந்­தைக்கு பாதிப்பு ஏற்­ப­டும் போது, அதற்கு உட­ன­டி­யாக சிகிச்சை அளிக்க ஆரம்ப சுதா­கார நிலை­யம் தான் வேண்­டும். அப்­போ­து­தான் முறை­யான சிகிச்சை கிடைக்­கும். நக­ரங்­க­ளில் உள்ள மருத்­து­வ­ம­னை­யில் படுக்கை அதி­க­ரிப்­ப­தால் பலன் இல்லை. ஊட்­டச்­சத்து குறை­பாட்­டால்­தான் மூளைக்­காய்ச்­சல் நோய் தாக்­கு­த­லுக்கு ஆளா­கின்­ற­னர். ஆயுஸ்­மான் பாரத் போன்ற திட்­டத்­தால் ஊட்­டச்­சத்து குறை­பாட்டை களைய முடி­யாது.  

கேள்வி: மூளைக்­காய்ச்­சல் தாக்­கு­த­லில் இருந்து குண­மான குழந்­தை­கள் இயல்­பான வாழ்க்கை வாழ­மு­டி­யுமா?

பதில்: இயல்­பான வாழ்க்கை வாழ­மு­டி­யாது. இதில் இருந்து மீண்ட குழந்­தை­க­ளில் பல குழந்­தை­கள் உடல் அல்­லது மனம் ஊன­முற்­ற­வர்­க­ளாக உள்­ள­னர். இந்த நஞ்சு இரத்­தத்­தின் வழி­யாக மூளையை பாதிக்­கி­றது. நமது உட­லில் மூளைக்கு பாதிப்பு ஏற்­பட்­டால் சரி செய்ய இய­லாது. உட­லில் உள்ள செல்­களை மறு உற்­பத்தி செய்­ய­லாம். ஆனால் நியூட்­ரான் என்று அழைக்­கப்­ப­டும் மூளை­க­ளில் உள்ள செல்­களை மறு உற்­பத்தி செய்ய முடி­யாது. மூளைக்­காய்ச்­சல் குழந்­தையை முடக்­கி­வி­டு­கி­றது. அவர்­களை மன ரீதி­யா­கவோ அல்­லது உடல் ரீதி­யா­கவோ ஊன­மாக்­கி­வி­டு­கி­றது.

மூளைக்­காய்ச்­ச­லால் பலி­யான குழந்­தை­க­ளின் பெற்­றோ­ருக்கு பீகார் அரசு நான்கு லட்­சம் ரூபாய் இழப்­பீடு கொடுப்­ப­தாக கூறி­யுள்­ளது. இது இழப்­பீடு கொடுக்க வேண்­டுமே என்­ப­தற்­காக கொடுக்­கப்­ப­டு­கி­றது. இந்த பிரச்­னையை மனி­தா­பி­மான கோணத்­தில் பார்க்க வேண்­டும். மூளைக்­காய்ச்­ச­லில் இருந்து மீண்ட குழந்­தை­க­ளின் மறு­வாழ்­வுக்­கான நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்­டும். அந்த் குழந்­தை­க­ளுக்­கான சிகிச்­சை­யின் முழு பொறுப்­பை­யும் அரசு ஏற்­றுக் கொள்ள வேண்­டும்.

கேள்வி: நீங்­கள் ஒரு நேர்­கா­ண­லில், அர­சுக்கு அக்­கறை இருந்­தால், ஒரே வரு­டத்­தில் மூளைக்­காய்ச்­சல் தாக்­கு­தல் வரா­மல் குழந்­தை­களை காப்­பாற்­ற­லாம் என்று கூறி­யுள்­ளீர்­கள். இதை பற்றி விளக்­குங்­கள்?

பதில்: இந்த நோய் தடுக்­கவே முடி­யாத நோய் அல்ல. நாம் உளப்­பூர்­வ­மாக வேலை செய்ய வேண்­டும். கோடை காலங்­க­ளில் குழந்­தை­கள் லிச்சி பழப்­பண்ணை பக்­கம் போகா­மல் இருக்க விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்த வேண்­டும். குழந்­தை­கள் பழுக்­காத, கீழே விழுந்த லிச்சி பழங்­கள் சாப்­பி­டு­வதை தடுக்க வேண்­டும். ஊட்­டச்­சத்து குறை­பாட்டை களைய நீண்­ட­கால திட்­டத்தை வகுத்து அமல்­ப­டுத்த வேண்­டும். அங்­கன்­வாடி மையங்­க­ளுக்­கும், ஆரம்ப சுகா­தார நிலை­யங்­க­ளுக்­கும் உள்ள பொறுப்­பு­களை வரை­ய­றுக்க வேண்­டும். ஆரம்ப சுகா­தார நிலை­யங்­க­ளில் மருத்­து­வர்­கள் முறை­யாக சிகிச்சை அளிப்­பதை உறு­திப்­ப­டுத்த வேண்­டும். ஆரம்ப சுகா­தார நிலை­யங்­க­ளி­லேயே முறை­யான சிகிச்சை அளிக்­கப்­பட்­டால். எதிர்­கா­லத்­தில் மூளைக்­காய்ச்­ச­லால் எந்த குழந்­தை­யும் பலி­யா­காது.

ஊட்­டச்­சத்து குறை­பாட்டை போக்க விரி­வான அள­வில் நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்­டும். ஏழ்மை நிலை­யில் உள்ள மக்­க­ளுக்கு, குழந்­தை­க­ளுக்கு சாப்­பிட கொடுக்க உள்­ளூ­ரி­லேயே கிடைக்­கும் சத்­தான உண­வு­கள் பற்­றிய விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்த வேண்­டும். அதே நேரத்­தில் ஏழை­க­ளுக்கு உள்­ளூ­ரி­லேயே வேலை வாய்ப்பு ஏற்­ப­டுத்தி தர­வேண்­டும். இவற்றை வரு­டம் முழு­வ­தும் சரி­யாக செய்­தால், அடுத்த வரு­டம் ஒரு குழந்­தை­கூட மூளைக்­காய்ச்­ச­லால் பலி­யா­காது என்று நினைக்­கின்­றேன்.

இவ்­வாறு டாக்­டர். அருண் ஷா பேட்­டி­யில் கூறி­னார்.

நன்றி: தி வயர் இணை­ய­த­ளத்­தில் உமேஷ் குமார் ரே. (இந்த பேட்­டியை நயு­சின் ரெஹ்­மான் இந்­தி­யில் எடுத்து முத­லில் பிர­சு­ர­மா­னது. அதன் ஆங்­கில மொழி­பெ­யர்ப்­பில் இருந்து தமி­ழில் கொடுக்­கப்­பட்­டுள்­ளது.)