குடும்பத் தற்கொலையை தடுப்பது எப்படி...! – குட்டிக்கண்ணன்

20-06-2019 02:29 PM

வேகா­மங்­க­லத்தை சேர்ந்த சங்­கர், - நித்யா தம்­ப­தி­யி­ன­ருக்கு, திரு­ம­ண­மாகி 10 ஆண்­டு­க­ளான நிலை­யில் அஸ்­வினி என்ற ஏழு வயது மக­ளும், தனுஷ் என்ற 4 வயது மக­னும் இருந்­த­னர். கண­வன், மனைவி இரு­வ­ருக்­கும் அவ்­வப்­போது, கருத்து வேறு­பாட்­டால் அடிக்­கடி தக­ராறு ஏற்­பட்டு வந்­துள்­ளது. இந்­நி­லை­யில், கடந்த மூன்று நாட்­க­ளாக மீண்­டும் தக­ராறு ஏற்­பட்­ட­தால் வீட்­டில் தனி­யாக இருந்த நித்யா தமது மகன், மக­ளுக்கு மற்­றும் ஆகி­யோ­ருக்கு விஷத்தை கொடுத்து விட்டு அவரும் துாக்­கிட்டு தற்­கொலை செய்து கொண்­ட­தாக கூறப்­ப­டு­கி­றது.நாகப்­பட்­டி­ணம் படித்து போலீஸ் ஆக நினைத்த சிறு­வ­னின் கனவு கல்­விக்­கட்­ட­ணம் கட்ட முடி­யா­மல் சிதைந்து போனது. மக­னின் ஆசையை நிறை­வேற்ற முடி­ய­லையே என்ற வேத­னை­யில் நகை தொழி­லாளி ஒரு­வர் குடும்­பத்­தோடு விஷம் குடித்து தற்­கொலை செய்து கொண்­டார்இப்­படி தினந்­தோ­றும் தமி­ழ­கத்­தில் தற்­கொ­லை­கள் அதி­க­ரித்து கொண்டே இருக்­கின்­றன. இதை விட கொடுமை என்­னென்ன வென்­றால் தற்­போது குடும்­ப­தோடு தற்­கொலை செய்து கொள்­வது அதி­க­ரித்து வரு­கி­றது. இவற்­றி­லி­ருந்து தப்ப வழி இல்­லையா என்று மன­நல மருத்­து­வர் ஆனந்த பால­னி­டம் கேட்­ட­போது...

குடும்­பத்­தோடு தற்­கொலை  எண்­ணம் ஏன்...

"குடும்­பத்­து­டன் தற்­கொலை செய்­வ­தற்­குப் பெரும்­பா­லும் கடன் தொல்லை, அத­னால் எழும் நெருக்­க­டி­தான் பிர­தான கார­ண­மாக இருக்­கி­றது. பொரு­ளா­தா­ரம் சார்ந்த நெருக்­க­டி­கள், கடன் சுமை போன்­றவை அனை­வ­ருக்­கும் பொது­வா­ன­து­தான். ஆனால், அது பெற்ற பிள்­ளை­க­ளைக் கொன்­று­விட்டு குடும்­பத்­து­டன் தற்­கொலை செய்­வது வரை செல்­வது ஏன் என்ற கேள்வி அனை­வர் மத்­தி­யி­லும் எழு­கி­றது.

குடும்­பத்­து­டன் தற்­கொலை செய்­யும் இது­போன்ற நிலை­களை, நாங்­கள் `பேமி­லி­சைட்' என்­போம். தான் மட்­டும் இறந்­து­விட்­டால், தனக்­குப் பிறகு தன் குடும்­பம் பொரு­ளா­தார ரீதி­யாக மிக­வும் பாதிக்­கப்­ப­டும் என்­கிற குடும்­பத்­தின் மீதான அதீத பாசமே இது போன்ற குடும்­பத் தற்­கொ­லை­க­ளுக்­குக் கார­ணம்.

இது­போன்ற சம்­ப­வங்­கள் நடை­பெ­றா­ம­லி­ருக்க குடும்ப உறுப்­பி­னர்­கள் என்ன செய்ய வேண்­டும் என்­றால் தற்­கொலை

குடும்­பத்­தின் தலை­வ­ராக இருக்­கும் ஆண் நபர்­தான் இது­போன்ற முடி­வு­களை பெரும்­பா­லும் எடுப்­பார்­கள். அவர்­கள்­தான் தற்­கொலை பற்­றிப் பேச ஆரம்­பிப்­பார்­கள். பொது­வாக குடும்­பத்­து­டன் தற்­கொலை செய்­து­கொள்ள முடி­வெ­டுப்­ப­தற்­குப் பல கார­ணங்­கள் இருக்­கும். அதில் முதன்­மை­யா­ன­வை­யா­கப் பொரு­ளா­தார நெருக்­க­டி­யும் கடன் சுமை­யும் கார­ண­மா­கச் சொல்­லப்­ப­டு­கி­றது. அப்­போது குடும்­பத்­தின் தலை­வர் தான் மட்­டும் இறந்­து­போ­னால், தனக்­குப் பிறகு குடும்­பத்­தி­னர் கஷ்­டப்­ப­டு­வார்­கள் என்று யோசிப்­பார்­கள். தனது இறப்­புக்­குப் பிறகு அவர்­கள் கஷ்­டப்­ப­டக் கூடாது என்­கிற தவ­றான எண்­ணத்­தில் அவர்­க­ளை­யும் தற்­கொ­லை­யில் ஈடு­ப­டுத்­து­வார்­கள். ஏறக்­கு­றைய அதைக் கொலை என்­று­தான் சொல்ல வேண்­டும்.  

தங்­க­ளது குடும்ப உறுப்­பி­னர்­க­ளில் யாரா­வது தவறு ஏதும் செய்­தாலோ, குற்­றச்­செ­யல்­க­ளில் ஈடு­பட்­டாலோ குடும்ப கவு­ர­வம் பறி­போய்­விட்­ட­தா­கவோ, மானம் போய்­விட்­ட­தா­கவோ நினைப்­பார்­கள். இத­னா­லும் சிலர்  குடும்­பத்­து­டன் தற்­கொலை செய்­து­கொள்ள முடி­வெ­டுப்­பார்­கள். அடுத்­த­தாக, குடும்ப உறுப்­பி­னர்­கள் மீது ஏற்­ப­டும் ஆத்­தி­ரத்­தில், கோபத்­தில் அவர்­க­ளைக் கொன்­று­விட்டு தானும் தற்­கொலை செய்து கொள்­வார்­கள். இது­போன்ற கார­ணங்­க­ளுக்­கா­கத்­தான் குடும்­பத் தற்­கொ­லை­கள் நடக்­கின்­றன. குடும்­பத்­து­டன் தற்­கொலை செய்­யும் முடிவை எடுக்­கும் குடும்­பத்­தின் தலை­வ­ருக்கு மதுப்­ப­ழக்­கம் இருந்­தால், அவர் அந்த முடிவை வெகு எளி­தாக எடுக்க வாய்ப்பு அதி­கம். ஏனென்­றால் மதுப்­ப­ழக்­கம் மூலம் தன்னை அழித்­துக்­கொள்­வ­தில் அவ­ருக்கு எந்­த­வித அச்­ச­மும் இருக்­காது. அத­னால் தன் குடும்ப உறுப்­பி­னர்­களை தற்­கொ­லைக்­குத் தூண்­டு­வ­திலோ, கொலை செய்­வ­திலோ அவ­ருக்­குப் பெரிய பயமோ, வருத்­தமோ இருக்­காது.

கொலை

ஒரு­வர் தன் தாயைக் கொலை செய்­வது `மேட்­ரி­சைட்'; தந்­தை­யைக் கொலை செய்­வது 'பேட்­ரி­சைட்'; பெற்­றோ­ரைக் கொலை செய்­வது 'பேரி­சைட்­எ­னப்­ப­டு­கி­றது. உடன் பிறந்­த­வர்­க­ளைக் கொலை செய்­வது 'சிப்­ளி­சைட்' எனப்­ப­டு­கி­றது. அதி­லும் சகோ­த­ர­ரைக் கொலை செய்­வது 'ப்ராட்­ரி­சைட்' என­வும் சகோ­த­ரி­யைக் கொலை செய்­வது 'சோரோ­ரி­சைட்' என­வும் வகைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. பெற்ற குழந்­தை­யைக் கொலை செய்­வது 'பிலி­சைட்' என­வும், மனை­வி­யைக் கண­வன் கொலை செய்­வது 'யூக்­ஸோ­ரி­சைட்' என­வும், கண­வனை மனைவி கொலை செய்­வது 'மேரிட்­டி­சைட்' என­வும் குடும்­பக் கொலை­யில் பல வகை­கள் இருக்­கின்­றன.

குடும்ப உறுப்­பி­னர்­க­ளைக் கொலை செய்­வ­தோடு மட்­டு­மல்­லா­மல், இறு­தி­யா­கத் தாங்­க­ளும் தற்­கொலை செய்­து­கொண்டு இறந்து போவார்­கள். அவர்­க­ளுக்கு குடும்ப உறுப்­பி­னர்­களை கஷ்­டப்­ப­டுத்த வேண்­டும் என்­கிற எண்­ணம் துளி­கூட இருக்­காது. மாறாக, தான் இல்­லா­விட்­டால் தன் குடும்­பத்­தி­னர் உண­வுக்­கும், கடனை அடைக்­க­வும் மிக­வும் சிர­மப்­ப­டு­வார்­களே என்­கிற எண்­ணத்­தில்­தான் அப்­ப­டிச் செய்­கி­றார்­கள். குடும்­பத் தற்­கொ­லை­க­ளைத் தவிர்க்க ஒரே வழி­தான் இருக்­கி­றது. குடும்­பத்­தில் யாருக்­கா­வது அப்­ப­டி­யோர் எண்­ணம் லேசாக எழுந்­தா­லும், உட­ன­டி­யாக அவரை ஒரு மன­நல மருத்­து­வ­ரி­டம் அழைத்­துச் சென்­று­வி­டு­வது நல்­லது. முறை­யாக கவுன்­ச­லிங் கொடுத்து அந்த எண்­ணத்தை நிச்­ச­ய­மாக மாற்­றி­விட முடி­யும். கண­வனை, அப்­பாவை எப்­படி மன­நல மருத்­து­வ­ரி­டம் கூட்­டிச் செல்­வது என்­கிற தயக்­கமோ, கவ­னக்­கு­றைவோ இருந்­தால் அது நிச்­ச­ய­மாக மிகப்­பெ­ரிய விப­ரீ­தத்­தில் கொண்­டு­போய் விட்­டு­வி­டும். தவிர குடும்ப உறுப்­பி­னர்­கள் நம்­பிக்­கை­யான வார்த்­தை­க­ளைப் பேசி அவர்­களை மாற்­ற­லாம்.

உதவி எந்­த­வொரு பிரச்­னைக்­கும் தீர்வு இருக்­கி­றது. அதை அனை­வ­ரும் உணர்ந்­து­கொண்டு, நெருக்­க­டி­க­ளைச் சமா­ளிக்­கக் கற்­றுக்­கொண்டு, அடுத்த கட்­டத்தை நோக்கி நகர ஆரம்­பித்­தால் இது­போன்ற தற்­கொ­லை­க­ளைத்  தடுக்­க­மு­டி­யும்'' என்­கி­றார்


10,000 பேர்

இந்­தி­யா­வில் ஆண்­டுக்கு சுமார் ஒரு லட்­சம் பேரும், தமிழ்­நாட்­டில் சுமார் 10,000 பேரும், சென்­னை­யில் 1300 பேரும் தற்­கொலை செய்­துக் கொள்­கி­றார்­கள் என்­கி­றது புள்ளி விவ­ரம். ஆண்டு தோறும் சுமார் 2 கோடி பேர் தற்­கொலை முயற்­சி­யி­லி­ருந்து தப்­பு­கி­றார்­கள்.

Trending Now: