பணம் இல்லா மாணவர்களை படிக்க வைக்க ரெடி....! – சுமதி

20-06-2019 02:21 PM

ஒரு­வன் பசியை ஆற்ற மீனை பிடித்து தரு­வதை விட மீன் பிடிக்­கக் கற்­றுத் தரு­வதே சிறந்­தது.கற்­றலே ஒரு­வ­ரின் எதிர்­கா­லத்தை தீர்­மா­னிக்­கும்; அந்த நோக்­கில் பணத்­தா­லும் சமூக வேற்­று­மை­யி­னா­லும் பின்­தங்­கி­யுள்ள குழந்­தை­க­ளுக்கு எதிர்­கா­லம் தரும் நோக்­கில் பள்­ளிக் கல்­வியை வழங்க 'தட்ஸ் மை சைல்டு' (Thats my child) என்­னும் அரசு சாரா தன்­னார்­வ­ளர் அமைப்பு இயங்கி வரு­கி­றது.

'தட்ஸ் மை சைல்டு' என்­னும் அமைப்­பின் நிறு­வ­னர் வானதி. கல்­வியை தொடர தான் பட்ட கஷ்­டங்­களை மற்ற குழந்­தை­க­ளும் படக்­கூ­டாது என்­னும் சமூக அக்­க­ரை­யில் இவ்­வ­மைப்பை துவங்­கி­யுள்­ளார் இவர்.

“என் சிறு­வ­ய­தில் நிதி­யால் என் படிப்பை தொடர முடி­யாத நிலை ஏற்­பட்­ட­போது என் நண்­பர் மூலம் தான் நான் படித்­தேன். கல்­வி­யால் தான் இன்று நான் பல நாடு­க­ளில் பணிப்­பு­ரிந்து இன்று மற்­ற­வர்­க­ளுக்கு கல்வி கொடுக்­கும் நிலை­யில் உள்­ளேன்,” என துவங்­கி­கு­றார் வானதி.

Thats my child அமைப்­பின் வேலை அரசு மற்­றும் அரசு சார்ந்த பள்­ளி­யில் படிப்பை தொடர முடி­யாத, கல்­வி­யில் முன்­னேற முடி­யாத பள்ளி மற்­றும் மாண­வர்­களை தேர்ந்­தெ­டுத்து 7 வித­மான திட்­டங்­கள் கீழ் மாண­வர்­களை வகைப்­ப­டுத்தி கல்­வியை தொடர செய்­கின்­ற­னர். கடந்த 5 வரு­டங்­க­ளாக இவ்­வ­மைப்பு செயல்­பாட்­டில் இருந்து வரு­கின்­றது.

“எங்­க­ளு­டைய முக்­கி­யக் குறிக்­கோள் என்­பது தான். நிதியை கார­ணம் காட்டி அல்­லது குடும்ப சூழ­லால் எந்த குழந்­தை­யும் படிப்பை நிறுத்­தி­வி­டக் கூடாது," என்­கி­றார் வானதி.

’கன­வைத்­தொடு திட்­டம்’ மூலம், அரசு சார்ந்த பள்­ளி­யி­லி­ருந்து பெற்­றோர்  இல்­லாத அல்­லது தாய் வளர்ப்­பில் மட்­டும் இருக்­கும் பெண் குழந்­தை­களை தேர்ந்­தெ­டுத்து கல்வி கட்­ட­ணம் செலுத்­து­வது, வரு­ட­ மு­ழு­வ­தும்

படிப்­பிற்கு வழி­காட்­டி­யாக செயல்­ப­டு­கி­றது இவ்­வ­மைப்பு. அடுத்து அக­தி­க­ளாக இருக்­கும் குழந்­தை­க­ளுக்­கும் வழி­காட்­டி­யா­க­வும் பள்­ளிப் படிப்பை தொடர கட்­ட­ணம் செலுத்­தி­யும் வரு­கின்­ற­னர்.

படிப்­பைத் தாண்டி வாழ்க்கை வழி­காட்­டல், மன­நல ஆல­சோனை ஆகி­ய­வற்­றை­யும் இவ்­வ­மைப்பு பார்த்­து­கொள்­கி­றது. மேலும் படிப்­பில் ஆர்­வ­மில்­லாக் குழந்­தை­களை பள்­ளிக்கு வர­வ­ழைக்­கும் ஸ்போர்ட்ஸ் டே போன்ற விளை­யாட்டு நிகழ்ச்­சி­க­ளை­யும் எடுத்து நடத்­து­கின்­ற­னர்.

“இதைத் தாண்டி பள்­ளிக்கு வரும் மாண­வர்­கள் தேர்­வுக்­கான சிறப்பு வகுப்­பு­க­ளில் பங்­கேற்­ப­தில்லை. இதற்­குக் கார­ணம் தொலை­வில் இருந்து வரும் குழந்­தை­கள் பசி­யால் இருப்­ப­தால் தான்.”

இத­னால் பொதுத் தேர்வு எழு­தும் மாண­வர்­க­ளுக்கு சிற்­றுண்­டி­க­ளை­யும் வழங்­கு­கி­றது இவ்­வ­மைப்பு. அடுத்து 7 மற்­றும் 8 ஆம் வகுப்பு படிக்­கும் மாண­வர்­க­ளுக்கு பொறி­யி­யல் கல்­லூரி உடன் இணைந்து புத்­த­கத்­தில் இல்லா அறி­வி­யல் பிராக்­டி­கல் வகுப்பு எடுக்­கின்­ற­னர்.

சென்னை, திரு­வண்­ணா­மலை, திரு­நெல்­வேலி, கோவை என தமி­ழ­கத்­தில் சுற்­றி­யுள்ள இடங்­க­ளில் தன்­னார்­வ­ளர்­களை வைத்து பள்­ளி­களை பார்த்­துக்­கொள்­கின்­ற­னர்.

“இந்த இடங்­க­ளில் மாண­வர்­க­ளுக்கு பள்­ளிக்கு வரும் வாய்ப்பு இருக்­கி­றது, அத­னால் நம்­மால் அவர்­களை முன்­னேற்­றும் வாய்ப்பு எங்­க­ளுக்­குக் கிடைத்­தது. ஆனால் பொள்­ளாச்­சி­யில் இருந்து ஓர் அழைப்பு வந்­தது எங்­கள் மாண­வர்­கள் பள்­ளிக்கே வரு­வ­தில்லை என்று.”

பள்­ளிக்கு வந்­தால் தானே அவர்­களை படிப்பை தொடர விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்த முடி­யும். பள்­ளிக்கு வராத குழந்­தை­களை என்ன செய­லாம் என்­பதை கணிக்க இந்த குழு பொள்­ளாச்சி சென்­றது. பொள்­ளாச்சி கிரா­மத்­தில் நரிக் குற­வர், சர்­கஸ் பணி­பு­ரி­யும் குழந்­தை­க­ளுக்கு என தனி அரசு இட ஒதுக்­கீட்­டில் படிக்­கும் குழந்­தை­கள் இவர்­கள். சர்­கஸ் வேலை செய்­யும் பெற்­றோர்­க­ளின் வரு­மா­னம் தங்­கள் பிள்­ளை­க­ளின் கையில் இருப்­ப­தால் பள்­ளிக்கு அனுப்­பா­மல் குழந்­தை­களை பணிக்கு அனுப்­பி­யுள்­ள­னர்.

“தங்­கள் வாழ்­வா­தா­ரத்தை பார்த்­துக் கொள்ள சர்­கஸ் செய்­ய­வும் பிச்சை எடுக்­க­வும் குழந்­தை­களை அனுப்­பி­வி­டு­கின்­ற­னர். இத­னால் குழந்­தை­கள் பள்­ளிக்கு வரு­வ­தில்லை. இத­னால் அப்­பள்­ளியை தத்­தே­டுத்­தோம்.”

எல்­லாக் குழந்­தை­க­ளுக்­கும் தங்­கள் வாழ்­கையை வாழ உரிமை உள்­ளது அத­னால் மன­நல ஆலோ­ச­கரை வைத்து பெற்­றோருக்கு ஆலோ­சனை வழங்­கி­னர். அடுத்த சந்­த­தி­ய­னர் நல்ல நிலை­மைக்கு முன்­னேற கல்வி அவ­சி­யம் என்­பதை தீவி­ர­மாக பெற்­றோருக்கு உணர்த்­தி­னர். ஒரு வரு­டம் முழு­வ­தும் அப்­பள்­ளிக்கு சேவை செய்து உடுத்த துணி கூட இல்­லாத அக்­கு­ழந்­தை­க­ளுக்கு திருப்­பூர் கார்­மேன்ட்­ஸின் ஸ்பான்­சர்­ஷிப் மூலம் ஆடை­கள் வாங்­கிக் கொடுத்து வேண்­டிய வச­தி­கள் செய்து பள்­ளிக்கு வர­வைத்­த­னர்.

மேலும் பண்­டிகை நாள், ஸ்போர்ட்ஸ் டே என அனைத்­தை­யும் பள்­ளி­யில் நடத்­தி­னர். பெற்­றோர் குழந்­தை­க­ளுக்கு மருத்­துவ முகா­மும் நடத்­தி­னர். இத­னால் அர­சுத் தரப்­பில் இருந்து அப்­ப­ளிக்­கும் நன்­கொடை கிடைத்­துள்­ளது. மாண­வர்­க­ளும் பள்­ளிக்­கும் தொடர்ந்து வரு­கின்­ற­னர். இதுவே ’தட்ஸ் மை சைல்­டி’ன் வெற்­றி­யாக  வானதி பார்க்­கி­றார்.

10 மாண­வர்­க­ளில் துவங்கி 500 மாண­வர்­க­ளுக்கு மேல் படிப்பை தொடர இவ்­வ­மைப்பு உத­வி­யுள்­ளது. நுற்­றுக்­க­ணக்­கான தன்­னார்­வ­லர்­கள் இருந்­தும் இவ்­வ­மைப்பு தமி­ழ­கத்தை சுற்­றி­லும் இன்­னும் பல தன்­னார்­வ­லர்­களை எதிர்­பார்த்­து காத்திருக்கிறது.