சாதனை புரிந்த தமிழ் படங்கள் – 401– எஸ்.கணேஷ்

16-07-2019 04:34 PM

நடி­கர்­கள் : உத­ய­நிதி ஸ்டாலின், ஹன்­ஸிகா மோத்­வானி, சந்­தா­னம், சரண்யா பொன்­வண்­ணன், ஷாயாஜி ஷிண்டே, மது­மிதா, உமா பத்­ம­நா­பன் மற்­றும் பலர்.

இசை : ஹாரிஸ் ஜெய­ராஜ், ஒளிப்­ப­திவு : பால­சுப்­பி­ர­ம­ணி­யம், எடிட்­டிங் : விவேக் ஹர்­ஷன், தயா­ரிப்பு : ரெட் ஜயண்ட் மூவீஸ், திரைக்­கதை, இயக்­கம் : எம். ராஜேஷ்.

ஒரு காலைப்­பொ­ழு­தில் சர­வ­ண­னுக்கு (உத­ய­நிதி ஸ்டாலின்) தனது முன்­னாள் காத­லி­யான மீரா­வின் (ஹன்­ஸிகா மோத்­வானி) கல்­யா­ணப் பத்­தி­ரிகை கிடைக்க தனது உயிர் நண்பன் பார்த்­த­சா­ர­தி­யு­டன் (சந்­தா­னம்) பாண்­டிச்­சே­ரிக்கு கிளம்­பு­கி­றார். போகும் வழி­யில் கடந்த காலத்தை நினைத்­துப் பார்க்­கி­றார். கல்­லூ­ரிப் பேரா­சி­ரி­ய­ராக இருக்­கும் சர­வ­ண­னின் தந்தை வர­த­ரா­ஜன் கல்­விக்கு முக்­கி­யத்­து­வம் அளிப்­ப­வர். பட்­டப்­ப­டிப்பு படிக்­கா­மல் தன்னை ஏமாற்­றிய மனைவி செண்­ப­கத்­தி­டம் இருந்து வில­கியே இருக்­கி­றார். நண்பர்­கள் இரு­வ­ரும் குறிக்­கோள் இல்­லா­மல் ஊர் சுற்­றிக்­கொண்­டி­ருக்­கும் நேரத்­தில், டிரா­பிக்­கில் பார்க்­கும் மீரா­வி­டம் முதல் பார்­வை­யி­லேயே காத­லில் விழு­கி­றார் சர­வ­ணன். விமான பணிப்­பெண்­ணுக்­கான பயிற்­சி­யில் இருக்­கும் மீராவை பின்­தொ­ட­ரும் சர­வ­ணனை வீட்­டுக்கு அழைக்­கி­றார் மீரா. தனது தந்­தை­யான டிசிபி மகேந்­தி­ர­கு­மார் (ஷாயாஜி ஷிண்டே) பற்றி கூறி எச்­ச­ரிக்­கும் மீரா, தனக்கு காத­ல­னா­வ­தற்­கான தகு­தி­களை அடுக்­கு­வ­தோடு, பார்த்­த­வு­ட­னான நட்­பை­யும் வெறுக்­கி­றார்.

மீரா­வுக்­காக பார்த்­தா­வு­ட­னான நட்பை முறிக்­கும் சர­வ­ணன் தங்­க­ளது காத­லில் பிரச்னை ஏற்­ப­டுத்­திய பார்த்­தா­வின் காத­லை­யும் பிரிக்­கி­றான். பின்­னர் மனம் திருந்தி பார்த்­தா­வின் காத­லுக்கு உத­வும் சர­வ­ண­னுக்­காக, பார்த்­தா­வும் மீரா பணிப்­பெண்­ணாக செல்­லும் விமா­னத்­தில் சர­வ­ண­னு­டன் செல்­கி­றான். மனம் மாறும் மீரா­வும் சர­வ­ண­னின் காதலை ஏற்­றுக் கொள்­கி­றார். சில மாதங்­க­ளுக்­குப் பிறகு, நண்பர்­கள் குடி­போ­தை­யில் இருக்­கும் நேரத்­தில் மீரா போனில் அழைக்க நண்ப­னி­டம் தனது காதல் ஒரு நாட­கம் என்று விளை­யாட்­டாக பேசும் சர­வ­ண­னின் பேச்சை கேட்­கும் மீரா தனது காதலை முறித்­துக் கொள்­கி­றார்.

தற்­போது பெற்­றோ­ரின் ஆசி­யு­டன் பாண்­டிச்­சே­ரிக்கு வந்­தி­றங்­கும் சர­வ­ண­னும், பார்த்­தா­வும் போதை­யில் திரு­மண மண்­ட­பத்­தில் நுழை­கி­றார்­கள். மண­மக்­களை வாழ்த்­திப் பேசும் சர­வ­ணன் தங்­க­ளது காதல் கதையை காமிக் கதை­யா­கக் கூறி கண்­க­லங்­கு­கி­றார். சர­வ­ண­னுக்­காக மனம் இரங்­கும் மீரா­வால் தந்­தையை மீற முடி­யா­மல் போகி­றது. தாலி கட்­டும் நேரத்­தில் மண்­ட­பத்­திற்கு வந்து இறங்­கும் லோக்­கல் தாதா ரஜி­னி­ மு­ரு­கன் (ஆர்யா – கவுர­வத்­தோற்­றம்) தன்­னோடு வந்­தி­ருக்­கும் கர்ப்­பினி பெண்­ணிற்­காக மண­ம­க­னி­டம் நியா­யம் கேட்­கி­றார். ரஜி­னி­ மு­ரு­க­னின் அறி­வு­ரை­யால் மண­ம­கன் தனது காத­லியை ஏற்­றுக்­கொள்­கி­றார். திரு­மண மண்­ட­பத்­தில் இருந்து வெளி­யே­றும் நண்பர்­க­ளி­டம் வந்து சேரும் மீரா­வும், சர­வ­ண­னும் ஒன்றுசேர்­கி­றார்­கள்.Trending Now: