‘சிங்­கிங் ஸ்டார்’­சாக மனோஜ் – லக்ஷ்­மன் தேர்வு!

19-06-2019 02:20 PM

கலர்ஸ் தமி­ழில் ஒளி­ப­ரப்­பாகி வந்த இசை ரியா­லிட்டி நிகழ்ச்சி ‘சிங்­கிங் ஸ்டார்ஸ்’ அண்­மை­யில் முடி­வுக்கு வந்­தது. கடு­மை­யான போட்டி நில­விய இறு­திச் சுற்­றில் தங்­கள் இனி­மை­யான குர­லால் பார்­வை­யா­ளர்­க­ளுக்கு மிக­வும் பிடித்த மனோஜ் மற்­றும் லக்ஷ்­மன் நிகழ்ச்­சி­யின் டைட்­டிலை வென்­ற­னர். 13 ஜோடி போட்­டி­யா­ளர்­களை எதிர்த்து போட்­டி­யிட்ட மனோஜ் மற்­றும் லக்ஷ்­மன், தங்­கள் வசீ­க­ரிக்­கும் குர­லால், நடு­வர்­க­ளை­யும் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான ரசி­கர்­க­ளின் இத­யத்­தை­யும் தங்­கள் பக்­கம் இழுத்­த­னர். இவர்­க­ளுக்கு வெற்­றிக் கோப்­பை­யும், 5 லட்ச ரூபா­யும் வழங்­கப்­பட்­டன.

தங்­க­ளது வெற்­றியை குறித்து மனோஜ் மற்­றும் லக்ஷ்­மன் கூறி­ய­தா­வது:– ‘‘‘சிங்­கிங் ஸ்டார்ஸ்’ நிகழ்ச்­சி­யின் வெற்­றி­யா­ள­ராக தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டது எங்­க­ளுக்கு மிக­வும் பெரு­மை­யாக உள்­ளது. மேலும், இந்த நிகழ்ச்சி எங்­கள் திற­மையை வெளிக்­கொ­ணர ஒரு வாய்ப்­பாக மட்­டும் அல்­லா­மல், இத்­து­றை­யின் வல்­லு­னர்­க­ளான சந்­தோஷ் நாரா­ய­ணன், சக்­திஸ்ரீ, அனந்து போன்­ற­வர்­கள் எங்­க­ளுக்கு வழி­காட்­டி­யா­கக் கிடைக்க ஒரு வாய்ப்­பா­க­வும் அமைந்­தது. அவர்­க­ளது வழி­காட்­டு­தல் மற்­றும் ஊக்­கு­விப்­பால்­தான் இன்று எங்­க­ளால் இந்த நிலையை அடைய முடிந்­தது. மாநி­லம் முழு­வ­தும் உள்ள பல்­லா­யி­ரக்­க­ணக்­கான இசை ரசி­கர்­க­ளோடு இணை­யும் வாய்ப்பை எங்­க­ளுக்கு வழங்­கிய கலர்ஸ் டிவிக்கு எங்­கள் நன்­றி­கள். அவர்­கள்­தான் எங்­க­ளது இந்த வெற்­றிப் பய­ணம் முழு­வ­தும் உற்­சா­கம் அளித்­த­வர்­கள்.’’

கானா பாட­கர்­கள் முத்­து­வும், இசை­வா­ணி­யும் இரண்­டா­வது பரிசை வென்­ற­னர். அவர்­க­ளுக்கு 3 லட்ச ரூபாய் வழங்­கப்­பட்­டது.