தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் ஜூன் 28ஆம் தேதி தொடங்குகிறது: ஆளுநர் அறிவிப்பு

20-06-2019 12:46 PM

சென்னை,

தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் ஜூன் 28ஆம் தேதி மீண்டும் தொடங்குவதாக தமிழ்நாடு ஆளுநர் பன்வரிலால் புரோஹித் 20ந்தேதி வியாழக்கிழமையன்று அறிவித்துள்ளார்.

சட்டமன்றம் கூடுவது தொடர்பான அறிவிப்பை தமிழக சட்டமன்ற செயலர் கே. ஸ்ரீனிவாசன் வெளியிட்டுள்ளார்.  இந்த அறிவிப்பு சிறப்பு அரசிதழில் பிரசுரிக்கப்பட்டுள்ளதாகவும் கே. ஸ்ரீனிவாசன் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 8-ல் தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட் மீதான விவாதம் 3 நாட்கள் நடந்தன. தொடர்ந்து நிதி நிலை அறிக்கைக்கு பிப்ரவரி 14ஆம் தேதி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்தார்.

பின்னர் அவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வரும் 28-ஆம் தேதி மீண்டும் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இரங்கல் தீர்மானம்

தமிழக தமிழக சட்டமன்றம் ஜூன் 28 ஆம் தேதி கூடும் பொழுது முதலில் இரங்கல் தீர்மானம் எடுத்துக் கொள்ளப்படும் என தெரிகிறது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திமுகவைச் சேர்ந்த ராதாமணி காலமாகிவிட்டார். அவரது மரணம் தொடர்பான இரங்கல் உரை மற்றும் இரங்கல் தீர்மானம் ஆகியவை முதலில் எடுத்துக் கொள்ளப்படும் என தெரிகிறது

இதற்கான கால அவகாசத்தை அலுவல் ஆய்வு குழு முடிவு செய்யும் என தெரிகிறது.

இந்த அலுவல் முடிந்த பிறகு தமிழக சட்டமன்றத் தலைவர் தனபால் மீதான திமுக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட வாய்ப்பு உள்ளது.

அதே சமயத்தில், அதிமுக கொறடா கொடுத்த புகாரின் பேரில் 3 அதிமுக எம்எல்ஏக்களுக்கு தமிழக சட்ட மன்ற தலைவர் தனபால் விளக்கம் கோரும் கடிதங்களை அனுப்பி உள்ளார்.  அந்த கடிதங்கள் தொடர்பாக விவாதம் தொடரும் வாய்ப்பு உள்ளது.

அமைச்சரவைக் கூட்டம்

தமிழக சட்டமன்றக் கூட்டம் ஜூன் 28ந்தேதி தொடங்கும் முன் ஜூன் 24ந்தேதி காலை 11 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்றக் கூட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை சட்டசபையில் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

வரும் 22ந்தேதி மாவட்டந் தோறும் குடிநீர் பிரச்சினைக்காக ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


சட்டமன்ற கூட்டுத்தொடர் கூடுவது தொடர்பாக ஆளுநர் வெளியிட்டுள்ள அறிக்கை:
Trending Now: