தமிழக முதல்வர் பழனிசாமியை இந்திய தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள் சந்தித்து மனு

20-06-2019 05:06 PM

சென்னை

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இந்திய தொழில் கூட்டமைப்பு சங்கத்தினர் நேற்று முன்தினம் (ஜூன் 18ம் தேதி) சந்தித்துப் பேசினர்.

இந்திய தொழில் கூட்டமைப்பின் தமிழக மாநில கவுன்சில் தலைவர் எஸ்.சந்திரமோகன் தலைமையிலான குழு முதல்வரிடம் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளது.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்காக தனித் தொழில் கொள்கையை வகுக்குமாறு அவர்கள் முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர்.

மேலும், சென்னைக்கு அருகில் அமையவுள்ள பசுமை விமான நிலைய திட்டப் பணிகளை வேகப்படுத்துமாறும் முதல்வரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள இரண்டாம் நிலை நகரங்களுக்கு விமானப் போக்கு வரத்து வசதியை மேம்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்கும்படியும் முதலவரைக் கேட்டுக் கொண்டனர்.

தொழில் வர்த்தக விதிகளை எளிமைப்படுத்துதல்,, மாவட்ட வளர்ச்சி, அடிப்படை கல்வி, வேலைவாய்ப்புகள் உருவாக்குதல், திறன் மேம்படுத்துதல் மற்றும் எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு உதவியாக மேற்கொள்ள வேண்டிய  பல்வேறு முயற்சிகள் குறித்தும் இந்திய தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள் தமிழக முதல்வரிடம் விளக்கினர்.