‘ஸ்ரீ’ என குறிப்பிடுவது ஏன்?

17-06-2019 11:28 AM

ஒருவரின் பெயரை குறிப்பிடும் முன், 'ஸ்ரீ' என குறிப்பிடுவது ஏன் தெரியுமா? செல்வத்திற்கு அதிபதி லட்சுமி. 'ஸ்ரீ' என்றால் லட்சுமியை குறிக்கும். இவள் திருமாலின் மார்பில் குடியிருப்பதால், பெருமாளுக்கு 'ஸ்ரீநிவாசன்' என்று பெயர். 'ஸ்ரீ' என்பதை தமிழில் 'திரு' என சொல்வதால் பெயருக்கு முன் 'திரு' என குறிப்பிடுகிறோம். யாரை குறிப்பிடுகிறோமோ அந்த நபர், லட்சுமியருளால் வளமுடன் வாழ வேண்டும் என்பதே இதன் நோக்கம்.