ஸ்பெயினில் இருக்கிறார் கீர்த்தி சுரேஷ்!

19-06-2019 01:42 PM

தமிழ், தெலுங்கில் பிரபலமானதைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் இந்தியிலும் கால் பதித்துள்ளார். 'பதாய் ஹோ' பட இயக்குனர் அமித் ஷர்மா இயக்க உள்ள படத்தில் அஜய் தேவ்கனுடன் நடிக்க உள்ளார் கீர்த்தி. அந்த படத்திற்காக அவருடைய உடல் எடையை பெருமளவு குறைத்து மிகவும் ஸ்லிம்மாக மாறியுள்ளார். இந்தி ரசிகர்களுக்கு ஒல்லியாக இருக்கும் நடிகைகளைத்தான் பிடிக்கும். அதனால்தான் படக்குழுவினர் ஆலோசனைப்படி கீர்த்தி உடற்பயிற்சி மூலம் உடல் எடையைக் கணிசமாகக் குறைத்துள்ளார்.

தற்போது தெலுங்கு படம் ஒன்றிற்காக ஸ்பெயினில் இருக்கும் கீர்த்தியின் சமீபத்திய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. கீர்த்தி மிகவும் ஸ்டைலிஷாக இருக்கும் அந்த புகைப்படம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது. தமிழில் கைவசம் எந்த படமும் இல்லாத நிலையில் தெலுங்கில் ஒரு படமும், இந்தியில் ஒரு படமும் மட்டுமே கீர்த்தியிடம் உள்ளன. இந்திக்கு போன பிறகு அவர் மீண்டும் தமிழ் பக்கம் வருவாரா என்பது சந்தேகம்தான்.