உத்தரபிரதேசத்தில் கால்வாயில் வேன் கவிழ்ந்து விபத்து: 7 குழந்தைகள் மாயம்

20-06-2019 03:51 PM

லக்னோ,

  லக்னோ அருகே கால்வாயில் வேன் கவிழ்ந்த விபத்தில் 7 குழந்தைகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது என லக்னோ மாவட்ட மஜிஸ்திரேட் கவுஷால் ராஜ் ஷர்மா தெரிவித்தார்.

உத்தரபிரதேச மாநிலம் லக்னோ அருகே பத்வா கேதா கிராமத்தைச் சேர்ந்த 29 பேர் வேனில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஊருக்கு நேற்று இரவு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது கிராமத்தின் அருகே உள்ள இந்திரா கால்வாயில் உள்ள பாலத்தில் வேன் சென்று கொண்டிருந்த போது திடீரென ஒட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் கால்வாய்க்குள் கவிழ்ந்தது. இதையறிந்த உள்ளூர் கிராம மக்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த தேசிய பேரிடர் மீட்பு படையினரும் கால்வாயில் இறங்கி தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த 22 பேரை மீட்ட நிலையில் 7 குழந்தைகளை காணவில்லை. 

அவர்கள் தண்ணீரில் மூழ்கி அடித்து செல்லப்பட்டு இருக்கலாம்.  மாயமான குழந்தைகள் 5 முதல் 10 வயது உடையவர்கள் ஆகும்.

.கால்வாயில் மூழ்கிய குழந்தைகளை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் ஈடுபட்டுள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது என்று சர்மா கூறினார்.

இந்நிலையில் நீண்ட நேரம் தேடுதலுக்கு பிறகு 3 குழந்தைகளின் உடலை மீட்ப்பு படையினர் மீட்டனர்.

இதற்கிடையில், மீட்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மூத்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளதாக உ.பி. அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

7 குழந்தைகளும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.Trending Now: