கலைமாமணி வாமனனின் ‘நிழலல்ல நிஜம்’ – 184

16-06-2019 07:07 PM

எத்தனை கிரேசியான உலகமடா !

நாட­கம் களை கட்­டி­ய­படி அமோ­க­மாக நடந்­து­கொண்­டி­ருக்­கும் போது, திடீ­ரென்று திரையை இறக்­கி­விட்டு நாட­கம் முடிந்­து­விட்­டது என்று கூறி­னால் எப்­படி? நல்ல நாடக ஆசி­ரி­ய­னுக்கு இது அழகா? அழ­கில்­லை­தான்.... ஆனால் ஆயி­ரக்­க­ணக்­கான மேடை­களை உல­கெங்­கும் கண்ட கிரேசி மோகன் இப்­ப­டித்­தான் செய்­து­விட்­டார்.

கிரேசி மோக­னின் முதல் நாட­கத்­தின் பெயர் ‘‘கிரேசி தீவ்ஸ் ஆப் பால­வாக்­கம்’’ என்­ப­தால் ‘கிரேசி’ அவர் பெய­ரு­டன் ஒட்­டிக்­கொண்­டது. மற்­ற­படி அவ­ரி­டம் கிரே­சி­யான (பைத்­தி­யக்­கா­ரத்­த­ன­மான) எந்­தத் தன்­மை­யும் கிடை­யாது என்று அவ­ருக்கு நெருக்­க­மான கமல்­ஹா­சனே கூறி­யி­ருக்­கி­றார். அப்­பு­றம் ஏன் சர்க்­கரை வியா­தியோ, ரத்த அழுத்­தப் பிரச்­னையோ வேறெந்த நோயின் அறி­கு­றியோ இல்­லாத மோகன் திடீ­ரென்று ஜீவிய நாட­கத்தை நிரந்­த­ர­மாக முடித்­துக்­கொண்டு­

விட்­டார்? அவ­ரைக் கேட்­டால் அது தான் போட்ட நாட­கம் அல்ல, மேலே ஒரு­வன் போடு­கிற நாட­கம் என்­பார். அப்­ப­டி­யி­ருந்­தா­லும் கதையை இப்­படி திடு­திப்­பென்று முடிப்­ப­தெல்­லாம் யாருக்­கே­னும் அழகா என்ன?

இந்­தப் பொருத்­தம் இல்­லாத  காட்­சி­யின் ஏதோ­வொ­ரு­வி­த­மான முன்­னோட்­டம்  அவர் மன­தில் நிழ­லா­டி­யி­ருக்­கும் போலும். கடைசி காலை­யின் முந்­தைய நாள் மாலை, மெரினா கடற்­க­ரை­யில் அவர் இருந்­தி­ருக்­கி­றார். காத­லர்­கள் முதல் விளை­யாட்­டுச் சிறு­வர்­கள் வரை பல­ரும் மகிழ்ச்­சி­யாக இருக்­கும் கடற்­க­ரை­யில் இறந்­த­வர்­க­ளின் அஸ்­தி­யைக் கரைக்க யாரா­வது வந்­தி­ருக்­கக்­கூ­டும். அப்­ப­டிப்­பட்­ட­வர்­க­ளைக் கண்­டு ­விட்­ட­வர்­போல், ‘செத்­தாரை சாவார் சுமந்து’ என்ற நால­டி­யார் பாட­லின் இறுதி அடி மோக­னின் நினை­வுக்கு வந்­தி­ருக்­கி­றது.

வாழ்­வின் நிலை­யா­மை­யைக் கூறும் மேற்­படி வெண்பா, ஒவ்­வொரு நாளும் ஒவ்­வொரு மனி­த­னும் நினைக்க வேண்­டிய ஒன்­று­தான். ஆனால் தன்­னு­டைய வாழ்க்­கை­யின் இறுதி மாலை­யி­லும் அதை நினைத்­தி­ருக்­கி­றார் மோகன். வாழ்க்­கை­யெல்­லாம் நாட­கம் போட்­ட­வர், வாழ்க்­கை­யையே ஒரு நாட­க­மா­கக் கண்ட தரு­ணம் அது.  அவர் நினைத்து முடிப்­ப­தற்­குள்,  இறந்­த­வர்­க­ளின் நினை­வு­க­ளைக் காலம் மூடி மறைப்­ப­தைப்­போல், பகல் முடிந்து இர­வின் போர்வை உலகை சூழ்ந்­து­கொண்­டு ­விட்­டது.

சிரிப்­பில் சோகம் கலந்­தி­ருக்­கும் என்­பது பல சிறந்த சிரிப்பு நடி­கர்­க­ளி­டம் காணக்­கூ­டிய ஒன்­று­தான். ‘சிரிப்­புப் பாதி அழுகை மீதி’ என்­பதை சார்லி சாப்­ளி­னி­லி­ருந்து சந்­தி­ர­பாபு வரை பல­ரி­டம் நாம் பார்த்­தி­ருக்­கி­றோம். கிரேசி மோக­னி­டம் அந்த சோக அம்­சம் வெளிப்­ப­டா­மல், ஆழம், தத்­து­வம், ஆன்­மி­கம் என்ற பரி­மா­ணம் இருந்­தது. கட­வுள் நம்­பிக்கை, பக்தி ஆகி­யவை, அவ­ரி­டம் ஏதோ மழை நாளுக்­கான குடை அல்­லது துன்ப தாக்­கு­த­லி­லி­ருந்து காத்­துக் கொள்­ளும் கேட­யம் போல் மட்­டும் இல்­லா­மல், தொடர்ந்­து­வி­டும் மூச்­சை­போல் இருந்­தது. அவர் ஆயி­ரம் முறைக்கு மேல் நடத்­திக் கொண்­டி­ருந்த ‘சாக்­லேட் கிருஷ்ணா’ என்ற நாட­கம், கட­வுள் மீது பாரத்­தைப்­போட்டு விட்டு கட­மை­யைச் செய்­வ­தைத்­தான் அவ­ருக்கே உரிய நகைச்­சுவை பாணி­யில் எடுத்­துக்­கூ­றி­யது.      இந்த முறை­யில் மோக­னின் மறை­வும் எந்த நீண்ட துன்ப காட்­சி­யும் இல்­லா­மல் ஓடிப்­போய்­விட்­டது. அனா­யாச மர­ணம் என்­பார்­கள், சிர­மம் இல்­லாத மர­ணம் என்று பொருள். ஆரோக்­கி­ய­மாக இருக்­கும் பொழுதே, புக­ழின் உச்­சக்­கட்­டத்­தில் இருக்­கும் போது, மருந்­துக்­கும் ஒரு வேத­னைக்­காட்சி இல்­லாத அவ­ரு­டைய நாட­கங்­களை பெரும் அள­வுக்கு ஒத்து, அவ­ரு­டைய மறைவு நடந்­தே­றி­விட்­டது.  

கிரேசி மோக­னின் ‘சாக்­லேட் கிருஷ்­ணா’­­­வின் கதை அம்­சம் சோவின் ‘சம்­ப­வாமி யுகே யுகே’­­­வு­டை­ய­து­தான்.  மோக­னுக்கு சோ ஒரு சிறந்த முன்­னோடி. சோவை அடி­யொற்­றித்­தான், தன்­னு­டைய முதல் நாட­கத்­தின் பெயரை ஆங்­கி­லத்­தி­லேயே வைத்­தார் மோகன். ஆனால் சோவின் பல நாட­கங்­க­ளில் அர­சி­யல் அதிர்­வேட்­டு­கள் நிரம்­பி­யி­ருந்­தன. அதுவே அவ­ரு­டைய பிர­தான பாணி­யா­க­வும் மாறி­விட்­டது. இந்த வட்­டத்­திற்­குள்  நீ வந்து மாட்­டிக்­கொள்­ளாதே என்று  சோவும் ஒரு முறை மோகனை உஷார்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றார். அதைக் கடைப்­பி­டித்­தார் மோகன்.

சோ காலத்­தில் நடி­கர்­களை முட்­டை­யால் அடித்­தார்­கள். ஆனால் இன்­றைய தேதி­யில் ஆளையே அடிப்­பார்­கள் என்று மோக­னும் கரு­தி­னார். ஆகவே அவர் அர­சி­யல் சிலம்­பாட்­

டங்­க­ளுக்­குப் போக­வில்லை. துணுக்­கத் தோர­ணங்­க­ளுக்கு இடையே வாழ்க்­கைக்­குத் தேவை­யான தத்­து­வப் பார்­வை­யைக் கணக்­காக எடுத்­துச் சொன்­னார். ‘கட­வுள்  ஸ்தானத்­திற்கு அரு­கில் இருப்­ப­வன் காமெ­டி­யன்’ என்ற காஞ்சி முனி­வ­ரின் கருத்து மோக­னுக்­குப் பிடித்த ஒன்று. அந்த நிலை­யி­லி­ருந்து ஒரு நாடக மாலை யை அவர் கட்­டி­ய­போது, அடர்த்­தி­யான தொடுப்­பை­யும் நாடக ரசி­கர்­கள் கவ­னித்­தார்­கள், மாலை  பரப்­பும் மணத்­தை­யும் நுகர்ந்­தார்­கள். மணம் என்­றால் வாழ்க்­கை­யைக் குறித்து நாட­கம் தரும் ஆழ­மான பார்வை.

சம­கா­லத்­த­வ­ரான ‘காத்­தாடி’ ராம­மூர்த்­திக்கு கிரேசி மோகன் எழு­திய வெற்றி நாட­கம், ‘‘அய்யா, அம்மா, அம்­மம்மா’’. பொறுப்பே இல்­லா­மல் தனிக்­கட்­டை­யாக வாழ்க்­கையை ஜாலி­யாக   நடத்­திக்­கொண்­டி­ருந்த  ரகு­பதி,   திரு­மண பந்­தத்­திற்கு ஆளான  பின்­னர் தன்­னு­டைய சுதந்­தி­ரத்­தைக் காத்­துக்­கொள்­வ­தற்­காக  

அம்­மா­வுக்­கும் ஆத்­துக்­கா­ரிக்­கும் இடையே சண்­டையை மூட்­டி­ விட்டு  வேடிக்­கைப் பார்க்­கி­றான் என்று கதை­யைக் கொண்டு போனார் மோகன். பாலி­டிக்­சில் மாட்­டிக் கொள்­ளாதே என்று சோ சொன்­னால் அப்­ப­டியே கடைப்­பி­டிக்­க­வேண்­டுமா என்ன?! வீட்­டுக்­குள்ளே நடக்­கும் பாலி­டிக்ைச விரித்­துக்­காட்­ட­லாமே!

‘‘அய்யா, அம்மா, அம்­மம்­மா’’­­­வின் ஒரு இடத்­தில், ரகு­ப­தி­யின் நண்­பன் கைலா­சத்­தி­டம் முன்­ன­வ­ரின் வீட்­டு­வே­லை­க­ளைப் பார்த்­துக்­கொள்­ளும் ஐயங்­கார் கூறு­வார், ‘நம்ம சார்­கிட்டே பேசி ஜெயிக்க முடி­யுமா?’  இந்த கமென்ட் கிரேசி மோக­னுக்கு அப்­ப­டியே பொருந்­தும். அவர் வாயைத் திறந்­தால் மூட­மாட்­டார். கேட்­டுக்­கொண்­டி­ருப்­ப­வர்­களோ அல்­லது பேட்­டிக் கண்­டு­கொண்­டி­ருப்­ப­வர்­களோ அசந்­து­போ­கும் அள­வுக்­குப் பஞ்ச் லைன்­க­ளும் பள­ப­ள­வென்று வந்து கொண்­டே­யி­ருக்­கும். ஆனால் அவை வார்த்தை விளை­யாட்­டு ­க­ளு­டன் வந்­தா­லும் வாழ்க்கை விளை­யாட்­டின் தன்­மை­களை புட்­டு­வைப்­ப­ தா­க­வும் இருக்­கும்.

எழுத்­தா­ள­னுக்கு விரி­வான வாசிப்பு வேண்­டும் என்று கூறும் போது,  கிரேசி உதிர்க்­கும் ஒரு தத்­துவ முத்து, ‘‘எனக்கு எல்­லாம் தெரி­யும். நான் எதை­யும் வாசிக்க மாட்­டேன்னு இருக்­கக்­கூ­டாது. எழுத்­தா­ளன் பக­வா­னின் கரு­வி­யாக இருக்­க­வேண்­டுமே தவிர கரு­வி­யாக இருக்­கக்­கூ­டாது’’. இங்கே இரண்­டா­வது கருவி, கர்­வம் உள்­ள­வ­ரைக் குறிக்­கும்  சொல்.

 சிரித்­துக் குலுங்­கும் நாட­கங்­க­ளுக்கு இடையே இழை­யோ­டும் இத்­த­கைய தரி­ச­னங்­கள் ஒரு புறம் இருக்க, தமிழ் சினி­மா­வைப் பிடித்த சனி­ய­னான இரட்டை அர்த்த அசிங்­கங்­க­ளின் பக்­கம் தலை­வைத்­துப் படுக்­கா­த­வர் கிரேசி மோகன். விர­சமோ ஆபா­சமோ கலக்­காத நகைச்­சு­வையை வழங்­கி­ய­வர். காமெ­டி­யில் காம நெடி இருக்­கக்­கூ­டாது என்ற ஒற்றை பஞ்ச் லைனில் இந்த விஷ­யத்­தைப் மோகன் புட்­டு­வைப்­பார். இந்த விஷ­யத்­தில் அவர் உல­கக் குத்­துச்­சண்டை வீரர்­க­ளுக்கு ஒப்­பா­ன­வர்!

‘‘சாக்­லேட் கிருஷ்­ணா’’­­­வில், விற்­ப­னை­யா­ள­னான நாட­கத்­தின் நாய­கன் வேண்ட, கிருஷ்­ணரே நேரில் வந்­து­வி­டு­வார். வந்­த­வன் கண்­ணன் என்று நாய­கன் நம்ப மாட்­டான். உன்­னைக் கிருஷ்­ணன்னு நான் நம்­ப­ணுமா, ஜோக் அடிக்­கி­றயா என்று கேட்­பான். ஜோக் அடிக்­கும் கிருஷ்­ணன், என்.எஸ்.கிருஷ்­ணன் என்­பார் கிருஷ்­ணன்! விளை­யா­ட­றயா என்­பான் நாய­கன். அது (இந்­தி­யா­வின் முதல் டென்­னீஸ் வீரர்) ராம­நா­தன் கிருஷ்­ணன் என்­பார் கிருஷ்­ணர். கிருஷ்­ணனா நடிக்­கி­றியா என்­பார் நாய­கன். அது ரம்யா கிருஷ்­ணன் என்­பார் கிருஷ்­ணன்! கண்­ணன் நீல நிறமா இருப்­பார், நீ பழுப்பு நிறமா இருக்­கியே என்று கேட்­கிற போது, காத்­துல இருக்­கிற மாசு­க­ளால் இப்­படி ஆயிட்­டேன் என்­பார் கிருஷ்­ணன். நீல­மாக வந்த கண்­ணன் நில­வு­ல­கின் மாசு கார­ண­மாக பழுப்­பாக மாறி­விட்­டா­னாம். ‘‘அம்மா, அய்யா, அம்­மம்­மா’’­­­வின் ஐயங்­கார் கூறு­வ­து­போல், எங்க சாரைப் பேச்­சில் வெல்ல முடி­யாது!

இந்த சாது­ரி­ய­மான பேச்­சும்

அடுக்­க­டுக்­காக வரும் வசன வெடி­க­ளும் நாடக மேடை­யு­டனோ அங்­கும்

இங்­கும் வந்­து­போ­கும் ஓரிரு திரைப்ப ­டங்­க­ளு­டனோ  மறைந்­து­வி­டா­மல், நியூ­யார்க்­கின் எம்­ப­யர் ஸ்டேட் பில்­டிங்­கின் மேல் எரி­கிற விளக்­கைப் போன்ற பிர­பல்­யத்­தைத் தந்­த­வர் கமல்­ஹா­சன்.

‘அபூர்வ சகோ­த­ரர்­கள்’ (1989), ‘மைக்­கேல் மத­ன­கா­ம­ரா­ஜன்’ (1990), ‘மக­ளிர் மட்­டும்’ (1994), ‘சதி­லீ­லா­வதி’ (1995), ‘அவ்வை சண்­முகி’ (1996),  ‘காதலா காதலா’ (1998), ‘தெனாலி’ (2000), ‘பஞ்­ச­தந்­தி­ரம்’ (2002), ‘பம்­மல் கே. சம்­பந்­தம்’ (2002), ‘வசூல்­ராஜா எம்.பி.பி.எஸ்.’ (2004) போன்ற படங்­க­ளில், நல்ல ஹாஸ்ய உணர்­வும் சிறந்த திரைக்­கலை பிரக்­ஞை­யும் கொண்ட கமல்­ஹா­ச­னின் தொடுப்­பி­லும் நடிப்­பி­லும் கிரேசி மோக­னின் வச­னங்­கள் ஒரு புதிய சினிமா பரி­மா­ணத்­தைப் பெற்­றன.

 வெற்­றி­க­ர­மான நாட­கங்­கள் எழுதி, அவற்றை நல்ல வர­வேற்­பு­டன் தன்­னு­டைய கிரேசி கிரி­யே­ஷன்ஸ் வாயி­லாக வழங்கி வந்த மோகன், கமல்­ஹா­ச­னின் துணை­யால் தமிழ் சினி­மா­வின் மிகச்­சி­றந்த ஹாஸ்ய எழுத்­தா­ள­ராக வலம் வந்­தார். ‘பஞ்­ச­தந்­தி­ர’த்­தில், பின்­னாடி என்ன இருக்­குது காட்­சி­யில், முன்­னா­டிக்­கும் பின்­னா­டிக்­கும் நடக்­கும் இனி­மை­யான இழு­ப­றியை எப்­படி மறக்க முடி­யும்? @பம்­மல் கே.சம்­பந்­த’த்­தில் வரும் படப்­பி­டிப்பு சீனில், விலங்கு உரி­மை­கள் குறித்து ஆர்ப்­பாட்­டம் செய்­ப­வர்­க­ளின் மத்­தி­யில் பிர­வுன் மணி என்ற காளை, மிரண்டு ஓட்­டம் பிடிக்­கும். இந்­தக் காட்­சி­யில் குவிந்­தி­ருக்­கும் நையாண்டி உணர்­வுக்கு இணை­யேது? கமல், -கிரேசி கூட்டு ஒரு மிகச்­சி­றந்த இணை­யாக செயல்­பட்டு இரு­வ­ருக்­கும் மெரு­கேற்றி, ரசி­கர்­க­ளுக்­கும் சிறந்த சிரிப்பு விருந்­தாக அமைந்­தது. ரஜி­னி­யின் ‘அரு­ணா­ச­லம்’ படத்­திற்­கும் கிரேசி மோகன் வெற்­றி­க­ர­மாக வச­னம்

எழு­தி­னார் (‘‘ஆண்­ட­வன் சொல்­றான் அரு­ணா­ச­லம் செய்­றான்’’).

நாத்­தி­கர் என்று தன்னை விளம்­ப­ரம் செய்­து­கொள்­ளும் கம­லின் நட்­பு­டன் பாதி­யா­வது பொருந்­தும்­படி, நான் ஆஸ்­தி­க­னும் இல்லை, நாஸ்­தி­க­னும் இல்லை, ஹாஸ்­தி­கன் என்று சிரிப்­பு­ட­னான தனது  சம்­பந்­தத்தை கிரேசி மோகன் அடிக்­கோ­டிட்­டுக் காட்­டி­னார். ஆனால் உண்­மை­யில் அவர் நெஞ்­சம் நிறைந்த ஆஸ்­தி­கர்­தான். அவர் அர­விந்த அன்­னை­யின் பக்­தர், ரமண பக்­தர், விவே­கா­னந்­தர், ராம­கி­ருஷ்­ணர், காஞ்சி பெரி­ய­வர் முத­லிய பெரி­ய­வர்­களை மன­தார ஆரா­தனை செய்­த­வர். மழலை மனம் மாறாத இந்த 66- வயது மனி­த­ரின் ரம­ணர் பற்­றிய ஆக்­கங்­களை கமல்­ஹா­சன் வெளி­யிட்­டார்.  ‘ரம­ணா­ய­னம்’ என்ற அந்த வெண்பா மாலை­யில்,

‘ஆழ்­ம­னம் கொண்ட அமை­தியே ஆண்­ட­வன்

பாழ்­மன புத்தி புர­வி­யில் தாழ்­வுற

டொக்­டொக்­டொக்­கென்று தரை­யில் உல­வாது

டக்­கென்று வானுக்­குத்­தாவு’ என்­றொரு பாடலை கிரேசி மோகன் பதிவு செய்­தி­ருக்­கி­றார்.

அவர் யாத்த இந்த வரி­க­ளுக்கு ஏற்ப, முப்­பா­ழும் தாண்டி நின்று, அப்­பாலே சென்ற நிலைக்கு டொக்­கென்று தாவி­விட்­ட­வர் மறைந்­து­விட்­டார்! வேறு நாடக மேடைக்­கான ஏற்­பா­டா­க­வும் இருக்­க­லாம்.

ஞான யோகம், பக்தி யோகம், கர்ம யோகம் என்­ப­து­போல, இசை தொடர்­பு­டைய நாத யோக­மும் பார­தத்­தின் ஆன்­மிக மர­பிலே உள்­ளது. சதா சிரித்­துக்­கொண்டே இருப்­ப­தும், பிறரை சிரிக்க வைப்­ப­தும் ஒரு யோகம்­தான் என்­பதை சுட்ட வந்­த­வர்­போல், வந்­து­போ­யி­ருக்­கி­றார் கிரேசி மோகன் என்ற சிரிப்பு சித்­தர்!

(தொட­ரும்)
Trending Now: