அரசியல்மேடை : வேலூர் யாருக்கு...!

19-07-2019 03:33 PM

வேலூர் நாடா­ளு­மன்ற தொகுதி தேர்­தல், வரும் ஆகஸ்ட் 5ம் தேதி நடை­பெற உள்­ளது. இதன் வாக்­கு­கள் 9ம் தேதி எண்­ணப்­பட்டு முடி­வு­கள் வெளி­யி­டப்­ப­டும். நடை­பெற்று முடிந்த பொதுத் தேர்­த­லின் போது, நடந்­தி­ருக்க வேண்­டிய இந்த தேர்­தல், சோதனை, பணப்­ப­ரி­வர்த்­தனை, கோடிக்­க­ணக்­கில் பணம் பறி­மு­தல் – என்­கிற கார­ணங்­க­ளால் ஒத்தி வைக்­கப்­பட்­டது. இப்­போது இந்த தேர்­தல் அறி­விக்­கப்­பட்­டு­விட்­டது. பொதுத் தேர்­த­லு­டன் சேர்ந்து நடக்­கா­மல், தனி­யாக நடக்க இருப்­ப­தால், இது எல்லா கட்­சி­யி­னர் மத்­தி­யி­லும் ஒரு ‘இடைத்­தேர்­தல்’ போன்ற முக்­கி­யத்­து­வத்­தை­யும், கவ­னத்­தை­யும் பெற்­றுள்­ளது.  

இடைத்­தேர்­தல் என்­றாலே தமி­ழ­கத்­தில் உள்ள அதி­முக – திமுக மற்­றும் அதன் தோழ­மைக் கட்­சி­க­ளி­டையே ஒரு­வித பர­ப­ரப்பு ஏற்­பட்டு விடும். அந்த பர­ப­ரப்பு, தற்­போது நடை­பெ­ற­வுள்ள வேலூர் நடா­ளு­மன்ற தொகுதி தேர்­த­லில் இரட்­டிப்­பாகி உள்­ளது.

வேலூர் தொகு­திக்கு செல்­வ­தற்கு முன், தமிழ்­நாட்­டில் நடை­பெற்ற சில முக்­கிய இடைத்­தேர்­தல்­கள் பற்றி பார்ப்­போம். 1952 தொடங்கி காங்­கி­ரஸ் ஆட்­சிக்­கா­லங்­க­ளி­லும், 1967 தொடங்கி திமுக ஆட்­சிக் காலங்­க­ளி­லும், 1977 தொடங்கி எம்.ஜி.ஆர். தலை­மை­யி­லான அண்ணா திரா­விட முன்­னேற்­றக் கழக ஆட்­சிக் காலங்­க­ளி­லும் இடைத்­தேர்­தல்­கள் நடை­பெற்­றுள்­ளன. அப்­போ­தெல்­லாம் தலை­வர்­கள், கட்சி நிர்­வா­கி­கள் பிர­சா­ரம் செய்­வார்­கள். ஆட்சி பொறுப்­பில் உள்ள கட்­சி­யி­னர், அமைச்­சர்­க­ளின் துணை­யோடு கொஞ்­சம் கூடு­தல் கவ­னம் செலுத்தி பிர­சா­ரம் செய்­வார்­கள். இத்­த­கைய பிர­சார பலத்­தை­யும் கடந்து அந்த வேட்­பா­ள­ருக்கு உள்ள செல்­வாக்கு, மக்­கள் ஆத­ரவு, இதன் அடிப்­ப­டை­யில் வெற்றி – தோல்வி அமை­யும். சில நேரங்­க­ளில் ஆளும் கட்சி வேட்­பா­ளர் தோற்­றுப் போகும் நிலை கூட ஏற்­ப­டும்.

இதற்கு ஒன்­றி­ரண்டு உதா­ர­ணங்­கள் கூட உண்டு. திரு­வண்­ணா­ம­லை­யில் அறு­ப­து­க­ளில் நடை­பெற்ற இடைத்­தேர்­த­லில், அன்­றைய முத­ல­மைச்­சர் காம­ரா­ஜர் உள்­ளிட்ட அமைச்­சர்­கள், முக்­கிய பிர­மு­கர்­கள் தீவிர பிர­சா­ரம் மேற்­கொண்­டும் காங்­கி­ரஸ் வேட்­பா­ளர் தோல்வி அடைந்து திமுக சார்­பில் போட்­டி­யிட்ட ப.உ.சண்­மு­கம் வெற்றி பெற்­றுள்­ளார்.

அதே போல, 1973–ம் ஆண்டு மே மாதம் நடை­பெற்ற திண்­டுக்­கல் நாடா­ளு­மன்ற இடைத்­தேர்­த­லில், மத்­திய ஆட்­சிக் கட்­சி­யான இந்­திரா காங்­கி­ரஸ், மாநில ஆட்­சிக் கட்­சி­யான திமுக, தமிழ் நாட்­டின் மிகப்­பெ­ரிய தலை­வ­ராக திகழ்ந்த காம­ரா­ஜர் தலை­மை­யி­லான ஸ்தாபன காங்­கி­ரஸ், ஆகிய மும்­முனை போட்­டியை எதிர்­கொண்ட, எம்.ஜி.ஆர். தலை­மை­யி­லான அண்ணா திமுக, கட்சி தொடங்­கிய ஆறே மாதத்­தில் இந்த தேர்­த­லைச் சந்­தித்து, மாபெ­ரும் வெற்­றியை ஈட்­டி­யது. இந்­திரா காங்­கி­ரஸ் வேட்­பா­ளர் கரு.சீமைச்­சாமி டெபா­சிட் இழந்­தார். கரு­ணா­நிதி தலை­மை­யி­லான திமுக ௩–ம் இடத்­துக்கு வந்­தது. சுமார் 10 ஆயி­ரம் ஓட்­டு­கள் குறை­வா­கப் பெற்­றி­ருந்­தால், அக்­கட்­சி­யின் வேட்­பா­ளர் பொன்.முத்­து­ரா­ம­லிங்­கம் டெபா­சிட் இழந்­தி­ருப்­பார். காம­ரா­ஜ­ரின் ஸ்தாபன காங்­கி­ரஸ் வேட்­பா­ளர் என்.எஸ்.வி. சித்­தன்­தான் இரண்­டாம் இடம் பிடித்­தார். இவரை விட சுமார்  ஒன்­றரை லட்­சம் ஓட்­டுக்­கள் வித்­தி­யா­சத்­தில் அண்ணா திமுக வேட்­பா­ளர் மாயத்­தே­வர் வெற்றி பெற்­றார். அந்த தேர்­த­லின், போது­தான் ‘இரட்டை இலை’ அறி­மு­கம் ஆனது.

எண்­ப­து­க­ளில் எம்.ஜி.ஆர். ஆட்­சிக்­கா­லத்­தில் நடை­பெற்ற நான்கு இடைத்­தேர்­த­லில் இரண்டு இடங்­க­ளில் அண்ணா திமு­க­வும், இரண்டு இடங்­க­ளில் திமு­க­வும் வெற்றி பெற்­றன. 1989–ல் நடை­பெற்ற மதுரை கிழக்கு – மருங்­கா­புரி ஆகிய இரண்டு சட்­ட­மன்­றத் தேர்­தல்­க­ளில், ஆட்­சிக் கட்­சி­யான திமுக.வை வீழ்த்தி அண்ணா திமுக வெற்றி பெற்­றது.

இப்­படி 90கள் வரை­யி­லும், ஆளும் கட்சி அல்­லது எதிர்க்­கட்சி வெற்றி வாய்ப்பை பெற்று வந்த நிலை­யில், 90களுக்­குப் பிறகு இடைத்­தேர்­த­லில் ஆளும் கட்­சியே வெற்றி பெறும் என்­கிற நிலை உரு­வா­கி­விட்­டது. என்ன விலை கொடுத்­தே­னும் ஆட்­சிக் கட்­சியை வெற்­றி­பெ­றச் செய்­வ­தில், அக்­கட்­சி­யின் நிர்­வா­கி­க­ளும், அமைச்­சர்­க­ளும் தீவி­ர­மாக களப்­ப­ணி­யாற்றி வரு­வதை காண முடி­யும்.

ஒரு இடைத்­தேர்­தல் அறி­விப்பு வந்­த­வு­டன், எதிர்க் கட்­சி­யி­னர் உடனே ஒரு அறிக்கை வெளி­யி­டு­வார்­கள். ‘இந்த இடைத்­தேர்­தல், ஆட்­சியை எடைப்­போ­டும் ‘எடைத்­தேர்­தல்’ ஆட்­சி­யின் மீது மக்­கள் தங்­க­ளுக்கு உள்ள அதி­ருப்­தியை, வெறுப்பை ஓட்டு சீட்டு மூலம் நிரூப்­பித்­தாக வேண்­டும்’ என்று வேண்­டு­கோள் வைப்­பார்­கள்.

இதை ஒரு சவா­லாக எடுத்­துக்­கொண்டு, ஆட்­சிக்­கட்சி களம் இறங்­கும். ‘மக்­க­ளின் ஆத­ரவு எங்­க­ளுக்­கு­தான்’ என்­பதை நிரூ­பித்தே தீரு­வோம், என்ற உறு­திப்­பாட்­டோடு அந்த தொகு­தியை முற்­று­கை­யிட்டு அனைத்து தேர்­தல் ‘யுக்­தி’­­க­ளை­யும் கையாண்டு மக்­க­ளின் மனதை ‘கவர்’ந்து கூடு­தல் ஓட்­டுக்­களை பெற்று வெற்றி பெற்று விடு­வார்­கள். இதற்­காக திமுக, அதி­முக ஆகிய இரண்டு கட்­சி­க­ளும் எத்­த­கைய பார்­மு­லாக்­களை கையாண்­டார்­கள் என்­பதை நம் எல்­லோ­ரை­யும் விட­வும், இடைத்­தேர்­தல்­கள் நடை­பெற்ற தொகுதி வாக்­கா­ளர்­கள் நன்கு அறி­வார்­கள்.

இந்த சூழ்­நி­லை­க­ளில்­தான் வேலூர் நாடா­ளு­மன்­றத்­துக்­கான தேர்­தல் நடை­பெ­று­கி­றது. நடை­பெற்று முடிந்த பொதுத் தேர்­த­லி­லேயே நடை­பெற்று முடிந்­தி­ருக்க வேண்­டிய இந்த தேர்­தல், சோதனை, பணப்­ப­ரி­வர்த்­தனை, கோடிக்­க­ணக்­கில் பணம் பறி­மு­தல் – என்­கிற கார­ணங்­க­ளால் ஒத்தி வைக்­கப்­பட்­டது. இப்­போது இந்த தேர்­தல் அறி­விக்­கப்­பட்­டு­விட்­டது.

திமுக சார்­பில், அக்­கட்­சி­யின் பொரு­ளா­ளர் துரை­மு­ரு­க­னின் மகன் கதிர்­ஆ­னந்த், அண்ணா திமுக சார்­பில் புதிய நீதிக்­கட்சி தலை­வர் ஏ.சி.சண்­மு­கம், இரட்டை இலை சின்­னத்­தில் போட்­டி­யி­டு­கி­றார். ஏற்­க­னவே, கடந்த பொதுத்­தேர்­த­லின் போதே இந்த இரு வேட்­பா­ளர்­க­ளும், ஓர­ளவு பிரச்­சார பணி­களை முடித்­து­விட்­ட­னர். இப்­போது மீண்­டும் விட்ட இடத்­தி­லி­ருந்து பிரச்­சார பணி­களை தொடங்­கி­விட்­ட­னர். இப்­போ­தும் சோதனை பணப்­ப­றி­மு­தல் தொடங்­கி­விட்­டது. திமுக பிர­மு­கர் ஏழு­மலை என்­ப­வ­ரது வீட்­டி­லி­ருந்து சுமார் 28 லட்­சம் ரூபாய் பறி­மு­தல் செய்­யப்­பட்­டுள்­ளது.  இது ரியல் எஸ்­டேட் மூலம் சொத்து பரி­மாற்­றத்­தில் வந்த தொகை என ஏழு­மலை தரப்­பில் சொல்­லப்­ப­டு­கி­றது.

அது மட்­டு­மல்ல, வேலூர் தொகுதி முழு­வ­தும் வரு­மான வரித்­துறை, மத்­திய, மாநில உள­வுத்­துறை, சி.பி.ஐ. புல­னாய்­வுக்­குழு, பறக்­கும்­படை, சிறப்பு பார்­வை­யா­ளர்­கள் என நூற்­றுக்­க­ணக்­கா­னோர் குவிக்­கப்­பட்­டுள்­ள­னர். பணப்­பட்­டு­வாடா, பரி­சுப் பட்­டு­வாடா ஆகி­ய­வற்றை தடுப்­ப­தற்­காக மட்­டுமே மாவட்ட நிர்­வா­கம் அமைத்த 58 குழுக்­க­ளோடு பறக்­கும் படை, கண்­கா­ணிப்பு குழு என 108 குழுக்­கள் வேலூ­ரில் உலா வரு­கி­ற­தாம்.

திமுக தரப்­பில், சட்­ட­மன்­றத் தொகுதி வாரி­யாக முன்­னாள் அமைச்­சர்­கள், தலை­மைக் கழக நிர்­வா­கி­கள், வழக்­க­றி­ஞர்­கள் குழு என நிய­மித்து அவர்­கள் தீவி­ர­மாக களப்­ப­ணியை தொடங்­கி­விட்­ட­னர். திமுக வேட்­பா­ளர்  வைட்­ட­மின் ‘ப’ விஷ­யத்­தில் கொஞ்­சம் கறா­ராக இருப்­ப­தாக திமுக தரப்­பில் சொல்­கின்­ற­னர். அதி­முக சார்­பில் போட்­டி­யி­டும் ஏ.சி.சண்­மு­கம் கொஞ்­சம்  தாரா­ள­மாக (!)வே நடந்து கொள்­வ­தால் ஆளும் கட்­சி­யி­ன­ரும், பா.ஜ., பாமக, தேமு­திக   உள்­ளிட்ட தோழ­மைக்­கட்­சி­யி­ன­ரும் சுறு­சு­றுப்­பாக பிர­சா­ரம் மேற்­கொள்­ளத் தொடங்­கி­விட்­ட­னர். 6 சட்­ட­மன்­றத் தொகு­தி­க­ளி­லும் ஊழி­யர் கூட்­டத்தை நடத்தி தொண்­டர்­களை உற்­சா­கப்­ப­டுத்­தி­விட்ட ஏ.சி.சண்­மு­கம், முத­ல­மைச்­சர், துணை முத­ல­மைச்­சர் உள்­ளிட்ட அமைச்­சர் பட்­டா­ளம் களம் இறங்கி விட்­டால் ‘என் வெற்றி உறுதி’ என்ற மன­நி­லை­யில் இருக்­கி­றா­ராம்.

நடை­பெற்று முடிந்த பொதுத் தேர்­த­லில், 38ல் 37ஐ வென்று விட்ட திமுக.வினர் அதன் தொடர்ச்­சி­யாக இந்த வெற்­றி­ யும் உறுதி என்ற நம்­பிக்­கை­யில் உள்­ள­னர். வேலூ­ரில் யாருக்கு வெற்றி....? மக்­கள் தீர்ப்பு எப்­படி இருக்­கும். பொறுத்து இருப்­போம் ரிசல்ட் வரட்­டும்!