கலைமாமணி வாமனனின் ‘நிழலல்ல நிஜம்’ – 186

01-07-2019 04:42 PM

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்த தமிழ் சினிமா!

அண்­மை­யில், பிச்­சைக்­கார சிறு­வர்­க­ளைப் பற்றி ஒரு செய்தி வந்­தது. அந்த சிறு­வர்­க­ளைப் பிச்சை எடுக்க வைத்த மர்ம கும்­பலை போலீஸ் தேடி வரு­கி­றது என்­றது அந்த செய்தி.

வட மாநி­லங்­க­ளி­லி­ருந்து தமிழ் நாட்­டுக்­குப் பிழைப்­புத்  தேடி  

வரு­ப­வர்­க­ளின் குழந்­தை­களை, ரயில் நிலை­யங்­க­ளி­லும் பஸ் நிலை­யங்­க­ளி­லும் சுற்­றலா தலங்­க­ளி­லும் பிச்சை எடுக்க வைத்­த­தாம் அந்­தக் கும்­பல்.

அழுக்­கே­றிய உடை­க­ளு­டன் எண்­ணெய் கண்­ட­றி­யாத தலை­மு­டி­யு­ட­னும் காணப்­ப­டும் இந்த சிறு­வர்­க­ளின் தோற்­றமே பரி­தா­ப­மாக இருக்­கும். அம்மா, அப்பா விபத்­தில் இறந்­தார்­கள், அக்­கா­வால் நொண்டி, சாப்­பிட்டு ரொம்ப நாள் ஆச்சு என்று பிச்சை எடுக்­கும் இந்த சிறு­வர்­க­ளின் பசி என்­றைக்­கும் தீராது.

ஆனால் பிச்­சைப் பாத்­தி­ரத்தை அட்­ச­யப் பாத்­தி­ர­மா­கக் கரு­தும் பிச்சை மாபி­யா­வின் அகோர பசியை அவர்­கள் நாளுக்கு நாள் தீர்ப்­பார்­கள். பசி­யால் வாடும் ஒரு ஏழைக்கு  பத்து காசோ வேறெ­துவோ போட்­டோம்  என்ற திருப்­தி­யைப் பிச்சை இட்­ட­வர்­கள் பெறு­வார்­கள்.

இன்­னொரு நிகழ்ச்­சி­யில், பிச்சை எடுக்­கும் குழந்­தை­களை வளைத்­துப்­பி­டித்து, அரசு காப்­ப­கத்­தில் சேர்க்க இது தொடர்­பான அரசு அதி­கா­ரி­கள் நட­வ­டிக்கை எடுத்­தார்­கள். அந்­தக் குழந்­தை­க­ளின் பெற்­றோர் என்று கூறிக்­கொண்ட சிலர், அவர்­க­ளைத் தடுத்­தார்­கள். என்­னடா அநி­யா­யம், இந்த நாட்­டில் பிச்சை எடுக்­கக்­கூட உரிமை இல்­லையா என்­பது அவர்­க­ளின் மனோ­பா­வ­மாக இருந்­தது.

காவல் துறை இந்த விஷ­யத்­தில் எங்­க­ளு­டன் ஒத்­து­ழைக்­க­வில்லை....அவர்­கள் ஒத்­து­ழைத்­தி­ருந்­தால் இன்­னும் பல பிச்­சைக்­கார சிறு­வர்­க­ளைப் பிடித்­தி­ருக்க முடி­யும் என்­ற­னர் அரசு அதி­கா­ரி­கள். காவ­லர்­கள் ஏன் இது குறித்து ஆர்­வம்  காட்­ட­வில்லை? இந்த பிச்சை கேங்­கு­க­ளு­டன் அவர்­க­ளுக்­கும் ஏதா­வது தொடர்பு இருக்­குமோ?

பாலா­வின் ‘நான் கட­வுள்’, பிச்­சைப் பாத்­தி­ரத்­திற்கு பின்னே மறைந்­தி­ருக்­கும் நெட்­வர்கை தோலு­ரித்­துக் காட்­டி­யது. ‘கூன் குருடு செவிடு பேடு நீங்­கிப் பிறத்­தல் அரிது’ என்­றார் அவ்­வை­யார். இத்­த­கைய கூன், குருடு செவி­டு­களை பிச்­சைக்­கா­ரர்­கள் வளை­யத்­தில் கொண்டு வரா­மல் இருப்­பது இல்லை என்று செயல்­ப­டும் கும்­பலை, ‘நான் கட­வுள்’ தீர்க்­க­மான பார்வை பார்த்­தது. ‘பிச்­சைப் பாத்­தி­ரம் ஏந்தி வந்­தேன், ஐயனே, என் ஐயனே’ என்ற பாடல்,  சோக ரசத்­தோடு இந்த விஷ­யத்தை முன்­வைத்­தது. இளை­ய­ரா­ஜாவே எழுதி இசை­ய­மைத்த இந்த பாட­லின் வரி­க­ளி­லும் ஆழ­மான இரட்டை அர்த்­தம் இருந்­தது.

பிச்­சைக்­கா­ரர்­கள் ஏந்தி வரும் பாத்­தி­ரத்­தைக் குறிப்­பி­டும் அதே நேரத்­தில், இந்த உட­லையே, உயி­ரையே இறை­வ­னி­டம் நாம் கொண்டு செல்­லும் பிச்­சைப் பாத்­தி­ர­மாக எடுத்­துக்­கொள்­ளும் பொரு­ளும் இந்த  பல்­ல­விக்கு இருந்­தது. இந்த  பாடலை ஜேசு­தாஸ் பாடி­னார். வேடிக்கை என்­ன­வென்­றால், அவர் தமிழ் சினி­மா­வுக்கு அறி­மு­க­மா­னதே ஒரு ‘பிச்­சைக்­கா­ரன்’ பாட­லைப் பாடித்­தான்!

‘பொம்மை’ படத்­தில் (1964), சோம­சுந்­த­ரம் (எஸ்.பால­சந்­தர்) என்ற சீமானை கொல்­லும் திட்­டத்­து­டன், ஒரு பொம்­மை­யில் வெடி வைத்து அவ­ரி­டம் கொடுக்­கப்­ப­டு­கி­றது. கய­வர்­க­ளின் திட்­டத்­திற்கு மாறாக அந்­தப் பொம்மை எத்­த­னையோ பேரி­டம் கைமா­று­கி­றது. அந்த வகை­யில் ஒரு பிச்­சைக்­கா­ர­னி­டம் அது வந்து சேரு­கி­றது. வித்­வான் லட்­சு­ம­ணன் எழுதி வீணை எஸ். பால­சந்­தர்  இசை­ய­மைத்த இந்த  ‘பிச்­சைக்­கா­ரன்’ பாட­லைத்­தான் ஜேசு­தாஸ் பாடி­னார். பிச்­சைக்­கா­ரர்­கள் பாடக்­கூ­டிய எளி­மை­யான மெட்­டும் பாணி­யும் கொண்­டி­ருந்த பாடல், ‘பிச்­சைப்­பாத்­தி­ரம்’ ஏந்தி வந்­தேன் பாட­லைப்­போல் ‘தத்­துவ’ வீச்சு உடை­ய­தாக அமைந்­தது.

‘நீயும் பொம்மை நானும் பொம்மை

நினைச்­சுப்­பாத்தா எல்­லாம் பொம்மை’

என்று தொடங்­கிய பாடல், கோயி­லில் வாழும் தெய்­வ­மும் பொம்மை, அதைக் கும்­பி­டும் மனி­தர் யாவ­ரும் பொம்மை என்று வழி­பா­டு­க­ளைக் கடந்து நிற்­கும் சத்­தி­யத்­தைப் பேசி­யது. ‘பிச்­சைக்­கா­ரன்’ பாடலை, அதன் சூழ­லுக்கு ஏற்ப அலங்­கா­ரம் இல்­லா­மல் அமைத்­தி­ருந்­தார் பால­சந்­தர். அதே பாணி­யில்­தான் ேஜசு­தா­சும் பாடி­னார்.

‘உள்­ள­வன் முன் இல்­லா­த­வன் பொம்மை

வல்­ல­வன் கையில் நல்­ல­வன் பொம்மை

அல்­லும் பக­லும் உழைப்­ப­வன் பொம்மை,

தினம் அல்­லல் பட்டு அலை­ப­வன் பொம்மை’

என்று ‘பொம்மை’ படத்­தின் பிச்­சைக்­கா­ர­னுக்­காக சுமார் ஐம்­பத்தி ஐந்து வரு­டங்­க­ளுக்கு முன்  எழு­தப்­பட்ட வரி­கள், பிச்சை எடுப்­ப­தில் கூட யாருக்கோ கைதி­க­ளாக இருக்­கும் இன்­றைய சிறு­வர்­க­ளின் நிலையை சுட்­டு­கின்­றன.

‘நான் கட­வுள்’ படத்­தில், ரயி­லில் ‘இதோ ஒரு தெய்­வம் முன்­னாலே’ என்று ‘பாபு’ படப்­பா­ட­லைப் பாடிய படி, நடிகை பூஜா பிச்சை எடுக்­கி­றார். ஒரு காவல் துறை அதி­கா­ரி­யா­லேயே ஒரு பிச்­சைக்­கார கேங்­கில்  இணைத்­து­வி­டப்­ப­டு­கி­றார். பிச்­சைப் பிசி­னெ­ஸில் காவ­லர்­க­ளுக்­கும் பங்கு உண்டு என்­பதை ஊர்­ஜி­தப்­ப­டுத்­தும் வித­மாக இந்த காட்சி அமை­கி­றது.

‘நான் கட­வுள்’ படத்­தில் வரும் கண்­தெ­ரி­யாத பிச்­சைக்­கா­ரப் பாட­கி­யின் ரயில் சங்­கீ­தம், நிஜ­வாழ்க்­கைப் பாடகி  ஒரு­வ­ரின் ஆரம்ப காலத்தை நினை­வு­ப­டுத்­து­கி­றது. சரி­யா­கவோ தவ­றா­கவோ, அந்­தப் பழம்­பெ­ரும் பாடகி, அவ­ரு­டைய ஆதி­கா­லத்­தில் ரயி­லில் பாடி வந்­த­தாக ஒரு கூற்று உண்டு. ஆனால் ரயி­லில் பாடி­ய­படி மக்­க­ளின் இரக்­கத்தை பெறும் உத்தி தண்­ட­வா­ளம் போட்ட நாட்­க­ளி­லி­ருந்தே இருந்து வந்­தி­ருக்­கி­றது என்று கூற­வேண்­டும்!

உதா­ர­ணத்­திற்கு ஒன்­றி­ரண்டு. ஏ.பி.நாக­ரா­ஜ­னும் வி.கே.ராம­சா­மி­யும் இணைந்து தயா­ரித்த ‘நல்ல இடத்து சம்­பந்­தம்’ (1958) படத்­தில், ‘பொண்ணு மாப்­பிளே ஒண்ணா போகுதே ஜிகு­ஜிகு வண்­டி­யிலே’,  இரு சிறு­மி­க­ளால் படத்­தில் பாடப்­ப­டு­கி­றது. யாரு­டைய பிள்­ளை­களோ பாவம், ரயி­லில் கையேந்­தும் நிலைக்கு வந்­து­விட்­டார்­கள். ஆனால் அவர்­க­ளின் பாடல், படத்­தின் இரண்­டா­வது ஜோடி­யான பிரேம் நசீர், எம்.என். ராஜம் ஆகி­யோ­ரின் காதலை வெளிச்­சம்­போட்­டுக் காட்ட உத­வு­

­கி­றது.  

இதே போல், கையில் குழந்­தை­யைத்  தூக்­கிக்­கொண்டு, தட்டை ஏந்­திய தம்­பி­யு­டன், ‘ராஜ­பார்ட் ரங்­க­து­ரை’­­யில் ஒரு சிறு­வன் பிச்­சைக்­காக ரயி­லில் பாடும் காட்­சி­யைப் பார்க்­கின்­றோம். ‘அம்­மம்மா தம்பி என்று நம்பி’ என்ற அந்­தப் பாட­லில் கவ­னத்தை ஈர்க்­கும் இரண்டு அம்­சங்­கள் உண்டு. இந்த பாடல், ரயி­லில் செல்­லும் ஒரு பாய்ஸ் கம்­பெனி கோஷ்­டி­யின் சிறு­வர்­க­ளி­டம் பாடப்­ப­டு­கி­றது என்­பது ஒன்று. இன்­னொன்று, கண்­ண­தா­சன் எழு­திய பாட­லில் ஓங்கி நிற்­கும் தேசி­யம், அதற்கு ஆதா­ர­மான தெய்­வீ­கம்.

‘பல கோடி உள்­ளங்­கள் வாழ்­கின்ற நாடு,

பதி­நாலு மொழி பேசும் அழ­கான வீடு,

இனச் சண்டை மொழிச் சண்டை கூடாது இங்கு,

எல்­லோ­ரும் ஒரு தாயின் மக்­கள்

அல்­லவா’  

என்­பது பார­தி­யின் புதிய பிர­க­ட­ன­மாக இந்த பாட­லில் ஒலிக்­கி­றது. தெய்­வங்­கள் உண்­டென்று நம்­பிக்கை கொண்டு, சேவை­கள் செய்­தால் உன் தேசம் சிறக்­கும்  என்­பது தேசி­யத்­து­டன் பிணைந்­தி­ருக்­கும் ஆன்­மி­கத்தை வலி­யு­றுத்­து­கி­றது.

பிச்­சைக்­கா­ரர்­க­ளுக்­குப் பிறந்­தால்,  பிறவி பிச்­சைக்­கா­ரன் என்று ஒரு­வன் அழைக்­கப்­ப­ட­லாம். ஆனால் எல்லா பிச்­சைக்­கா­ரர்­க­ளும் இப்­ப­டிப் பிறந்­தி­ருக்­கி­றார்­கள் என்று கூற­மு­டி­யாது. அவர்­கள் வாழும் நாட்­டில் நடக்­கும் நிகழ்ச்­சி­க­ளா­லும், அவற்­றில் நில­வும் சூழ­லா­லும் தனிப்­பட்ட வாழ்க்­கை­யின் பின்­ன­டை­வு­க­ளா­லும் பிச்­சைக்­கா­ரர்க ­ளாக மாறி­யி­ருக்­க­லாம்.

பிச்சை எடுப்­பது  மட்­டு­மல்ல, பிற­ரி­ட­மி­ருந்து எதை­யும் ஏற்­ப­தையே இகழ்ச்சி என்று நம் முன்­னோர் கரு­தி­னார்­கள். அதே நேரத்­தில், இல்லை என்று யாரா­வது வந்­தால் அவர்­க­ளி­டம் இல்லை என்று கூறக்­கூ­டாது என்­றும் வலி­யு­றுத்­தப்­பட்­டது (ஏற்­பது இகழ்ச்சி;  ஐயம் இட்டு உண், அதா­வது இல்­லா­த­வ­ருக்கு கொடுத்­து­விட்டு சாப்­பிடு).

இந்த வகை­யில்­தான், பார­தி­தா­சன் எழு­திய பாட­லான, ‘பசி என்று வந்­தால் ஒரு பிடி சோறு தந்து பாரப்பா’, விஸ்­வ­நா­தன் – ராம­மூர்த்­தி­யின் முதல் பட­மான பணத்­தில் இடம்­பெற்­றது (1952). மு.வர­த­ரா­ச­னின் பெற்ற மன­தி­லும் ஒரு பிச்­சைக்­கா­ர­னின் அறை­கூ­வல் பார­தி­தா­ச­னின் வரி­க­ளில் ஒலித்­தது (ஒரே ஒரு பைசா தரு­வது பெரிசா, போடுங்­கள் சும்மா, புண்­ணி­யம் அண்ணா, 1960). ‘பரா­சக்­தி’­­யில் எஸ்.எஸ். ராஜேந்­தி­ரன் ஒரு பிச்­சைக்­கா­ரர்­கள் மாநாடு போட்­டார் (1962). அதைத் தொடர்ந்து, 1969க்குப் பிறகு பிச்­சைக்­கா­ரர்­க­ளுக்­கான திட்­ட­மும் வந்­தது. எப்­ப­டி­யும், பிச்சை எடுப்­பது விடா­மல் தொடர்ந்­தது.

தீன­மான பிச்­சைக்­கா­ரர்­க­ளைப் பார்த்­தால் மக்­க­ளுக்கு  இரக்­கம் பிறந்து ஏதா­வது கொடுப்­பார்­கள். பிச்சை எடுப்­பது குழந்­தை­க­ளாக இருந்­தால் கேட்­கவே வேண்­டி­ய­தில்லை.  இதை ‘அதிர்ஷ்­டம்’ (ஐயா, சிறு­பெண் ஏழை என்­பால் மனம் இறங்­காதா, 1939), ‘சம்­சா­ரம்’ (அம்மா பசிக்­குதே, தாயே பசிக்­குதே, 1951) தொடங்கி இப்­போது சில வரு­டங்­க­ளுக்கு முன் வந்த ‘பிசாசு’ வரை (போகும் பாதை தூர­மில்லை), பல படங்­க­ளில்  பார்க்­க­லாம்.

பழைய படங்­க­ளில் பிச்­சைக்­கா­ரன் பாடல் அல்­லது சாது­வின் பாடல் என்­பது, மன­சாட்­சி­யின் குர­லாக ஒலித்­தது. இந்த வகை­யில் டி.எம்.சவுந்­த­ர­ரா­ஜனே கூட பிச்­சைக்­கா­ர­ரா­கத் தோன்றி,  ‘தேவகி’ என்ற படத்­தில் (1951), ‘தீராத துய­ராலே பாழா­கியே பெண்­கள் ஓடா­கத் தேயு­றாங்க’ என்று பாடி­னார். ‘ஆடிப்­பெ­ருக்கு’  படத்­தில், படத்­தின் சூழ­லுக்கு ஏற்ப ஒலித்த இத்­த­கைய பாடல், கண்­ணி­ழந்த மனி­தர் முன்னே ஓவி­யம் வைத்­தார் (1962).

பட நாய­கர்­கள்  கூட பிச்சை எடுக்­கும் நிலைக்கு கதை­யின் ஒரு திருப்­பத்­தில் ஆளா­கும் காட்­சி­கள் சில படங்­க­ளில் வந்­தி­ருக்­கின்­றன. ‘ஆல­ய­ம­ணி’­­யில் (1962), மிகப்­பெ­ரிய செல்­வச் சீமா­னான தியா­க­ரா­ஜன் (சிவாஜி), தன்­னு­டைய வீட்­டில் தானே பிச்­சைக்­கா­ர­னைப் போல் வந்து பிச்சை வாங்­கும் ஒரு காட்சி வந்­தது. காலம் எப்­ப­டிப்­பட்ட மாற்­றங்­க­ளைக் கொண்டு வரும் என்­ப­தற்கு இது ஒரு அத்­தாட்சி. அதே போல் ‘ஆனந்த ராகம்’ படத்­தில், ஏழை­க­ளுக்­குப் பிச்சை இடும் காத­லி­யின் முன், தானும் ஒரு பிச்­சைக்­கா­ர­னைப் போல் பட நாய­கன் (சிவ­கு­மார்) வந்து நிற்­கி­றான். வித்­தி­யா­ச­மான கதை அமைப்பு கொண்ட ‘பிச்­சைக்­கா­ரன்’ படத்­தில் (2016), வச­தி­யான ஒரு­வர்,  யாருக்­கும் தெரி­விக்­கா­மல் 48 நாட்­கள் பிச்­சைக்­கா­ர­னாக உலவ வேண்­டிய நிலை வரு­கி­றது!

சில ஈனர்­கள் பிச்சை எடுப்­ப­தையே தொழி­லா­கக் கொண்­டி­ருக்­க­லாம். அவர்­க­ளை­யும்­விட பெரிய மாபா­வி­கள், பிச்­சைக்­கா­ரர்­க­ளைக் கசக்­கிப் பிழிந்து லாபம் சம்­பா­தித்­துக்­கொள்­ள­லாம். ஆனால் மான­முள்ள எந்த மனி­த­னும் பிச்சை எடுக்க விரும்­ப­மாட்­டான். அதே நேரத்­தில் மனம் உள்ள எந்த மனி­த­னும் அந்த நிலை யாருக்­கும் வரக்­கூ­டும் என்­பதை மறக்­க­வும் மாட்­டான். காஞ்சி பெரி­ய­வர், அடுத்த நாளைக் கூட ‘பிச்­சைக்­கா­ரன்’ என்று அழைப்­பா­ராம். நம்மை அடுத்த நாளும் உயி­ரு­டன் இருக்க  வைப்­பது இறை­வன் நமக்கு அளிக்­கின்ற பிச்சை என்­பது அவ­ரு­டைய உணர்வு. இந்த உணர்­வு­டன் எல்­லோ­ரும் வாழ்ந்­தால், பிச்­சைக்­கா­ரர் என்று எவ­ரும் துன்­பப்­ப­டாத நிலை வந்­து­வி­டும்.

(தொட­ரும்)

Trending Now: