‘அதை’ வெளியிட்டால்!

19-06-2019 01:43 PM

நடிகர் வடிவேலு சமீபத்தில்  இயக்குனர் ஷங்கரை ‘கிராபிக்ஸ் இயக்குனர்’ என கூறி இருந்தார். இதற்கு பல இயக்குனர்கள் வடிவேலுவுக்கு தங்கள் கண்டனங்களை தெரிவித்திருந்தார்கள். இந்நிலையில் தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா ‘‘‘24ம் புலிகேசி’ படத்தில் வடிவேலு செய்த பிரச்னை பற்றி 16 பக்க புகார் கடிதம் உள்ளது. அதை வெளியிட்டால் வடிவேலுவுக்கு மக்களிடம் உள்ள மரியாதை சுத்தமாக அழிந்துவிடும்’’ என கூறியுள்ளார்.