மதுரவாயல் வழியாக சென்ற வெளியூர் பேருந்துகள் இனி வடபழனி வழியாகவே செல்லும்

20-06-2019 05:42 PM

சென்னை,

மதுரவாயல் வழியாக இயங்கி வந்த வெளியூர் பேருந்துகள் இனி வழக்கம் போல வடபழனி, தாம்பரம் வழியாகவே இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோயம்பேட்டில் இருந்து மதுரை, திருச்சி, நாகர்கோவில், கும்பகோணம், தஞ்சை உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் இனி வழக்கம் போல மாநகர சாலை வழியாகவே இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் நிலையக் கட்டுமானப் பணிகளுக்காக கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக கோயம்பேட்டில் இருந்து மதுரவாயல் பைபாஸ் சாலை வழியாக இயக்கப்பட்டு வந்தது.

வெளியூர் செல்லும் பேருந்துகள் இனி வரும் நாட்களில் வடபழனி, அசோக் பில்லர், தாம்பரம் வழியாக இயக்கப்படும் என்றும் பயணிகள் தங்கள் வசதிக்கேற்ப இதில் ஏதேனும் ஒரு பேருந்து நிறுத்தத்தில் அரசுப் பேருந்தில் ஏறிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இனிமேல் வெளியூர் செல்லும் பேருந்துகள் காலை 10:00 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும், இரவு 9:30 மணி முதல் காலை 7:00 மணி வரையிலும் வடபழனி, தாம்பரம் வழியாகச் செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.