முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு 2வது நாளாக உடல் பரிசோதனை

20-06-2019 11:54 AM

சென்னை,

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ பரிசோதனைக்காக அப்போலோ மருத்துவமனைக்கு 2-வது நாளாக இன்றும் வந்தார். அவர் முழு உடல் பரிசோதனை செய்து கொண்டார்.

சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வந்தார்.

அவருக்கு பொது உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. நேற்று முதலமைச்சர் தலைமைச் செயலகத்துக்கு வராததால், தண்ணீர் பிரச்னை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்டோருடன் அவர் காணொலிக் காட்சி மூலம் நேற்று ஆலோசனை நடத்தும் திட்டம்  ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் பொது உடல் பரிசோதனைக்காக முதலமைச்சர் பழனிசாமி இன்றும் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார். அங்கு அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சுமார் 1 மணிநேரத்துக்குப் பின் அவர் புறப்பட்டுச் சென்றார்.