ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 3–7–19

03-07-2019 03:52 PM

பிற மொழி­க­ளி­லும் பாடி­யி­ருக்­கி­றார்!

(சென்ற வாரத் தொடர்ச்சி...)

இப்­ப­வும் தானொரு இசை மேதை என்­ப­தைத் தன் இசைக்­கோர்­வை­க­ளின் மூல­மாக இசை­யைத் தோற்­று­விப்­ப­தன் மூல­மா­கப் பல முறை நிரூ­பித்த இளை­ய­ராஜா தான் பாடு­வ­தற்­கா­கத் தேர்வு செய்த அத்­தனை பாடல்­க­ளை­யும் மேற்­கா­ணும் வகை­யி­லான பட்­டி­ய­லுக்­குள் அடக்­கிய பிற்­பாடு ஒரு விஷ­யம் புரி­ப­டும். அவற்­றில் பெரும்­பா­லான பாடல்­க­ளைப் பாடு­வ­தற்­கான குரல் வேறு ஏதுமே இல்லை என்­பதே அது.

ராஜா தீர்க்­க­த­ரிசி என்­பது அவர் தான்  பாடு­வ­தற்­குத் தேர்­வெ­டுத்த பாடல்­க­ளி­னால் புரி­வது அல்ல. மாறாக அவர் அத்­த­கைய பாடல்­க­ளைப் பாடி­ய­ப­டியே தன் பாடல்­க­ளுக்கு இடையே இருக்­கக் கூடிய நுட்­ப­வித்­யா­சங்­க­ளைக் கண்­கட்டி வித்­த­கன் ஒரு­வ­னைப் போல மறைத்து வைத்­த­த­னால் தான் என்­பேன்.

பிற பாட­கர்­கள் பாடிய அனெ­க­மாக பாலு பாடிய சில பெரு­வெற்­றிப் பாடல்­க­ளைத் தானும் பாடி அவற்றை கேஸட்­டு­க­ளில் மட்­டும் இடம்­பெ­றச் செய்­தி­ருப்­பார் ராஜா. ஹரி­ஹ­ரன் பாடிய என்­னைத் தாலாட்ட வரு­வாளா கமல் பாடிய தென்­பாண்­டிச் சீமை­யிலே பாலு பாடிய கல்­யாண மாலை கொண்­டா­டும் பெண்ணே ஆகி­ய­வற்றை உன்­னிப்­பா­கக் கவ­னித்­தால் அவை போலச்­செய்த பாடல்­க­ளாக இராது. தன் நுட்­ப­மான குர­லால் இயன்ற அளவு அவற்றை வித்­யா­சப்­ப­டுத்தி இரு­வேறு பாடல் அனு­ப­வங்­க­ளாக ஏற்­ப­டுத்தி இருப்­பார் ராஜா . அவர் பாடி ரம­ண­மாலை தொகுப்­பில் இடம்­பெற்ற பிச்­சைப் பாத்­தி­ரம் ஏந்­தி­வந்­தேன் பாடலை திரைப்­ப­டுத்­தும் போது மது­பா­ல­கி­ருஷ்­ண­னைப் பாட வைத்­தி­ருப்­பார். ரம­ண­மா­லை­யும் ராஜா பாடி­ய­தும் கேட்­ப­வர் நினை­வுக்கு வரக் கூடாது என்­கிற எத்­த­ன­மும் அதில் அடங்கி இருக்­கும்.

ராஜா பிற­மொ­ழி­க­ளி­லும் பாடி இருக்­கி­றார். துக்­கம் தாபம் தனிமை அந்­த­கா­ரம் இன்­ன­பி­ற­வற்­றைப் பாடு­வ­தென்­பது எளி­தான வேலை அல்ல. அத­னை­யும் அனா­யா­ச­மா­கச் செய்து காட்­டிய பாட­கர் இளை­ய­ராஜா யாரா­லும் பாட­மு­டி­யாத பாடல்­க­ளைத் தன­தாக்­கிக் கொண்­ட­வர். நம் வசம் தந்­த­வர் என்­பதே மெய்.

பூங்­காற்றே இனி போதும் என் உடல் தீண்­டாதே...

இங்கு போரா­டும் சரு­கான பூம­னம் தாங்­காதே....

நான் ஒன்று எண்­ணித் தவிக்க

தானொன்று தெய்­வம் நினைக்க

துன்­பத்­தில் என்­னைத் தள்­ளிப் பார்க்­காதே

என் நெஞ்­சம் தாங்­காதே

எஸ்.பி.பால­சுப்­ர­ம­ணி­யத்­தோடு உடன்­பி­றப்பு படத்­தில் பாடிய சோழர் குலக் குந்­தவை போல் எனும் பாடல் முதல் முறை கேட்­ட­போ­தி­லி­ருந்தே மன­தில் அட்­ட­கா­ச­மாய் அமர்ந்து கொண்­டது...ஈரு­ட­லில் ஓரு­யிர் தான் நீயும் நானும் வேறு என்ன சொல்ல...? என்ற இடத்­தில் கரைந்து குழை­யும் இரு­கு­ர­லும்.
Trending Now: