விண்வெளி பயிற்சிக்கு தமிழ் மாணவி! – லட்சுமி

20-06-2019 02:20 PM

வீட்டில் விளக்கு இல்லாமல் படித்து முதலிடம், ஏழ்மையிலும் சாதனை. இப்படி பல மாணவர்கள் தங்களின் தனித் திறமையால் உயர்ந்த பல கதைகளை நாம் கேட்டிருப்போம். இவர்களின் வரிசையில் தேனியைச் சேர்ந்த மாணவி உதயகீர்த்திகாவும் தனித்து விளங்கி, பெரும் சாதனை படைத்துள்ளார்.

தேனி மாணவி கீர்த்­திகா

தேனி மாவட்­டம் அல்­லி­ந­க­ரம் பகு­தி­யைச் சேர்ந்­த­வர், உத­ய­கீர்த்­திகா. இவ­ரின் தந்தை தாமோ­த­ரன் எழுத்­தா­ள­ராக உள்­ளார். அல்­லி­ந­க­ரத்­தில் உள்ள அரசு உத­வி­பெ­றும் பெண்­கள் பள்­ளி­யில் தமிழ் வழி­யில் கல்வி பயின்ற மாணவி, மறைந்த முன்­னாள் குடி­ய­ர­சுத் தலை­வர் அப்­துல் கலா­மால் ஈர்க்­கப்­பட்டு, இவ­ருக்­கும் விஞ்­ஞான ஆசை வந்­துள்­ளது. ஏழ்­மை­நி­லை­யில் மிக­வும் சிர­மப்­பட்டே தன் பள்­ளிப்­ப­டிப்பை முடித்­துள்­ளார்.  

2012-ம் ஆண்டு, மகேந்­தி­ர­கி­ரி­யில் இஸ்ரோ சார்­பில் நடத்­தப்­பட்ட விண்­வெளி ஆராய்ச்­சிக் கட்­டு­ரைப் போட்­டி­யில் கலந்­து­கொண்டு மாநில அள­வில் முதல் பரிசு பெற்­றுள்­ளார்.  2014-ம் ஆண்டு, அதே போன்ற மற்­றொரு போட்­டி­யி­லும் முதல் பரிசு பெற்று அசத்­தி­யுள்­ளார். இவ­ரின் கட்­டு­ரை­யைக் கண்டு வியந்த ஆய்­வா­ளர்­கள், கீர்த்­தி­காவை விண்­வெளி ஆராய்ச்சி படிக்­கும்­படி ஊக்­கப்­ப­டுத்­தி­யுள்­ள­னர். இவை அனைத்­தும் கீர்த்­தி­கா­வுக்கு விண்­வெளி ஆராய்ச்­சி­யின் மீதான ஆசையை மேலும் தூண்­டி­யுள்­ளது.

கீர்த்­திகா

பன்­னி­ரண்­டாம் வகுப்பு முடித்­த­வு­டன் விண்­வெளி ஆராய்ச்சி தொடர்­பான மேல் படிப்­பைத் தொடர்­வ­தற்­கா­கப் பணம் இல்­லா­மல் தவித்­துள்­ளார். பின்­னர், தன் தந்­தை­யு­டன் சேர்ந்து அல்­லி­ந­க­ரம் முழு­வ­தும் தெரிந்­த­வர்­க­ளின் உத­வி­யைப் பெற்று, உக்­ரை­னில் உள்ள கார்­கியூ நேஷ­னல் ஏரோஸ்­பேஸ் யுனி­வர்­சிட்­டி­யில் சேர்ந்­துள்­ளார். அங்­கும் சிறந்து படித்து 90-க்கும் அதி­க­மாக சத­வி­கி­தத்­தில் தேர்ச்­சி­பெற்­றுள்­ளார்.இதை­ய­டுத்து, கீர்த்­தி­கா­வுக்கு போலந்து நாட்­டின் அன­லாக் வானி­யல் பயிற்சி மையத்­தில், பிற நாட்டு விண்­வெளி வீரர்­க­ளு­டன் சேர்ந்து பயிற்­சி­ பெ­ற­வும், விண்­வெளி ஆராய்ச்சி மேற்­கொள்­ள­வும் வாய்ப்பு கிடைத்­துள்­ளது. சர்­வ­தேச அள­வில் 20 மாண­வர்­கள் இந்­தப் பயிற்­சிக்­கா­கத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டுள்­ள­னர். அவர்­க­ளில், இந்­தி­யா­வி­லி­ருந்து கீர்த்­திகா மட்­டும் செல்­கி­றார்.

இது­பற்றி பேசிய கீர்த்­திகா, “ இது­வரை இந்­தி­யா­வைச் சேர்ந்த கல்­பனா சாவ்லா மற்­றும் சுனிதா வில்­லி­யம்ஸ் ஆகிய இரண்டு பெண்­கள் விண்­வெ­ளிக்­குச் சென்­றுள்­ள­னர்.  அவர்­கள், அமெ­ரிக்­கா­வின் நாசா­வில் இருந்­து­தான் சென்­ற­னர். நானும் அவர்­க­ளைப் போல் விண்­வெ­ளிக்­குச் செல்ல வேண்­டும். ஆனால், எனக்கு இந்­தி­யா­வின் இஸ்ரோ தளத்­தில் இருந்து விண்­வெ­ளிக்­குச் செல்ல வேண்­டும் என்­ப­து­தான் ஆசை. அதுவே என் லட்­சி­யம்” என்­கின்­றார்

Trending Now: