ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 19–6–19

19-06-2019 01:52 PM

இளை­ய­ராஜா மீதான விமர்­ச­னம்!

(சென்ற வாரத் தொடர்ச்சி...)

நான் ரமேஷ் அண்­ண­னின் வளர்ப்பு. அவரை என்­னால் மீறவே முடி­யாது. என்ன செய்­வது..? மனசு ராஜா ராஜா என்று பத­றி­னா­லும் அந்த மனி­தர் பேசிய அத்­த­னை­யை­யும் பொறு­மை­யாய்க் கேட்­டுக் கொண்டே இருந்­தேன். உண்­மை­யில் என்­னி­டம் அப்­போது அவ­ருக்­குச் சொல்­வ­தற்கு பெரிய பதில்­கள் இல்லை. ஆனால் பின் நாட்­க­ளில் நான் சந்­திக்­கிற ஒவ்­வொரு இசை ரசி­க­ரி­ட­மும் நேர­டி­யாக இவற்றை வினா­வாக மாற்றி எஸ். நோ என்று பதில் பெறா­ம­லேயே ஒரு இடைக்­க­ருத்­தாக அவர்­கள் இளை­ய­ராஜா என்ற மகா வெற்றி பெற்ற இசை­மேதை தன் சொந்­தக் குர­லில் பாடிய பாடல்­க­ளைப் பற்றி மாத்­தி­ரம் அவர்­க­ளது கருத்­து­கள் என்­ன­வாக இருக்­கும் என்­பதை அறிந்து கொள்­வதை ஒரு தொடர்­வே­லை­யாக அல்ல நில்­லா­வேள்­வி­யா­கவே நிகழ்த்­தி­னேன்.

இளை­ய­ராஜா சொந்­தக் குர­லில் பாடிய பாடல்­களை ஏதோ அவரே இசை அமைத்­தார் அத­னால் அவ­ரா­கப் பாடிக் கொண்­டார் என்ற அள­வில் பார்க்­கிற யாரை­யும் என்­னால் புரிந்து கொள்ள முடி­யா­மல் இல்லை. ஒன்று முந்­தைய அல்­லது பிந்­தைய காலத்­த­வர்­க­ளாக இருப்­பார்­கள். அல்­லது தான் கொண்ட முன் முடிவை எந்த முகாந்­தி­ர­மும் இல்­லா­மல் வறட்­டுப் பிடி­வா­த­மாய்ப் பற்றி இருப்­பார்­கள். அந்­தப் பேரா­சி­ரி­யர் என்­றில்லை. பல­ரும் அப்­படி இருந்­தார்­கள். இன்­ன­மும் இருக்­கக் கூடும்.இளை­ய­ராஜா பாடிய எல்­லாப் பாடல்­க­ளுமே அற்­பு­தம் என்றோ அவர் பாலு தாஸேட்­டன் மலே­சியா ஆகி­ய­வர்­களை விட சிறப்­பான பாட­கர் என்றோ நிறு­வு­வ­தற்­கில்லை இந்த அத்­தி­யா­யம். எந்­தக் குர­லை­யும் வேறொரு சில பல குரல்­க­ளு­டன் எப்­படி ஒப்­பி­டு­வது..? அவற்­றின் பாடல் உப­யோ­கம் மற்­றும் பாடல் வகைமை பாடிய நம்­பர்­கள் மற்­றும் ஹிட்­கள் என எல்­லா­வற்­றை­யும் கணக்­கி­லெ­டுத்­துத் தானே..? அப்­ப­டிப் பார்த்­தால் இங்கே பிரச்­சினை இளை­ய­ராஜா என்ற பாட­கர் பாடிய பாடல்­கள் அல்ல. அவற்­றுக்­கான இசை அமைப்­பா­ள­ரா­க­வும் அவரே இருந்­தது தான். தனக்­குத் தானே வாய்ப்­புக்­களை வழங்­கிக் கொண்­டார் என்­கிற அனர்த்­தக் கூற்­றுக்கு என்ன பதி­ல­ளிப்­பது.?

இப்­போது அந்த பேரா­சி­ரி­யர் எங்கே எவ்­வி­தம் இருக்­கி­றார் என்று தக­வல் இல்லை. அன்­றைய சந்­திப்­பில் அவர் எனக்கு வழங்­கிய ராஜ­வெ­றுப்பு என்­னும் கசப்­பைத் தாண்டி அவர் உண்­மை­யா­கவே வாழும் பொக்­கி­ஷ­மா­கவே இருந்­தார். எண்­ணற்ற தக­வல்­களை எனக்­குத் தந்­தார். குரல்­கள் மற்­றும் பாடல்­கள் பற்­றிய என் சிற்­ற­றி­வுக்கு ஸார் தான் பெரிய கார­ணம் என்­னும் அள­வுக்கு அள்­ளித் தந்­தார். இப்ப வாங்க ஸார் பேச­லாம் என்று ஆசை எழு­கி­றது. நான் சந்­தித்த போதே அவ­ருக்கு எழு­பது வயது இருக்­கும். இன்­றைக்கு இருந்­தால் தொண்­ணூற்­றுச் சொச்­ச­ராக இருப்­பார். சரி வேண்­டாம். எழு­து­கிற தொட­ரில் அவரை நுழைத்து நாமும் பேசிக்­கொள்­ள­லாம் என்று விட்­டு­விட்­டேன்.

அதா­வது இளை­ய­ராஜா என்ற வெற்­றி­கர மானு­டத்­தின் மீது வைக்­கப்­ப­டு­கிற மாபெ­ரிய அல்­லது முதல் விமர்­ச­னம் இது. இதை­யும் முழு­வ­து­மாக ஒரு குறை­யா­கத் தயா­ரிக்­கத் திரா­ணி­யற்­ற­வர்­கள் தான் இருந்­தா­லும் ஆனா­லும் அதா­வது வந்து ஒரு சில எல்­லாமே எது­வும் என்று அனர்த்­தங்­க­ளில் சங்­கி­லி­யால் தங்­க­ளைத் தாங்­களே கட்­டிக் கொள்ள முயல்­கி­றார்­கள். இளை­யாத ராஜா பாடிய பாடல்­க­ளைப் பற்றி மாத்­தி­ரம் இங்கே பார்க்­க­லாம்.

அடித் தொண்­டை­யி­லி­ருந்து பாடு­கிற வழக்­கமே கிடை­யாது மூக்­கின் நுனி­யில் இருந்து பாடு­கி­றார் என்­பார்­கள்..இதையே நான் ஆச்­சர்­ய­மா­கப் பார்ப்­பேன். உண்­மை­யில் போகிற போக்­கில் மூக்கு நுனி­யி­லி­ருந்து பாடு­வ­தா­கவே வைத்­துக் கொண்­டா­லும் கூட அப்­ப­டி­யான ராஜா பாடல்­கள் மொத்­தமே ஏழெட்டு தான் இருக்­கும். இளை­ய­ரா­ஜாவா... விடாத.. விட்­டு­றாத என்ற வன்­மத்­தில் எதை­யா­வது தயா­ரித்­துக் கொண்டே வீசிக் கொண்டே எதிர்த்­துக் கொண்டே இருப்­ப­தைத் தான் விமர்­சிக்­கி­றோம் என்று பல வரு­டங்­க­ளா­கச் செய்­து­வ­ரு­கி­றார்­கள். ஆனால் விமர்­ச­னம் தவ­றல்ல. அத­னுள் அறம் வழு­வக் கூடா­தல்­லவா.? இளை­ய­ராஜா விமர்­ச­னத்­திற்கு அப்­பாற்­பட்­ட­வர் அல்ல. அவ­ரது எத்­த­னையோ படங்­களை பாடல்­களை பின்­னணி ஸ்கோர்­களை கடு­மை­யாக நிரா­க­ரிப்­பேன் நான். விஷ­யம் அவர் கேள்­விக்­கு­ரி­ய­வர் அல்ல என்ற பிம்­பத்­தைக் கட்­ட­மைத்து அதனை வற்­பு­றுத்­து­கி­றாற் போல் ஒரு தோற்­றத்தை ஏற்­ப­டுத்தி இருப்­பது தான். சொல்­லுங்­கள் இளை­ய­ரா­ஜாவை வழி­ப­டச்­சொல்­கி­றார்­களா அவ­ரது ரசி­கர்­கள்..?Trending Now: