கால்நடை கடத்தல்: இறைச்சிக்கு தட்டுப்பாடு!

19-07-2019 03:14 PM

மத்­திய அமைச்­சர் முக்­தார் அப்­பாஸ் நக்வி, 2015ல் மாட்­டி­றைச்சி சாப்­பி­டு­ப­வர்­கள் பாகிஸ்­தா­னுக்கு செல்­லுங்­கள் என்று கூறி­னார். இதற்கு பதி­லடி கொடுக்­கும் வகை­யில் மற்­றொரு மத்­திய அமைச்­சர் கிரண் ரிஜிஜூ, “நான் மாட்­டி­றைச்சி சாப்­பி­டு­ப­வன். நான் அரு­ணா­ச­லப்­பி­ர­தே­சத்­தைச் சேர்ந்­த­வன். யாரா­வது நான் மாட்­டி­றைச்சி சாப்­பி­டு­வதை தடை செய்ய முடி­யுமா? என்று பதி­லடி கொடுத்­தார். இந்த சம்­ப­வம் நடந்து நான்கு ஆண்­டு­க­ளுக்கு பிறகு வட கிழக்கு மாநி­லங்­க­ளில் மாட்­டி­றைச்­சிக்கு தட்­டுப்­பாடு ஏற்­பட்­டுள்­ளது. மற்ற மாநி­லங்­க­ளில் ஆட்­சி­யில் உள்ள பார­திய ஜனதா, பசுவை கொல்­வ­தற்கு தடை விதித்­துள்­ளது போல், வட கிழக்கு மாநி­லங்­க­ளில் எவ்­வித தடை­யும் இல்லை. இந்த மாநி­லங்­க­ளில் இருந்து அண்டை நாடான வங்­காள தேசத்­திற்கு கால்­ந­டை­கள் கடத்­தப்­ப­டு­வ­தால், வட கிழக்கு மாநில மக்­க­ளின் முக்­கிய உண­வான மாட்­டி­றைச்­சிக்கு தட்­டுப்­பாடு ஏற்­பட்­டுள்­ளது.

வட கிழக்கு மாநி­லங்­க­ளில் குறிப்­பாக கிறிஸ்­த­வர்­கள் அதி­கம் உள்ள மேக­லாயா, மிஜோ­ரம், நாக­லாந்து ஆகிய மாநி­லங்­க­ளில் கிட்­டத்­தட்ட எல்லா பழங்­குடி மக்­க­ளும், அஸ்­ஸாம் மாநி­லத்­தில் முஸ்­லீம்­க­ளும் மாட்­டி­றைச்­சியை முக்­கிய உண­வுப் பொரு­ளாக சாப்­பி­டு­கின்­ற­னர். வட கிழக்கு மாநி­லங்­க­ளுக்கு தேவை­யான 70 சத­வி­கித மாட்­டி­றைச்­சிக்கு, உத்­த­ர­பி­ர­தே­சம், பீகார், ராஜஸ்­தான், குஜ­ராத் ஆகிய மாநி­லங்­க­ளில் இருந்து கால்­ந­டை­கள் கொண்­டு­வ­ரப்­ப­டு­கி­றது. மீதம் 30 சத­வி­கி­தம் உள்­ளூ­ரி­லேயே கிடைக்­கின்­றன. எட்டு வட கிழக்கு மாநி­லங்­க­ளுக்கு தின­சரி 1 லட்­சத்து 50 ஆயி­ரம் கிலோ மாட்­டி­றைச்சி தேவை.

இந்த பிராந்­தி­யத்­தில் மாட்­டி­றைச்சி மத­ரீ­தி­யாக தடை செய்­யப்­பட்­ட­தாக இல்லை. இந்­துக்­கள் பெரும்­பான்­மை­யாக உள்ள அஸ்­ஸாம், திரி­புரா ஆகிய மாநி­லங்­க­ளில் இறைச்­சிக்­காக கால்­நடை வர்த்­த­கத்­தில் ஈடு­பட்­டுள்ள வியா­பா­ரி­கள், மாட்­டி­றைச்சி கடைக்­கா­ரர்­கள் மீது, இதை எதிர்க்­கும் வல­து­சாரி கருத்­தோட்­டம் உள்­ள­வர்­கள் தாக்­கு­தல் நடத்­து­கின்­ற­னர். மணிப்­பூர் மாநி­லத்­தில் பெரும்­பான்­மை­யாக வைணவ இந்­துக்­கள் வாழ்­கின்­ற­னர். இருப்­பி­னும் இந்த மாநில முதல்­வர் பா.ஜ,.வைச் சேர்ந்த என்.பைரன் சிங், தனது அர­சுக்கு மாட்­டி­றைச்­சியை தடை செய்­யும் எண்­ணம் இல்லை என்று கூறி­யுள்­ளார்.

வட கிழக்கு மாநி­லங்­க­ளைச் சேர்ந்த இறைச்சி வியா­பா­ரி­கள், இந்த பிராந்­தி­யத்­தில் மாட்­டி­றைச்­சிக்கு அதிக தேவை இருந்­தும் கூட, அண்டை நாடான வங்­கா­ள­தே­சத்­திற்கு சட்­ட­வி­ரோ­த­மாக கால்­ந­டை­கள் கடத்­தப்­ப­டு­கின்­றன. அண்டை நாட்­டில் இரு­ம­டங்கு விலை கிடைக்­கின்­றது என்­கின்­ற­னர்.

அகில இந்­திய கால்­நடை வர்த்­த­கம் மற்­றும் போக்­கு­வ­ரத்து நிறு­வ­னங்­கள் சங்க தலை­வர் அருண் லிங்டோ, எங்­க­ளுக்கு இறைச்­சிக்­காக மாடு­கள் கிடைப்­பது கஷ்­ட­மாக உள்­ளது. எங்­க­ளுக்கு வய­தான, நோய்­வாய்ப்­பட்ட, பன­வீ­ன­மான மாடு­களை கிடைக்­கின்­றன. திட­காத்­தி­ர­மா­க­உள்ள இளம் மாடு­கள் அஸ்­ஸாம் வழி­யாக வங்­கா­ள­தே­சத்­திற்கு கடத்­தப்­ப­டு­கின்­றன என்று தெரி­வித்­தார். அஸ்­ஸாம் மாநி­லத்­தில் 262 கி.மீட்­டர் தூரத்­திற்கு வங்­கா­ள­தேச எல்லை உள்­ளது.இதில் பெரும்­பா­லான எல்லை பகு­தி­கள் குறு­கிய, நதியை ஒட்­டிய பகு­தி­கள்.

தற்­போது ஏற்­பட்­டுள்ள மாட்­டி­றைச்சி தட்­டுப்­பாட்­டிற்கு கார­ணம், அஸ்­ஸாம் மாநில அரசு கால்­நடை வர்த்­த­கத்தி சட்­ட­பூர்­வ­மாக நடத்­தும் வகை­யில் ஒழுங்­கு­ப­டுத்­தாதே என்று வியா­பா­ரி­கள் கூறு­கின்­ற­னர். “நாங்­கள் வங்­கா­ள­தேச எல்லை பகு­தி­யில் சட்­ட­வி­ரோ­த­மாக நடக்­கும் கால்­நடை வர்த்­த­கத்தை தடை செய்ய வேண்­டும் என்­கின்­றோம். அதே நேரத்­தில் அஸ்­ஸாம் அரசு சட்­ட­பூர்­வ­மாக நடக்­கும் கால்­நடை வர்த்­த­கம், போக்­கு­வ­ரத்­திற்கு இடைஞ்­சல் ஏற்­ப­டுத்த கூடாது” என்று  அருண் லிங்டோ தெரி­வித்­தார்.

சமீ­பத்­தில் அஸ்­ஸாம் அரசு வங்­கா­ள­தே­சத்­திற்கு கால்­ந­டை­களை கடத்­து­வதை தடுக்க உத்­த­ர­பி­ர­தே­சம், பீகா­ரில் இருந்து கால்­ந­டை­களை கொண்டு வரு­வ­தற்கு தற்­கா­லி­க­மாக தடை விதித்­தது. இது வட கிழக்கு மாநி­லங்­க­ளில் மாட்­டி­றைச்சி தட்­டுப்­பாடு ஏற்­பட கார­ண­மாக அமைந்­தது.

அகில இந்­திய கால்­நடை வர்த்­த­கம் மற்­றும் போக்­கு­வ­ரத்து நிறு­வ­னங்­கள் சங்க பொதுச் செய­லா­ளர் முன்னா சாகியா கூறு­கை­யில், வங்­கா­ள­தே­சத்­திற்கு கால்­ந­டை­களை கடத்­த­லில் ஈடு­பட்­டுள்­ள­வர்­கள் உள்­ளூர் வியா­பா­ரி­க­ளுக்கு ஆசை காண்­பித்து வியா­பா­ரம் செய்­கின்­ற­னர். இதற்கு கார­ணம் உள்­ளூர் வியா­பா­ரி­கள், மக்­கள் மத்­தி­யில் போதிய விழிப்­பு­ணர்வு இல்­லா­ததே. அர­சும் விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்த தவ­றி­விட்­டது. இத­னால் சட்­ட­வி­ரோ­த­மாக கால்­ந­டை­களை கடத்­து­ப­வர்­கள் பல கோடிக்கு வியா­பா­ரம் செய்­கின்­ற­னர். ஆனால் சட்­ட­பூர்­வ­மாக வியா­பா­ரம் செய்­ப­வர்­கள் கஷ்­டப்­ப­டு­கின்­ற­னர். இதில் பாதிக்­கப்­ப­டு­வது மாட்­டி­றைச்சி உண்­ணும் மக்­களே. மாட்­டி­றைச்சி கிடைக்­கா­விட்­டால், அர­சுக்கு வரு­வாய் இழப்பு ஏற்­ப­டும்.

நாங்­கள் சட்­ட­வி­ரோ­த­மாக கால்­ந­டை­களை கடத்­து­வதை தடுக்க அரசு எடுக்­கும் நட­வ­டிக்­கை­க­ளுக்கு உறு­து­ணை­யாக இருப்­போம். அதே நேரத்­தில் சட்­ட­பூர்­வ­மாக நடக்­கும் வர்த்­த­கத்­திற்கு தடை விதிக்க கூடாது” என்று அவர் கூறி­னார். இந்த சங்­கத்­தைச் சேர்ந்­த­வர்­கள் வங்­கா­ள­தே­சத்­திற்கு கால்­நடை ஏற்­று­ம­தியை சட்­ட­பூர்­வ­மாக ஆக்க வேண்­டும். இதற்கு வரி­களை விதிப்­ப­தால் அர­சுக்கு வரு­வாய் கிடைக்­கும் என்று கூறு­கின்­ற­னர்.  

சென்ற மாதம் அஸ்­ஸாம் போலீஸ், பீகா­ரில் உள்ள கோபால்­கஞ்ச் மாவட்­டத்­தில் இருந்து வங்­கா­ள­தே­சத்­திற்கு கால்­ந­டை­களை கடத்­த­லில் ஈடு­பட்­டுள்ள கடத்­தல் மன்­னன் முக­மது சார்­ப­ராஜ்சை கைது செய்­தது. அஸ்­ஸாம் போலீஸ் டைரக்­டர் ஜென­ரல் குலா­தர் சாகியா, “அஸ்­ஸாம் மாநி­லத்­தில் எல்லா மாவட்­டங்­க­ளி­லும் எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளன. வங்­கா­ள­தே­சத்­திற்கு கால்­ந­டை­களை கடத்­து­வதை தடுக்க சிறப்பு குழுக்­க­ளும் அமைக்­கப்­பட்­டுள்­ளன” என்று தெரி­வித்­தார். கவு­காத்தி நகர போலீஸ் கமி­ஷ­னர் தீபக் குமார், இந்த கால்­நடை கடத்­த­லில் முக்­கிய புள்ளி முக­மது சார்­ப­ராஜ். இந்த கடத்­த­லில் ஈடு­பட்­டுள்ள மற்­ற­வர்­க­ளை­யும் பிடிக்­கும் நட­வ­டிக்­கையை எடுத்து வரு­கின்­றோம்” என்று தெரி­வித்­தார்.

சங்­ப­ரி­வா­ரங்­க­ளும் அண்டை நாட்­டிற்கு கால்­ந­டை­களை கடத்­து­வதை தடுக்க கண்­டிப்­பான நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்­டும் என்று வலி­யு­றுத்­து­கின்­றன. இது நம்­பிக்கை சம்­பந்­தப்­பட்ட விஷ­யம் என்­கின்­றன. ஆர்.எஸ்.எஸ் அமைப்­பைச் சேர்ந்த சம்­பார்கா பிர­முக் ரஞ்­சீவ் குமார் சர்மா கூறு­கை­யில், “அஸ்­ஸாம் மாநி­லத்­தில் பா.ஜ., அரசு அமைந்த பிறகு, கால்­நடை கடத்­தல் குறைந்­தி­ருப்­ப­தாக கரு­து­கின்­றேன். இதை முழு­மை­யாக தடை செய்ய வேண்­டும் என்று கேட்­டுக் கொள்­கின்­றேன். மக்­கள் மத்­தி­யில் விழிப்­பு­ணர்ச்­சி­யும் மிக அவ­சி­யம். சட்­ட­வி­ரோத நட­வ­டிக்­கையை (வர்த்­த­கம்) அனு­ம­திக்க கூடாது” என்று தெரி­வித்­தார்.

மாட்­டி­றைச்சி சாப்­பி­டு­வது பற்றி ரஞ்­சீவ் குமார் சர்மா கூறு­கை­யில், இந்­துக்­கள் பசுவை வணக்­கு­கின்­ற­னர். இதன் இறைச்­சியை சாப்­பி­டு­வது தவ­றா­னது. அஸ்­ஸாம் மாநி­லத்­தில் பசுவை வணங்­கு­கின்­றோம். பசுவை கொல்­வது என்ற பேச்­சிற்கே இட­மில்லை. நாங்­கள் பசுவை கொல்­வதை எதிர்க்­கின்­றோம். இதை ஒவ்­வொ­ரு­வ­ரும் மதிக்க வேண்­டும். அதே நேரத்­தில் மாட்­டி­றைச்சி சாப்­பி­டு­ப­வர்­கள் மீது தாக்­கு­தல் நடத்­து­வ­தை­யும், அவர்­களை கொல்­வ­தை­யும் எதிர்க்­கின்­றோம்” என்று அவர் கூறி­னார்.

நன்றி: அவுட்­லுக் வார இத­ழில்

அப்­துல் கனி.