தங்கம் விலை சவரனுக்கு ரூ. 512 உயர்வு

20-06-2019 03:35 PM

புது டில்லி,

தங்கத்தின் விலை இன்று ஓரே நாளில் சவரனுக்கு ரூ.512 உயர்ந்தது

சர்வதேச சந்தையில் சில தினங்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது. முன்னதாக கடந்த ஜனவரி மாதம் ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 25 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று மீண்டும் சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 25 ஆயிரத்தை தாண்டியது. .

சென்னையில் நேற்று மாலை 22 காரட் தங்கம் சவரனுக்கு ரூ. 25,176க்கு விற்கப்பட்டது.

இந்நிலையில், இன்று ஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 512 ரூபாய் உயர்ந்துள்ளது.

சென்னை விலை

இன்றைய காலை நிலவரப்படி சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3,211 ஆகவும், சவரனுக்கு ரூ. 25,688 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் 24 காரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3,367 ஆகவும், சவரனுக்கு ரூ.26,936 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

சென்னையில் நேற்று மாலை 1 கிராம் வெள்ளி 40.30 காசுகளுக்கு விற்பனையானது. 

இன்று வெள்ளி கிராமுக்கு 60 காசுகள் உயர்ந்து 40.90 காசுகளுக்கும் காசுகளுக்கும், கிலோ ரூ.40,900-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.