எங்கும் நடக்கட்டும் அகண்ட நாம ஜபம்!

17-06-2019 11:25 AM

கோயில்களில் 'அகண்டநாம ஜபம்' நடப்பதாக கேள்விப்பட்டிருப்பீர்கள். இதன் பொருள் தெரியுமா?

நேரம், காலம் பார்க்காமல் தொடர்ச்சியாக, பலர் கூடி கடவுள் நாமங்களை ஜபித்து பிரார்த்தனை செய்வதாகும். இதில் பங்கேற்றால் நல்வாழ்வு, ஆயுள், செல்வ வளம் உண்டாகும். வாழ்விற்கு பிறகு மோட்ச கதியும் கிடைக்கும். அகண்ட நாம ஜபம் எல்லா கோயில்களிலும் நடத்தினால் நாடு நன்மை பெறும்.