ஆசை­யெல்­லாம் வெயிட்­டிங் லிஸ்ட்ல இருக்கு! –- ரித்­திகா

19-06-2019 02:23 PM

‘ராஜா ராணி’ சீரி­ய­லில் நடிப்­ப­தற்­கா­கவே மும்­பை­யி­லி­ருந்த ரித்­திகா, சென்­னைக்கு வந்து குடி­யே­றி­விட்­டார். “எனக்கு சீரி­யல்ல நடிக்­க­ணும்­கிற எண்­ணமே சுத்­தமா கிடை­யாது! என்­கி­றார் கேஷு­வ­லாக. அவர் ’டிக் டாக்’ வீடி­யோ­வில் பிர­ப­லம் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

ரித்­தி­காவை படப்­பி­டிப்­பில் சந்­தித்­த­போது...

“சும்மா பொழு­து­போக்­குக்­காக ஆரம்­பிச்­ச­து­தான் ’டிக் டாக்’ வீடியோ.  நாம  அழகா டிரஸ் பண்­ணி­யி­ருந்தா எப்­படி செல்பி எடுப்­போமோ, அப்­ப­டித்­தான் ’டிக் டாக்’ வீடி­யோ­வும். என் கூட வேலை பார்க்­கி­ற­வங்க இந்த வீடி­யோவை பண்­ணிக்­கிட்டு இருந்­தாங்க. சரி, நாம­ளும் டிரை பண்ணி பார்க்­க­லாம்ணு ஆரம்­பிச்­சேன்.  போகப்­போக, என் வீடி­யோவை நிறைய பேர் பார்க்க ஆரம்­பிச்­சாங்க. இத்­தனை பேர் நம்­மள பாலோ பண்­றாங்க, நல்லா பண்­ண­ணும்னு ஒவ்­வொரு வீடி­யோவா பண்ண ஆரம்­பிச்­சேன். அதை என் நண்­பர்­கள் பார்ப்­பாங்­கன்னு இன்ஸ்­டா­கி­ராம், பேஸ்­புக்ல எல்­லாம் ஷேர் பண்­ணேன்.

இப்போ சமீ­பத்­தி­லே­தான் ‘டிக் டாக்’கை தடை பண்­ணி­யி­ருக்­காங்க. இந்த தளத்தை தங்­க­ளோட திற­மையை வெளிக்­காட்­ட­ணும்னு யூஸ் பண்­ற­வங்க இருக்­காங்க. ஆனா, சில பேரு இதை தவறா யூஸ் பண்­றாங்க. என்ன பண்­றது? குழந்­தைங்­கள்ல இருந்து பெரி­ய­வங்க வரை எல்­லா­ருமே பார்க்­கி­றாங்க.  அவங்க முகம் சுளிக்­கிற அள­வுக்கு சில வீடி­யோ­சும் இதிலே வரத்­தான் செய்­யுது. எல்லா விஷ­யங்­க­ளுக்­கும்  எப்­படி பிளஸ், மைனஸ் இருக்­குமோ, அப்­ப­டித்­தான் இதி­லே­யும் இருக்கு.  எதை­யுமே நாம எப்­படி பயன்­ப­டுத்­து­றோம் அப்­ப­டீங்­கி­ற­து­தான் முக்­கி­யம்.

நான் ஒரு எம்.எஸ்.சி. (சாப்ட்­வேர்) பட்­ட­தாரி. ஆக்­க்ஷு­வலி, ஒரு காலேஜ் புரொ­ப­ச­ரா­க­ணும்னு ஆசைப்­பட்­டேன். அப்­பு­றம், பிஎச்.டி. படிக்­க­ணும்­னும் ஆசைப்­பட்­டேன். அதெல்­லாம் வெயிட்­டிங் லிஸ்ட்ல இருக்கு. மும்­பை­யிலே படிச்­சுக்­கிட்டு இருக்­கும்­போது பார்ட் – டைமா ஏதா­வது வேலைக்கு போக­லாம்ணு நினைச்­சுக்­கிட்டு இருந்­தேன். அப்­போ­தான் எதிர்­பா­ராம ஆங்க்­க­ரிங் பண்­ணக்­கூ­டிய வாய்ப்பு கிடைச்­சிச்சு. வாய்ப்பை சரி­யான முறை­யிலே பயன்­ப­டுத்தி ஆங்க்­க­ரிங் பண்ண ஆரம்­பிச்­சேன். போகப்­போக, அது மேலே ரொம்ப பிரி­யம் உண்­டா­யி­டுச்சு. என்­னோட இன்ஸ்­டா­கி­ராம், பேஸ்­புக்கை பார்த்­துட்­டுத்­தான் ‘ராஜா ராணி’ சீரி­யல்ல நடிக்­கி­ற­துக்கு வாய்ப்பு கொடுத்­தாங்க. அது ரொம்­ப­வும் பிர­ப­ல­மான சீரி­யல்ன்னு எனக்கு ஏற்­க­னவே தெரி­யும்ங்­கி­ற­தால யோசிக்­கவே இல்லே. உடனே ஒத்­துக்­கிட்­டேன். நான் நடிக்­கி­ற­துக்கு முதல்ல அப்பா கொஞ்­சம் தயக்­கம் காட்­டி­னாரு. பட், தடுக்­கலே. அம்­மா­தான் எனக்கு முழு ஆத­ரவு. நான் எது பண்­ணா­லுமே நல்லா யோசிச்­சுத்­தான் பண்­ணு­வேன். அது என் பேரன்ட்­சுக்­கும் நல்­லாவே தெரி­யும்.  அத­னால, பெரிய அள­விலே எதிர்ப்பு கிளம்­பலே.  அவங்க கொடுக்­கிற சப்­போர்ட்­ல­தான் இந்த அள­வுக்கு என்­னால வர முடிஞ்­சிச்சு.

இப்­ப­வும் ஆங்க்­க­ரிங் பண்­ண­ணும்னு ஆசை­தான். ஆரம்­பத்­திலே பதி­னஞ்சு நாளைக்கு ஒரு தடவை மும்­பைக்கு போய் ஆங்க்­க­ரிங் பண்­ணிக்­கிட்டு இருந்­தேன். அது படிப்­ப­டி­யாக குறைஞ்சு இப்போ நான் ப்ரீயா இருக்­கும்­போது தேவை­யி­ருந்தா அங்கே போய் ஆங்க்­க­ரிங் பண்ணி வந்­துக்­கிட்டு இருக்­கேன்.  இன்­னும் சொல்­லப்­போனா, நான் ஆங்க்­க­ரிங்கை ரொம்ப ரொம்ப மிஸ் பண்­றேன்.”Trending Now: