இந்திய பங்குச்சந்தைகள் இன்று உயர்வு

20-06-2019 08:40 PM

மும்பை,

   வாரத்தின் நான்காம் நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் இன்று உயர்வுடன் வர்த்தகம் தொடங்கின. வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 489 புள்ளிகள் உயர்வுடன் முடிந்தது.

அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகித குறைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் சர்வதேச அளவில் பங்குச்சந்தைகளில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இத்தகைய சூழ்நிலையில் இன்று வர்த்தகம் துவங்கும் பொழுதே இந்திய பங்குச்சந்தையின் சென்செக்ஸ் ஏற்றத்துடன் தொடங்கியது. சென்செக்ஸ் 489 புள்ளிகள் உயர்ந்து 39,601.63. புள்ளிகளில் நிலைபெற்றது.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிப்டி 140.30 புள்ளிகள் உயர்ந்தது 11,831.75 புள்ளிகளில் நிலைபெற்றது.

மேலும் இன்று இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்திருப்பதும் பங்குச்சந்தைக்கு உயர்வுக்கு காரணமாகும்.

யெஸ் பாங்க் பங்கு மதிப்பு இன்று ஒரே நாளில் மட்டும் 10.94 சதவீதம் உயர்ந்துள்ளது.

சன் பார்மா, இன்டஸ்இன்ட் வங்கி,  ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, மாருதி, பஜாஜ் ஆட்டோ,  டாடா மோட்டார்ஸ் மற்றும் ஓ.என்.ஜி.சி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 4.01 சதவீதம் உயர்ந்தன.

மறுபக்கம் எச்.யூ.எல், எச்.டி.எப்.சி வங்கி, ஐடிசி மற்றும் என்டிபிசி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 0.26 சதவீதம் சரிந்தன.

இதற்கிடையில், ஜெட் ஏர்வேஸின் பங்குகள் கடந்த 13 அமர்வுகளில் கிட்டத்தட்ட 90 சதவீத வீழ்ச்சியை எட்டிய பின்னர், இன்று சரிவிலிருந்து மீண்டு 93 சதவீதம் உயர்ந்தது.

இந்திய ரூபாயின் மதிப்பு இன்று காலை (20-06-2019) வர்த்தகம் துவங்கியதும் அமெரிக்க டாலருக்கு எதிரான நாணய மாற்றின் போது  ரூ.69.47 காசுகளாக இருந்தது.  இன்று மாலையில் இந்திய ரூபாயின் மதிப்பு 3 காசுகள் அதிகரித்து  ரூ.69.44  காசுகளாக  நிலைபெற்றது

நேற்று வர்த்தக இறுதியில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு  69.68 காசுகளாக இருந்தது குறிப்பிடத் தக்கது.