கொல்கத்தா அருகே கோஷ்டி மோதல் : 2 பேர் உயிரிழப்பு; மூன்று பேர் காயம்

20-06-2019 07:10 PM

கொல்கத்தா

   கொல்கத்தா அருகே இருதரப்பு இடையே நடந்த மோதலில் ராம்பாபு ஷா என்பவர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.

மேற்கு வங்க மாநிலம் வடக்கு பர்கனஸ் மாவட்டத்தின் பத்போரா பகுதியில் இருதரப்பினர் இடையே பெரும் மோதல் வெடித்தது. மோதலின் போது இரு பிரிவினர், வெடிகுண்டுகளை வீசியதுடன் வானத்தை நோக்கி பல முறை துப்பாக்கியால் சுட்டு கொண்டனர்.

இந்த சம்பவம், புதிதாக கட்டப்பட்டு வரும் போலீஸ் நிலையத்திற்கு அருகே நடந்தது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். கடைகள், மார்க்கெட், வணிக வளாகங்கள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால், அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

இந்த வன்முறை சம்பவங்களில் ராம்பாபு ஷா என்பவர் உயிரிழந்தார். மற்றொருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இவ்விவகாரம் தொடர்பாக அவசர ஆலோசனைக் கூட்டத்தை முதலவர் மம்தா பானர்ஜி கூட்டி உள்ளார்.