கலைமாமணி வாமனன் எழுதும் ‘ஆங்கிலம் ரொம்ப ஈஸி’ 20–06–19

20-06-2019 02:18 PM

தவறில்லாத வாக்கியங்கள்...!

அவன் சொல்­கி­றான்….He says…

அவள் சொல்­கி­றான்….She says…

அவர்­கள் சொல்­கி­றார்­கள்…They say…

அவன் சொன்­னான்…He said…

அவர்­கள் சொன்­னார்­கள்…They said…

அவன் சொல்­வான்…He will say….

அவள் சொல்­லு­வாள்….She will say…

அவர்­கள் சொல்­வார்­கள்…They will say…

மேற்­படி தொடர்­க­ளில் ஒரு பிர­தி­பெ­யர்ச்­சொல் (புரோ­ந­வுன் pronoun)  காணப்­ப­டு­கி­றது (அவன், அவள், அவர்­கள்….He, She, They). இந்­தத் தொடர்­களை ஒரு வாக்­கி­ய­மாக நிறைவு செய்ய குட் திங்ஸ் (good things) என்று முடிக்­கி­றோம் என்று வைத்­துக்­கொள்­ளுங்­கள்.  

He says good things (அவன் நல்ல விஷ­யங்­கள் சொல்­கி­றான்)

She says good things (அவள் நல்ல விஷ­யங்­கள் சொல்­கி­றாள்)

They say good things (அவர்­கள் நல்ல விஷ­யங்­கள் சொன்­னார்­கள்)

He said good things (அவன் நல்ல விஷ­யங்­கள் சொன்­னான்)

She said good things (அவள் நல்ல விஷ­யங்­கள் சொன்­னாள்)

They said good things (அவர்­கள் நல்ல விஷ­யங்­கள் சொன்­னார்­கள்)

He will say good things (அவன் நல்ல விஷ­யங்­கள் சொல்­வான்)

She will say good things (அவள் நல்ல விஷ­யங்­கள் சொல்­வாள்)

They will say good things (அவர்­கள் நல்ல விஷ­யங்­கள் சொல்­வார்­கள்) ….என்று வாக்­கி­யங்­கள் அமை­யும்.

மேற்­படி வாக்­கி­யங்­கள் நிகழ்­கா­லம் (present tense, ஸே, ஸேஸ் say, says), கடந்த காலம் (past tense, ஸெட்d), மற்­றும் வருங்­கா­லம் (future tense, வில் ஸே) ஆகிய காலங்­க­ளில் அமைந்­தி­ருக்­கின்­றன. இந்­தக் காலங்­க­ளில் (tenses) ஆங்­கில வாக்­கிய அமைப்பு எப்­படி அமைந்­தி­ருக்­கி­றது என்று கவ­னித்­துக் கிர­கித்­துக் கொள்­ளுங்­கள்.

ஆங்­கி­லம் பேசும் போதும் எழு­தும் போதும், எழு­வாய்க்­கும் (சப்­ஜெக்ட்t)  வினைச்­சொல்­லுக்­கும் (வர்ப்b) ஒத்­தி­சைவு இருக்­க­வேண்­டும் என்­பது முக்­கி­யம்.

gகோ (go) என்­பது செல்­வ­தைக் குறிக்­கும் வினைச் சொல். இது நிகழ்­கால வினைச்­சொல்­லாக வாக்­கி­யம் இப்­படி அமை­யும்:

ஐ gகோ டு த bபீச் எவ்ரி dடே (I go to the beach every day). நான் ஒவ்­வொரு நாளும் கடற்­க­ரைக்­குப் போகி­றேன்.

நான் இந்த இடத்­தில் மீண்­டும் மீண்­டும் நினை­வு­ப­டுத்­தும் விஷ­யம்…கோ go என்­பது நிகழ்­கால வினைச்­சொல் வடி­வ­மா­னா­லும், மேற்­படி வாக்­கி­யத்­தில் அது நிகழ்­கா­லத்­தில் நடப்­பதை மட்­டும் குறிக்­க­வில்­லை…­­­ந­டை­மு­றை­யில் உள்­ளதை, வழக்­க­மான  விஷ­யத்­தைக் குறிப்­பி­டு­கி­றது.

தற்­கா­லத்­தில், ஒவ்­வொரு நாளும் பீச்­சுக்­குப்­போ­கும் வழக்­கம் கொண்­டுள்­ளேன் என்று பொருள்.

ஐ gகோ டு த bபீச் எவ்ரி dடே. I go to the beach every day. நான் போகி­றேன் பீச்­சுக்கு ஒவ்­வொரு நாளும்,

வீ gகோ டு த bபீச் எவ்ரி dடே. We go to the beach every day. நாங்­கள் போகி­றோம் பீச்­சுக்கு ஒவ்­வொரு நாளும்.

யூ gகோ டு த bபீச் எவ்ரி dடே. You go to the beach every day. நீ போகி­றாய் பீச்­சுக்கு ஒவ்­வொரு நாளும்.

யூ ஆல் gகோ டு த bபீச் எவ்ரி dடே.. You all go to the beach every day. நீங்­கள் அனை­வ­ரும் போகி­றீர்­கள் பீச்­சுக்கு ஒவ்­வொரு நாளும்.

ஹீ gகோஸ் டு த bபீச் எவ்ரி dடே. He goes go to the beach every day. அவன் போகி­றான் பீச்­சுக்கு ஒவ்­வொரு நாளும்.

ஷீ gகோஸ் டு த bபீச் எவ்ரி dடே. She goes go to the beach every day. அவள் போகி­றாள் பீச்­சுக்கு ஒவ்­வொரு நாளும்.

தே gகோ டு த bபீச் எவ்ரி dடே. They go to the beach every day. அவர்­கள் போகி­றார்­கள் பீச்­சுக்கு ஒவ்­வொரு நாளும்.

ஒரு இடத்­திற்கு ஒரு­வர் வந்­தி­ருக்­கி­றார் என்று கொள்­ளுங்­கள். வேலை முடிந்­தது, நான் போகி­றேன் என்று அவர், 'ஐ gகோ' என்று கூறு­வது சரி­யான ஆங்­கி­லம் ஆகாது. நிகழ்­கா­லத்­தில் தான் அவர் செல்­வது அமை­யும் என்­றால்­கூட இப்­ப­டிக் கூறு­வது ஆங்­கில வழக்­கம் அல்ல.

நண்­பர் ஒரு­வர் வெளியே கிளம்­பு­கி­றார்.

அவ­ரு­டன் மற்­ற­வர் செல்ல விரும்­பு­கி­றார் என்­றால்…'ஷெல் ஐ கோ வித் யூ? ' (Shall I go with you?) என்று, 'உன்­னு­டன் நான் வரட்­டமா' என்று கேட்க வேண்­டி­யி­ருக்­கும். மிக­வும் தெரிந்த நண்­பர் என்­றால், 'வென் யூ கோ ஐ கோ வித் யூ' (When you go I go with you) என்று கூற­லாம். 'நீ செல்­லும் போது உன்­னு­டன் நானும் செல்­கி­றேன்' என்று பொருள்.

'gகோ அண்ட் வேக் அப் ராமு' (Go and wake up Ramu) என்று மக­னி­டம் ஒரு தாய் கூறி­னார்.

'போ, ராமுவை எழுப்பு' என்று பொருள்.

'gகோ நவ், யூ ஆர் கெட்­டிங் லேட் ஃபார் த டிரைன்' (Go now, you are getting late for the train என்­றால், 'இப்­போது செல், உனக்கு டிரை­னுக்கு லேட்­டா­கிக்­கொண்­டி­ருக்­கி­றது'  என்று பொருள்.

ஒரு­வரை நாம் பார்க்­கி­றோம். அவர் தன்னை இந்த வகை­யில் அறி­மு­கம் செய்­து­கொள்­கி­றார் : ''ஐ கம்ஸ் ஃபிரம் அ வில்­லேஜ் நியர் திரு­நெல்­வேலி. ஐ கரன்ட்லி வர்க்ஸ்     ஃபார் ஆன் ஐ.டி.கம்­பெனி. ஐ ஹேஸ் திரி கிdட்ஸ். ஐ லைக்ஸ் டு dடிரிங்க் கொஃப்பீ அண்ட் ரீdட் bபுக்ஸ்…'' I comes from a village near Tirunelveli. I currently works for an IT company. I has three kids. I likes to drink coffee and read books. ''நான் திரு­நெல்­வேலி அருகே உள்ள ஒரு கிரா­மத்­தி­லி­ருந்து வரு­கி­றேன். நான் தற்­பொ­ழுது ஒரு ஐ.டி.நிறு­வ­னத்­தில் வேலை பார்க்­கி­றேன். எனக்கு மூன்று பிள்­ளை­கள் உள்­ளார்­கள். எனக்­குக் காபி குடிக்க பிடிக்­கும், படிக்­கப் பிடிக்­கும்''.

தமிழ் மொழி பெயர்ப்பு சரி­யா­கத்­தான் இருக்­கி­றது ஆனால் ஆங்­கில அறி­மு­கத்­தில் சர­மா­ரி­யா­கத் தவ­று­கள் உள்­ளன.

I comes from a village near Tirunelveli என்­பது தவறு 'ஐ கம் ஃபிரம் அ வில்­லேஜ் நியர் திரு­நெல்­வேலி' என்று இருக்­க­வேண்­டும்.

I currently works for an IT company என்­பது தவறு 'ஐ கரண்ட்லி வர்க் ஃபார் ஆன் ஐ.டி. கம்­பெனி' என்று இருக்­க­வேண்­டும்.

I has three kids என்­பது தவறு, 'ஐ ஹேவ் திரீ கிட்ஸ்' என்ற இருக்­க­வேண்­டும்.

I likes to drink coffee and read books என்­பது தவறு, 'ஐ லைக் டு டிரிங்க் கொஃப்பீ அண்ட் ரீட் புக்ஸ்' என்­றி­ருக்­க­வேண்­டும்.

மேற்­படி தவ­றான ஆங்­கில வாக்­கி­யங்­கள் 'ஐ' என்­ப­தற்­குப் பதில் 'ஹீ', 'ஷீ' அல்­லது படர்­கை­யில் வரும் (தர்ட் பர்­ஸன்) ஏதா­வது பெயர்  அமைந்­தி­ருந்­தால், கம்ஸ், வர்க்ஸ், ஹேஸ், லைக்ஸ் முத­லிய வினைச்­சொல் வடி­வங்­க­ளு­டன் ஒத்­துப்­போ­கும்.

இந்த முறை­யில் மொழி­யின் பயன்­பா­டு­களை சரி­யாக அறிந்து தொடர்ந்து பயன்­ப­டுத்­தி­னால் அவை உங்­க­ளின் இரண்­டா­வது இயற்­கை­யாக மாறி­வி­டும். பழக்­கப்­ப­டுத்­திக்­கொண்டே வாருங்­கள். எல்­லாம்

சுல­ப­மா­கி­வி­டும்.

– தொடரும்

...vamanan81@gmail.com

vamananinsight.blogspot.in