முதலாவது அரைஇறுதி மழையால் நிறுத்தம்: போட்டி நாளை தொடரும் என அறிவிப்பு

10-07-2019 12:11 AM


மான்­செஸ்­டர்:

உலக கோப்பை தொட­ரின் முத­லா­வது அரை­இ­று­திப் போட்டி மழை­யால் பாதிக்­கப்­பட்­டது. இந்­தி­யா­வுக்கு எதி­ராக முத­லில் பேட் செய்த நியூ­சி­லாந்து அணி 46.1 ஓவ­ரில் 5 விக்­கெட் இழப்­புக்கு 211 ரன்­கள் எடுத்த நிலை­யில், ஆட்­டம் நிறுத்­தப்­பட்­டது. தொடர்­நது மழை பெய்­த­தால் போட்டி இன்று தொட­ரும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. கேப்­டன் வில்­லி­யம்­சன், டெய்­லர் அடு­ரு­வ­ரும் அரை­ச­தம் அடித்­த­னர்.

சர்­வ­தேச கிரிக்­கெட் கவுன்­சில் (ஐ.சி.சி.,) நடத்­தும் 12வது உலக கோப்பை ஒரு­நாள் கிரிக்­கெட் தொடர் இங்­கி­லாந்து மற்­றும் வேல்­சில் நடை­பெற்று வரு­கி­றது. மான்­செஸ்­ட­ரில் நேற்று நடந்த முத­லா­வது அரை­இ­று­திப் போட்­டி­யில் முன்­னாள் சாம்­பி­யன் இந்­தி­யாவை எதிர்த்து நியூ­சி­லாந்து மோதி­யது. தவ­ரி­சை­யில் இந்­தியா 2, நியூ­சி­லாந்து 4வது இடத்­தில் உள்­ளன. வருண பக­வான் கருணை காட்ட பலத்த எதிர்­பார்ப்­பிற்கு இடையே போட்டி துவங்­கி­யது. இதில், ‘டாஸ்’ வென்ற நியூ­சி­லாந்து கேப்­டன் வில்­லி­யம்­சன் முத­லில் ‘பேட்­டிங்கை’ தேர்வு செய்­தார். இந்­திய அணி­யில் குல்­தீப் நீக்­கப்­பட்டு சகால் சேர்க்­கப்­பட்­டார். நியூ­சி­லாந்து தரப்­பில் சவுத்­தீக்கு பதில் பெர்­கு­சன் இடம்­பெற்­றார்.

நியூ­சி­லாந்து அணிக்கு புவ­னேஷ்­வர், பும்ரா இரு­வ­ரும் ‘வேகத்­தில்’ தொல்லை கொடுத்­த­னர். முதல் இரண்டு ஓவர் மெய்­டி­னாக அமைந்­தது. புவ­னேஷ்­வர் வீசிய ஆட்­டத்­தின் முதல் ஓவ­ரின் முதல் பந்­தில் கப்­டில் தப்­பித்­தார். பந்து பேடில் பட இந்­திய வீரர்­கள் நடு­வ­ரி­டத்­தில் எல்.பி.டபுள்யு, முறை­யிட்­ட­னர். நடு­வர் நாட் அவுட் என அறி­வி­தார். இதை­ய­டுத்து. கேப்­டன் கோஹ்லி மூன்­றா­வது நடு­வர் உத­வியை நாடி­னார். இதில், ‘நாட் அவுட்’ என தெரி­ய­வர முதல் பந்­தி­லேயே இந்­திய அணி தனது ‘ரிவி­யூ’வை இழந்­தது. தொடர்ந்து கப்­டில் தடு­மாற்­றத்­து­டன் விளை­யாடி வந்­தார். இவர் 1 ரன் எடுத்த நிலை­யில், பும்ரா பந்­தில் ‘ஸ்லிப்’ திசை­யில் கோஹ்­லி­யால் அபா­ர­மாக ‘கேட்ச்’ பிடிக்­கப்­பட்டு ஆட்­ட­மி­ழக்க ரசி­கர்­கள் ஆர்ப்­ப­ரித்­த­னர், பின் நிகோ­ல­சு­டன் கேப்­டன் வில்­லி­யம்­சன் இணைந்­தார். இரு­வ­ரும் மிக நிதா­ன­மாக விளை­யாடி வந்­த­னர்.

ஆட்­டத்­தின் எட்­டா­வது ஓவரை பும்ரா வீசி­னார். இந்த ஓவ­ரின் கடைசி பந்­தில் நியூ­சி­லாந்து தனது முதல் பவுண்­ட­ரியை பதிவு செய்­தது. தவிர 10வது ஓவ­ரின் முடி­வில் நியூ­சி­லாந்து 1 விக்­கெட் இழப்­புக்கு 27 ரன்­கள் மட்­டுமே எடுத்து திண­றி­யது. இந்த ஜோடி 2வது விக்­கெட்­டுக்கு 68 ரன்­கள் சேர்த்த நிலை­யில், ஜடேஜா பந்­தில் நிகோ­லஸ் (28) கிளீன் போல்­டா­னார். அடுத்து அனு­பவ வீரர் ராஸ் டெய்­லர் களம் வந்­தார். நியூ­சி­லாந்து அணி 28.1 ஓவ­ரில் 100 ரன் எடுத்­தது. சிறப்­பான ஆட்­டத்தை வெளிப்­ப­டுத்­திய கேப்­டன் வில்­லி­யம்­சன் 73 பந்­தில் அரை­ச­தம் அடித்­தார். இதுன் பின் டெய்­லர் சற்று அதி­ர­டி­யில் இறங்­கி­னார்.

கவ­னத்­து­டன் விளை­யாடி வந்த வில்­லி­யம்­சன் 67 ரன் (95 பந்து, 6 பவுண்­டரி) எடுத்து சகால் ‘சுழ­லில்’ சிக்­கி­னார். பாண்ட்யா வேகத்­தில் நீஷம் (12) சரிந்­தார். சகால் பந்தை சிக்­ச­ருக்கு விளா­சிய டெய்­லர், 73 பந்­தில் அரை­ச­தம் அடித்­தார். 45வது ஓவ­ரில் நியூ­சி­லாந்து 200 ரன் கடந்­தது. கிராண்ட்­ஹோம் (16) கைகொ­டுக்­க­வில்லை. நியூ­சி­லாந்து அணி 46.1 ஓவ­ரில் 5 விக்­கெட் இழப்­புக்கு 211 ரன்­கள் எடுத்த நிலை­யில், மழை வர ஆட்­டம் நிறுத்­தப்­பட்­டது. ஆடு­க­ளம் தார்­பாய் கொண்டு மூடப்­பட்­டது. அதே நேரம் பலத்த மழை பெய்ய ரசி­கர்­கள் ஏமாற்­ற­ம­டைந்­த­னர்.   மழை நின்று ஆட்­டம் தொடர்ந்­தால் ‘டக்­வொர்த் லீவிஸ்’ முறைப்­படி இந்­தி­யா­வுக்கு கடு­மை­யான இலக்கு நிர்­ண­யிக்­கப்­ப­டும் என சொல்­லப்­பட்­டது. தவிர, இரண்டு மணி நேரத்­துக்­குப் பின் போட்டி துவங்­கி­னால், ஓவர்­கள் குறைக்­கப்­பட மாட்­டாது. இதன் பிற­கும் தாம­தம் ஏற்­ப­டும் பட்­சத்­தில் 'டக் வொர்த்-­லீ­விஸ்' விதிப்­படி இந்­திய அணி­யின் இலக்கு மாற்றி அமைக்­கப்­ப­டும். இதன் படி, மீண்­டும் நியூ­சி­லாந்து பேட்­டிங் செய்­யா­மல், இந்­தியா 'சேஸ்' செய்­யத் துவங்­கி­னால்...

* 46 ஓவ­ரில் 237 ரன்­கள் இலக்­காக நிர்­ண­யிக்­கப்­ப­டும்.

* 40 ஓவர் என்­றால் 223 ரன்­கள் எடுக்க வேண்­டும்.

* 35 ஓவர் எனில் 209 ரன்­கள் ஸ்கோர் செய்ய வேண்­டும்.

* 30 ஓவர் என்­றால் 192 ரன்­களை இந்­தியா எடுக்க வேண்­டும்.

* 25 ஓவ­ருக்கு 172 என இலக்கு மாற்­றப்­ப­டும்.

* 20 ஓவர் என்­றால் 148 இலக்­காக இருக்­கும்.

இப்­படி பேசப்­பட்ட வந்த நிலை­யில், மயை இடை­வி­டாது பெய்­தது. இதை­ய­டுத்து இ;றைய போட்டி நிறுத்­தப்­ப­டு­வ­தாக அறி­வித்த நடு­வர்­கள் இந்த போட்டி நாளை எதா­ட­ரும் என தெரி­வித்­தார்­கள். அதா­வது நியூ­சி­லாந்து அணி மீத­முள்ள3.5 ஓவர்­கள் விளை­யா­டும். இதன் பின் இந்­திய அணி சேஸ் செய்­யும் என சொல்­லப்­பட்­டுள்­ளது. அதே நேரம் மான்­செஸ்­டர் வானிலை அறி­விப்­பின்­படி இன்­றைய தின­மும் கடும் மழை பெய்­யும் என கணிக்­கப்­பட்­டுள்­ளது. அவ்­வாறு, இன்­றும் மழை­யால் ஆட்­டம் நடக்­கா­விட்­டால் லீக் சுற்­றில் இந்­தியா 15 புள்ளி, நியூ­சி­லாந்து 11 புள்ளி எடுத்­தி­ருந்­தன. இதில் அதிக புள்ளி எடுத்த கார­ணத்­தால் இந்­தியா வெற்றி பெற்­ற­தாக அறி­விக்­கப்­பட்டு பைன­லுக்கு முன்­னே­றும்.Trending Now: