துரை கருணா எழுதும் ‘கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்..!’ – 38

19-07-2019 03:29 PM

சுதந்திர போராட்ட தியாகி எஸ்.ஏ.சுவாமிநாத அய்யர்!

இந்­திய தேசி­யக் காங்­கி­ரஸ் கட்சி தொடங்­கப்­பட்ட (௧௮­௮௫) முதல் கூட்­டத்­தில் பங்­கேற்­ற­வ­ரும், பிரம்­ம­ஞான சபை­யில் பணி­யாற்­றி­ய­வ­ரும், உப்­புச் சத்­தி­யா­கி­ர­கம் உள்­ளிட்ட பல்­வேறு சுதந்­திர போராட்­டங்­க­ளில் தீவி­ர­மாக பங்­கேற்­ற­வ­ரு­மான எஸ்.ஏ. சுவா­மி­நாத அய்­யர் பற்­றிய வர­லாற்­றுக் குறிப்­பு­களை இந்த வாரம் பார்ப்­போம்.

தஞ்­சா­வூர் சாமி­நாத அய்­யர் என­வும், வக்­கீல் எஸ்.ஏ.எஸ். என­வும் அழைக்­கப்­பெற்ற செரு­குடி அனந்­த­ராம சுவா­மி­நாத அய்­யர் தஞ்சை மாவட்­டம் கபிஸ்­த­லம் பகு­தியை சேர்ந்­த­வர்.

பள்­ளிக் கல்­வியை கபிஸ்­த­லத்­தில் இருந்த ‘ஆங்­கில வெர்­ண­கு­லர்’ பள்­ளி­யில் பயின்­றார். பின்­னர் கும்­ப­கோ­ணம் அரசு கல்­லூ­ரி­யில் சேர்ந்து, பிரிட்­டிஷ் காலத்து எப்.ஏ எனப்­ப­டும் இன்­டர் மீடி­யட் படிப்பை முடித்­தார்.

அதன் பிறகு சென்னை வந்து உயர் பட்­டப்­ப­டிப்பை முடித்து, சட்ட கல்­லூ­ரி­யில் 1874ல் சேர்ந்து சட்­டப்­ப­டிப்­பை­யும் முடித்து வழக்­க­றி­ஞர் ஆனார். கல்­லூரி காலங்­க­ளி­லேயே அவ்­வப்­போது நடை­பெ­றும் சுதந்­தி­ரப் போராட்­டங்­க­ளி­லும் ஈடு­பட்­டுள்­ளார். பின்­னர் நாகப்­பட்­டி­னத்­தில் அர­சாங்க வக்­கீ­லாக நிய­மிக்­கப்­பட்ட சுவா­மி­நாத அய்­யர், அந்­ந­க­ரின் நகர சபை உறுப்­பி­ன­ரா­க­வும் தேர்வு பெற்று பணி­யாற்­றி­னார்.

அந்த காலத்­தில், ஊராட்சி மற்­றும் நகர் மன்­றங்­கள் தொகு­தி­யி­லி­ருந்து சென்னை மாகாண சட்­ட­ச­பைக்கு உறுப்­பி­னர்­கள் தேர்ந்­தெ­டுக்­கப்­ப­டு­வார்­கள். இந்த தொகு­திக்­கான தேர்­த­லில் போட்­டி­யிட்ட அய்­யர் தோல்வி அடைந்­தார். இவரை எதிர்த்து நின்ற திருச்­சி­ராப்­பள்ளி கல்­யாண சுந்­த­ரம் அய்­யர் வெற்றி பெற்று சென்னை சட்­ட­ச­பைக்கு சென்­றுள்­ளார்.

1883–க்கும், 1885க்கும் இடைப்­பட்ட கால­கட்­டத்­தில் இவர் தஞ்­சா­வூ­ரில் பப்­ளிக் பிரா­சிக்­யூட்­ட­ராக நிய­மிக்­கப்­பட்டு பணி­யாற்­றி­னார்.

1892–ல் தஞ்­சா­வூர் மாவட்ட மிரா­சு­தா­ரர்­கள், அப்­போது பிரிட்­டிஷ் அரசு விதித்த நில­வரி அதி­க­ரிப்பை எதிர்த்­துப் போரா­டி­னார்­கள். அந்த போராட்­டத்தை முன்­னின்று நடத்­தி­ய­வர் சுவா­மி­நாத அய்­யர்.

19–ம் நூற்­றாண்­டில் சுதந்­திர போராட்­டத்­தில் ஈடு­பட்ட பலர் மித­வாத காங்­கி­ரஸ் கட்­சி­யி­ன­ரா­கவே இருந்­த­னர். பிரிட்­டிஷ் அதி­கா­ரி­க­ளுக்கு மனுப்­போட்­டுச் சலு­கை­கள் பெறும் செயல்­கள்­தான் அப்­போது நடை­பெற்­றன. பால கங்­கா­தர  தில­கர் காலத்­திற்­குப் பிற­கு­தான் ‘சுதந்­தி­ரம் எனது பிறப்­பு­ரிமை’ எனக்­கு­ரல் எழுப்பி, காங்­கி­ரஸ் தீவி­ர­வா­தக் குழு­வி­னர் பலர் புறப்­பட்­ட­னர்.

காங்­கி­ரஸ் பேரி­யக்­கத்தை தொடங்க வேண்­டும் என 1885–ல் மும்பை நக­ரில் நடை­பெற்ற முதல் கூட்­டத்­தில், சுவா­மி­நாத அய்­ய­ரும் பங்­கேற்­றுள்­ளார்.

காங்­கி­ரஸ் இயக்­கத்­தில் முழு ஈடு­பாட்­டோடு இருந்த சுவா­மி­நாத அய்­யர், பிரம்ம ஞான சபை­யின் மீது ஈர்ப்­புக்­கொண்டு, அதில் தம்மை இணைத்­துக்­கொண்டு பணி­யாற்­றி­னார். ‘தியா­ச­பி­கல் சொசைட்டி’ என்ற பெய­ரில் செயல்­பட்டு வந்த இந்த சபை­யில் மிகுந்த ஆர்­வம் கொண்டு, இந்து மதத்­தின் தேவை­யற்ற கச­டு­களை நீக்கி உண்­மை­யான பிரம்ம ஞானத்தை பரப்­பும் பணி­யில் தீவி­ர­மாக ஈடு­பட்­டார்.

தஞ்சை மற்­றும் நாக­பட்­டி­னம் பகு­தி­யின் பிரம்­ம­ஞான சபை­யின் செய­லா­ளர் பொறுப்­பை­யும் சுவா­மி­நாத அய்­யர் பொறுப்­பேற்று திறம்­பட சேவை செய்து வந்­தார். ஆரம்­பத்­தில் காங்­கி­ரஸ் இயக்­கம் தோற்­று­விக்­கப்­பட்ட போது, தஞ்­சை­யில் அதன் மாவட்ட தலை­வர் பொறுப்பை ஏற்­றும் பணி­யாற்­றி­யுள்­ளார்.

மும்­பை­யில் நடை­பெற்ற காங்­கி­ரஸ் இயக்க முதல் கூட்­டத்­தி­லேயே பிரிட்­டிஷ் அரசு உப்­புக்கு வரி விதித்­ததை எதிர்த்து கடு­மை­யாக உரை நிகழ்த்தி உள்­ளார்.

அதன் பிறகு சுமார் ௪௦ ஆண்­டு­க­ளுக்கு பிற­கு­தான் மகாத்மா காந்தி உப்­புச் சத்­தி­யாக்­கி­ர­கத்தை நடத்­தி­யுள்­ளார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. சுங்­க­வரி விதிப்பு, இந்­தி­யா­வு­டன் பர்மா இணைப்­பது உள்­ளிட்ட பல்­வேறு பிரச்­னை­க­ளி­லும் பிரிட்­டிஷ் அர­சாங்­கத்­துக்கு எதி­ராக கடு­மை­யாக எதிர்ப்­புத் தெரி­வித்து உரை நிகழ்த்­தி­யுள்­ளார்.

தஞ்சை மாவட்­டத்­தின் முதல் காங்­கி­ரஸ் பிர­மு­கர் என்ற பெயர் பெற்ற சுவா­மி­நாத அய்­யர் கர்­நா­டக இசை­யி­லும் ஆர்­வம் கொண்­ட­வ­ராக இருந்து பல இசை நிகழ்ச்­சி­க­ளை­யும் நடத்­தி­

யி­ருக்­கி­றார்.                     ***


தியாகத் தொண்டர் ‘கோடை’ அழகர்சாமி

சுதந்திர போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவாவின் பிரதம சீடராக திகழ்ந்து, பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று சிறைவாசம் அனுபவித்த கோடை அழகர்சாமி என்ற கொடைக்கானல் எஸ்பிவி அழகர் சாமி பற்றிய சில விவரங்களை காண்போம்.

இப்போதைய திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள பண்ணைக்காடு என்ற கிராமத்தை சேர்ந்தவர் அழகர்சாமி. உள்ளூரில் மர வியாபாரம் செய்து வந்த இவர், இளம் வயது முதல் நாட்டின் விடுதலைக்காக பாடுபட வேண்டும் என உறுதி எடுத்து 1931–ம் ஆண்டில் தனது பண்ணைக்காடு கிராமத்தில் காங்கிரஸ் கட்சி கிளையை தொடங்கி மக்களுக்காக பணியாற்றி வந்தார். இவருடைய தேசப்பற்று, மற்றும் கட்சிக்காக உழைக்கும் திறனை அறிந்து கொடைக்கானல் தாலுகா காங்கிரஸ் கமிட்டியின் பொருளாளராகவும், பின்னர் செயலாளராகவும் இவரை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் நியமித்தனர். இதையடுத்து அந்த பகுதியில் மாவட்ட, வட்டார அளவிலான காங்கிரஸ் மாநாடுகளை நடத்தி, பல முன்னணித் தலைவர்களை அழைத்து வந்து பேசச்செய்தார்.

பின்னர் மதுரை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியில் விவசாயப் பிரிவு தலைவராக பொறுப்பேற்ற அழகர்சாமி, அந்த பகுதியிலுள்ள நூற்றுக்கணக்கான விவசாயிகளை காங்கிரஸ் கட்சியில் இணைத்து சுதந்திரப் போராட்டத்திலும் பங்கேற்க செய்தார்.

1937–ம் ஆண்டு, சென்னை மாகாண சட்ட சபைக்கு தேர்தல் நடைபெற்றபோது, காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு ‘மஞ்சள் பெட்டி’ சின்னம் ஒதுக்கப்பட்டது. அப்போது, கொடைக்கானல் மலைப்பகுதியில் கிராமம், கிராமமாக சென்று ‘மங்களகரமான மஞ்சள்’ பெட்டிக்கு வாக்களியுங்கள் எனப் பிரச்சாரம் செய்து, காங்கிரசின் வெற்றிக்காக அரும்பாடுபட்டுள்ளார். அந்த கால கட்டத்தில் வத்தலக்குண்டு நகரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் மாநில மாநாட்டுக்காக அழகர்சாமி அரும்பாடுபட்டுள்ளதை தலைவர்கள் பெரிதும் பாராட்டியுள்ளனர்.

1941–ம் ஆண்டு தனிநபர் சத்தியாகிரகம் நடைபெற்ற போது, கொடைக்கானல் பகுதியில் ஊர் ஊராகச் சென்று, அங்கு பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி சத்யாகிரகம் செய்தார். அது மலைப்பகுதி என்பதால் போலீசார் இவரை கைது செய்யவில்லை.

உடனே, கும்பகோணம் கிளம்பி சென்ற அழகர்சாமி, அங்கு சத்தியாகிரகத்தில் பங்கேற்று யுத்த எதிர்ப்புக் கோஷங்களை எழுப்பியதால், போலீசார் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர். சில நாட்களுக்கு பிறகு விடுதலையான அவர் அங்கிருந்து திருவையாறு சென்று, அங்கும் பிரிட்டிஷாருக்கு எதிராக கோஷம் எழுப்பி கைதானார். மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட அழகர்சாமி ௧௫ நாட்களில் விடுதலை ஆனதும், திரும்பவும் கும்பகோணம் சென்று மறியலில் ஈடுபட்டு அதனால் கைதாகி திருச்சி சிறையில் இரண்டு மாதம் அடைக்கப்பட்டார்.

ஊர், ஊராக சென்று மறியல், ஆர்ப்பாட்டம், சத்யாகிரகம் என பல போராட்டங்களில்  பங்கேற்று அடிக்கடி சிறைக்குபோன அழகர்சாமி, மீண்டும் கொடைக்கானல் பகுதிக்கு சென்று பிரிட்டிஷருக்கு எதிரான தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

இவரது நடவடிக்கைகளை கண்காணித்த பிரிட்டிஷ் காவல்துறை 1941 ஜூலை மாதம் அவரை கைது செய்தது. விசாரணைக்கு பிறகு ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டது.  பிரபல விடுதலை வீரர் சுப்பிரமணிய சிவா, எப்போதெல்லாம் வத்தலக்குண்டு பகுதிக்கு வருகிறாரோ, அப்போதெல்லாம் அழகர்சாமி அவருக்கு தொண்டு செய்து வந்தார். சிவாவை தமது அரசியல் குருநாதராகவே கருதி செயல்பட்டார். சிவாவுக்கு கிடைத்த பல தேசியத் தொண்டர்களில் அழகர்சாமி முதன்மையானவராக இருந்துள்ளார். நாட்டுக்கு உழைக்கும் நல்ல பண்பும், தேசியச் சிந்தனையும் கொண்ட கோடை எஸ்.பி.வி. அழகர்சாமி போன்றோரின் தியாகம் போற்றப்பட வேண்டும்.