சரியான திசையில் பறக்கும் ‘சிறகு!’

19-06-2019 02:15 PM

கவி­ஞர் குட்டி ரேவதி எழுதி இயக்கி இருக்­கும் படம் ‘சிறகு!’ இப்­ப­டத்­தின் "தனி­மைச் சிற­கி­னிலே" என்ற பாட­லின் புரொமோ வீடி­யோவை  சில தினங்­க­ளுக்கு முன் இயக்­கு­நர் மணி­ரத்­னம் வெளி­யிட்­டார். அதைத் தொடர்ந்து  படத்­தின் டீசரை  ஏ.ஆர். ரஹ்­மான் வெளி­யிட்­டார்.

பர்ஸ்ட் காபி புரொ­டக்­க்ஷன் சார்­பாக மாலா மணி­யன் தயா­ரித்­துள்ள இப்­ப­டத்­திற்கு அரோல் கொரேலி இசை­ய­மைத்­துள்­ளார். படம் தாங்கி நிற்­கும் கதைக்கு இசை  உயிர் கொடுத்­துள்­ளது என்று தெரி­கி­றது.

‘மெட்­ராஸ்,’ ‘கபாலி,’ ‘வட­சென்னை,’ ‘சண்­டைக்­கோழி- 2’ ஆகிய படங்­கள் மூல­மாக நன்கு பரிச்­ச­ய­மான நாய­கன் ஹரி கிருஷ்­ணன்­தான் ‘சிற’­கின் கதா­நா­ய­கன். யோகா, நட­னம் போன்­ற­வற்­றில் சிறந்து விளங்­கும் அக்­க்ஷிதா நாய­கி­யாக நடித்­துள்­ளார். துணை கதா­பாத்­தி­ரத்­தில் நிவாஸ் ஆதித்­தன், டாக்­டர். வித்யா, காளி வெங்­கட் நடித்­துள்­ள­னர்.  ‘பியார் பிரேமா காதல்’ படம் மூலம் ஒளிப்­ப­தி­வில் தனித்­தன்மை காட்­டிய ராஜா பட்­டாச்­சார்ஜி ஒளிப்­ப­திவு செய்­துள்­ளார். படத்­தொ­குப்பை நேர்த்­தி­யாக கையா­ளும் திறமை கொண்ட அருண்­கு­மார் வி. எஸ். ‘சிற’­கின்  எடிட்­டர்.

 ஏ.ஆர். ரஹ்­மான் வெளி­யிட்ட டீசர் மாஸ்­டர் ஹிட் அடித்து வரு­வது படத்­திற்கு பெரும் பல­மாக அமைந்­துள்­ளது என்­கி­றார் படத்­தின் இயக்­கு­னர் குட்டி ரேவதி.