மொத்தவிலைக் குறியீட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட பண வீக்கம் சரிவு

15-07-2019 02:48 PM

புது டில்லி,

  மொத்த விலை குறியீட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட பணவீக்கம் 2019ம் ஆண்டு ஜூன் மாதத்தில் 2.02 சதவீதமாக குறைந்துள்ளது. இது தொடர்ந்து இரண்டாவது மாதமாக குறைந்துள்ளது. எரிபொருட்கள், மற்றும் காய்கறி பொருட்கள் விலை குறைந்ததே காரணமாகும்.

மொத்தவிலைக் குறியீட்டெண்ணை அடிப்படையாகக்கொண்ட பண வீக்கம் 2.02 சதவீதமாக குறைந்துள்ளது. சென்ற மே மாதத்தில் 2.45 சதவீதமாக இருந்தது. பணவீக்கம் கடந்த ஆண்டு 2018 ஜூன் மாதத்தில் 5.68 சதவீதமாக இருந்தது.

காய்கறிகள் விலை சென்ற ஜூன் மாதத்தில் 24.76 சதவீதம் குறைந்தது. சென்ற மே மாதத்தில் 33.15 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

உருளைக்கிழங்கு மீதான பணவீக்கம் ஜூன் மாதத்தில் (-) 24.27 சதவீதமாகவும், மே மாதத்தில் (-) 23.36 சதவீதமாகவும் இருந்தது.

உணவு பொருட்கள் மீதான பணவீக்கம் ஜூன் மாதத்தில் 6.98 சதவீதமாகவும் சென்ற மே மாதத்தில் 6.99 சதவீதமாக இருந்தது.

வெங்காயத்தின் மீதான பணவீக்கம் விலை ஜூன் மாதத்தில் 16.63 சதவீதமாக உயர்ந்தது. மே மாதத்தில் இது 15.89 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜூன் மாதத்தில் எரிபொருள் மீதான பணவீக்கம் கடந்த மாதம் 0.98 சதவீதத்திலிருந்து கணிசமாக (-) 2.20 சதவீதமாக குறைந்தது.

உற்பத்தி பொருட்கள் மீதனா பணவீக்கம் ஜூன் மாதத்தில் 0.94 சதவீதமாக குறைந்து. மே மாதத்தில் 1.28 சதவீதமாக அதிகரித்து  இருந்தது.

இந்தக் காரணங்களால் மொத்த விலை குறியீட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட பணவீக்கம் 2019ம் ஆண்டு ஜூன் மாதத்தில் 2.02 சதவீதமாக குறைந்தது.Trending Now: