ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 26–6–19

26-06-2019 03:14 PM

இளை­ய­ராஜா குரல் ஜாலம்!

(சென்ற வாரத் தொடர்ச்சி...)

இளை­ய­ரா­ஜா­வின் இசை­யும் குர­லும் அவ­ரது ரசி­கர்­க­ளின் வழி­பா­டா­கவே மாறு­கி­றது. இதனை எங்ஙனம் குறை சொல்ல முடி­யும்..? அவ­ரது குர­லில் உரு­வான பாடல்­களை புரிந்து கொள்­ளா­ம­லேயே விமர்­சிப்­பதை ஏற்­ப­தற்­கில்லை.

இளை­ய­ராஜா குர­லில் ஆன பாடல்­கள் மொத்­தம் எத்­த­னை­வி­தம்..? சோகப் பாடல்­கள் மற்­றும் சந்­தோ­ஷப் பாடல்­கள் என பொது வகை­மை­யில் இரண்­டா­கக் கொள்­வோம். இதில் கொஞ்­சம் அதில் கொஞ்­சம் என்று எழு­திக் கொள்­ள­லாம். அடுத்து விரித்­தால் சோகப் பாடல்­கள் பக்­திப் பாடல்­கள் குத்­துப் பாடல்­கள் சந்­தோஷ டூயட்­கள் என்று நாலாய் விரிக்­க­லாம்.

சரி அப்­பு­றம்...?

வேண்­டாம்... இது கேள்வி கேட்டு பதி­ல­ளிக்­கிற இட­மா­கப் போய்­விட்­டது. வினா ஏற்­க­னவே கேட்­கப் பட்ட அர­தப் பழைய வினா. உலக அள­வில் அயர்ச்­சியை அந்­த­கா­ரத்தை வனாந்­தி­ரத் தனி­மையை தோல்­வி­யின் இய­லா­மை­யைத் தாள ஒண்­ணாத துரோ­கத்தை வலியை நோய்­மையை எத்­த­னையோ பேர் பாடி­யி­ருக்­கி­றார்­கள். பெரும்­பா­லும் melancholy and sadness துக்­கத்­தை­யும் சோகத்­தை­யும் உட்­ப­டுத்­திய BLUE வகை­யறா பாடல்­களை இந்­திய நிலத்­தில் அதி­க­தி­கம் பாடிய தொழில் முறைப் பாட­கர் யாராக இருப்­பார்..?

பல்­லா­யி­ரக் கணக்­கான பாடல்­க­ளைப் பாடிய வெற்­றி­க­ர­மான எந்­தப் பாட­க­ரின் பேரை­யும் இந்­தப் பட்­டி­ய­லில் எழு­தவே முடி­யாது என்­ப­தும் இந்­திய அள­வில் அப்­ப­டி­யான ஆண் குரல்­க­ளில் தமி­ழில் இளை­ய­ராஜா சந்­தி­ர­பாபு  கமல்­ஹா­ஸன் ஆகிய பேர்­க­ளைத் தான் சொல்ல முடி­கி­றது. அடுத்த தலை­மு­றை­யில் ரஹ்­மா­னின் சில பாடல்­கள் இந்த வகை­ய­றா­வில் வரும். மற்ற படிக்கு தொழில்­முறை வெற்­றி­க­ரம் அந்­த­கா­ரத்­திற்கு எதி­ரா­னது. நிறை­யப் பாடல்­கள் பாடு­வ­தற்­கான குரல் மேற்­சொன்­ன­வற்­றில் மிளி­ராது. கன்­ன­ட­ராஜ்­கு­மா­ரின் குரல் BLUE வகை­மைப் பாடல்­க­ளுக்­கா­னது என்­பேன். நவ காலத்­தில் பாடிக் கொண்­டி­ருக்­கிற இளைய குரல்­க­ளில் ப்ளூ வகை­மைக்­கான இள­வ­ர­சன் கேகே என்­ற­ழைக்­கப்­ப­டு­கிற கிருஷ்­ண­கு­மார் குன்­னத்.

சரி இப்­போது மீண்­டும் ராஜா.

ராஜா பாடிய பாடல்­கள் ஒரே வகைப் பாடல்­க­ளா­கத் தோற்­ற­ம­ளிப்­ப­தி­லி­ருந்து துவங்­கு­கி­றது அவர் குரல் ஜாலம். நுட்­ப­மான உப வகை­மை­க­ளில் தான் இருக்­கின்­றது விச­யமே. அவற்றை உன்­னிப்­பா­கக் கவ­னித்த யார்க்­கும் ராஜா குரல் பாடல்­கள் தனித்­தனி சேக­ரங்­க­ளாக குறைந்த பட்­சம்  எட்டு தனி வகைப் பாடல்­க­ளா­கப் பிரி­வது புரி­ப­டும்.

1. ‘வீட்­டுக்கு வீட்­டுக்கு வாசப்­படி வேணும்’, ‘காதல் கசக்­கு­தய்யா’, ‘நிலா அது வானத்து மேலே’, ‘இது தான் இதுக்­குத் தான்’, ‘ஏப்­ரல் மேயிலே பசு­மை­யே­யில்லே’, ‘வாடி என் கப்­பக்­கி­ழங்கே’, ‘ மேகங்­க­ருக்­கை­யிலே புள்ள தேகங்­கு­ளி­ரு­தடி’.

2. ‘ஜனனீ ஜனனி ஜகம் நீ அகம் நீ’, ‘ பிச்­சைப் பாத்­தி­ரம் ஏந்தி வந்­தேன் ஐயனே என் ஐயனே’.

3. ‘என் தாயெ­னும் கோயி­லைக் காக்க மறந்­திட்ட பாவி­யடி கிளியே’, ‘என்ன என்ன கனவு கண்­டாயோ’, ‘அப்­ப­னென்­றும் அம்­மை­யென்­றும்’, ‘எங்கே செல்­லும் இந்­தப் பாதை’,  ‘கண்ணே நவ­ம­ணியே’, ‘வீணைக்கு வீணைக்­குஞ்சு’.

4. ‘சங்­கத்­தில் பாடாத கவிதை’, ‘பூமா­லையே தோள் சேரவா’, ‘ மணியே மணிக்­கு­யிலே’, ‘கண் மலர்­க­ளின் அழைப்­பி­தழ்’, ‘சிறு பொன்­மணி இசை­யும் அதில்’, ‘அடி ஆத்­தாடி’, ‘வட்டி எடுத்த.. சோத்­தப் போட்­டுட்ட(கிரா­மத்து மின்­னல்)’, ‘பொன்­னோ­வி­யம் கண்­டே­னம்மா எங்­கெங்­கும்’, ‘தென்­றல் வந்து தீண்­டும் போது’, ‘ஒரு­க­ணம் ஒரு யுக­மாக’.

5.ஐயா வீடு தெறந்து தான்  இருக்கு உள்ளே புகுந்து பந்தி போடு பரணி பரணி பாடி வரும் தாமி­ர­ப­ரணீ நான் ஏரிக்­கரை மேலி­ருந்து எட்­டு­தெச பார்த்­தி­ருந்து நேத்து ஒருத்­தர ஒருத்­தரு பார்த்­தோம்.

6.வார்த்தை தவறி விட்­டாய் சோலப்­ப­சுங்­கி­ளியே தென் பாண்­டிச் சீமை­யிலே நாரி­னில் பூத் தொடுத்து ஒரு ஜீவன் அழைத்­தது துள்ளி எழுந்­தது பாட்டு.

7. ‘எம்­பாட்டு எம்­பாட்டு நெஞ்­சி­னிக்­கும் பூங்­காத்து’,  ‘உன்­னோட உல­கம் வேறு என்­னோட உல­கம் வேறு’, ‘காட்­டு­வழி போற புள்ள கவ­லப்­ப­டாத’, ‘அரி­தா­ரத்­தைப் பூசிக் கொள்ள ஆசை’, ‘ஆலோ­லம் பாடி அசைந்­தா­டும் காற்றே’, ‘அழகே அமுதே பூந்­தென்­றல் தாலாட்­டும்’.

8. ‘வள்ளி வள்ளி என வந்­தான் வடி­வே­லந்­தான்’, ‘நான் தேடும் செவ்­வந்­திப் பூவிது’, ‘சின்­ன­பொண்ணு சேலை’, ‘புன்­ன­கை­யில் மின்­சா­ரம்’, ‘சொர்க்­கமே என்­றா­லும் அது நம்­மூ­ரைப் போல­வ­ருமா’.

இளை­ய­ராஜா பாடிய பாடல்­க­ளைப் பொது­வாக மேற்­கண்ட எட்டு வகை­மை­யா­கப் பிரிக்­க­லாம். ஒவ்­வொரு வகை­மை­யி­லும் பல்­லாங்­குழி முத்­துக்­க­ளைப் போல் ஒவ்­வொரு வெற்­றி­க­ர­மான பாட­லாக இட்டு நிரப்­பிக் கொண்டே செல்­ல­மு­டி­யும். வியப்பு என்­ன­வெ­னில் வேறு யாரா­லும் பாட முடி­யாத பாடல்­களை மெய்­யாய்ச் செப்­பி­னால் கைவிட வேண்­டிய பாடல்­க­ளைத் தேடித் தேடிப் பாடிய ஒரு பாட­கர் இளை­ய­ராஜா. இசை அமைப்பு என்­ப­தன் ஒரு பரி­ணா­மம் தான் எந்­தப் பாடலை யார் பாட­வேண்­டும் என்று தீர்க்­க­மாய் முடிவு செய்­வது. உலக அள­வி­லான மாபெ­ரிய இசைக் கோர்வை கூட உள்­ளூர் அள­வில் முடங்­கிப் போய்­வி­டு­கிற அபா­யத்தை அதனை யார் பாடு­கி­றார்­கள் என்­கிற குரல் முடிவு செய்­யும். பொது நம்­ப­கத்­தின் இன்­னு­மோர் பல­வீ­னம் என்­பது எல்­லாப் பாட­லை­யும் யார் வேண்­டு­மா­னா­லும் பாடி விட­லாம் என்­பது. நேர­டி­யாக மறு­த­லிக்க முடி­யும் எஸ்.பி.பால­சுப்­ர­ம­ணி­யம் பாடிய பல பாடல்­களை ஜேசு­தாஸ் பாடி­யி­ருந்­தால் நாம் ரசித்­தி­ருப்­போமா என்ற கேள்­வியை தொடர்ந்து பாடல்­களை ரசித்து வரு­கி­ற­வர் வசமே விட்­டு­வி­ட­லாம்.
Trending Now: