சங்கடம் தீர்ப்பார் சக்கரத்தாழ்வார்!

17-06-2019 11:27 AM

அதர்மம் தலையெடுக்கும் போது தர்மத்தை நிலைநாட்டுபவர் விஷ்ணு. இவரது கையிலுள்ள ஆயுதம் சக்கரத்தையே 'சக்கரத்தாழ்வார்' என வழிபடுகிறோம். 'ஆதிமூலமே' என்று அலறிய யானை கஜேந்திரனை, கூகு என்னும் முதலையிடம் இருந்து காத்தது விஷ்ணுவின் சக்ராயுதமே.

அம்பரீஸன் என்ற பக்தனை காக்க துர்வாசரை விரட்டியதும், கிருஷ்ணரின் எதிரியான சிசுபாலனை கொன்றதும் இந்த சக்கரமே.  இதற்கு ’சுதர்சன ஆழ்வார்’, ‘சக்கர ராஜர்’, .‘ஹேதிராஜர்’ என்றும் பெயர்களுண்டு. சனிக்கிழமையில் இவரை வழிபட்டால் மன சங்கடம் தீரும். எதிரி பயம் நீங்கும். தடை விலகும். வாகன பயணம் இனிதாகும்.