குரூப்- 1 தேர்வை ரத்து செய்யக் கோரிய வழக்கு: தீர்ப்பை ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம்

20-06-2019 12:00 PM

சென்னை,

குரூப் 1 தேர்வை ரத்து செய்யக்கோரிய வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் குரூப்-1 முதல்நிலைத் தேர்வை நடத்தியது. இந்தத் தேர்வை தமிழ்நாடு முழுவதும் 1 லட்சத்து 68 ஆயிரம் பேர் எழுதினர்.
மனு தாக்கல்
தேர்வில் கேட்கப்பட்டிருந்த 200 கேள்விகளில் 18 கேள்விகளுக்கான பதில்கள் தவறாக இருந்தன எனவே, முதல்நிலைத் தேர்வுக்கான திருத்தப்பட்ட விடைப் பட்டியலை வெளியிட உத்தரவிட வேண்டும் என்றும்
மேலும், அதுவரை குரூப்-1 பிரதானத் தேர்வை நடத்தத் தடை விதிக்க வேண்டும் எனவும்

சென்னை உயர்நீதிமன்றத்தில் மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த எஸ்.விக்னேஷ் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல்  ஒத்தி வைத்தார்.Trending Now: