சேதுராமன் சாத்தப்பனின் ‘ஏற்றுமதி என்ன எப்படி எங்கே செய்யலாம்’ 17– 6–19

16-06-2019 07:03 PM

இந்திய பங்குச் சந்தை நிலவரம்

சந்­தை­கள் குறைந்து வரு­கின்­றன. கார­ணங்­கள் லாப நோக்­கில் விற்­பது, கச்சா எண்­ணெய் விலை கூடு­வது, ஈரான் எண்­ணெய் சப்ளை குறைவு, அமெ­ரிக்க சீனா வர்த்­த­கப் போர் வலுப்­பது போன்­றவை ஆகும். கச்சா எண்­ணெய் பிரச்­சனை பெரி­தாக்­கப்­பட்டு வரு­கி­றது. இதா­னல் விலை­யும் கூடி வரு­கி­றது. இது தவிர இந்த டென்­ஷன் களால் தங்­கம் விலை­யும் ஒரு அவுன்ஸ் 1400 அமெ­ரிக்க டால­ரைத் தொட்டு விடு­வேன் என்று பய­மு­றுத்­து­கி­றது.

வெள்­ளி­யன்று இறு­தி­யாக

வெள்­ளி­யன்று இறு­தி­யாக மும்பை பங்­குச் சந்தை 289 புள்­ளி­கள் குறைந்து 39452 புள்­ளி­க­ளில் முடி­வ­டைந்­தது. தேசி­ய­பங்­குச்­சந்தை 90 புள்­ளி­கள் குறைந்து 11823 புள்­ளி­க­ளில் முடி­வ­டைந்­தது. சென்ற வாரத்தை விட இந்த வாரம் சுமார் 163 புள்­ளி­கள் குறைந்து மும்பை பங்­குச் சந்தை முடி­வ­டைந்­தி­ருக்­கி­றது. கடந்த இரண்டு வாரங்­க­ளாக சந்­தை­கள் குறைந்து வரு­வது குறிப்­பி­ட­தக்­கது.

அதானி கியாஸ்

அதானி கியாஸ் கம்­பெ­னி­யில் 30 சத­வீத பங்­கு­களை பிரஞ்ச் கம்­பெ­னி­யான டோட்­டல் 1 பில்­லி­யன் டாலர் கொடுத்து வாங்­க­வுள்­ளது. இது அதானி கம்­பெனி தனது கடன் களை குறைக்க உத­வும். மேலும் டோட்­டல் கம்­பெ­னி­யின் எக்ஸ்­பர்ட் அட்­வைஸ்­க­ளும் கிடைக்க வாய்ப்­பு­கள் உண்டு.

யெஸ் பாங்க்

மறு­ப­டி­யும் மறு­ப­டி­யும் யெஸ் பாங்க் பங்­கு­கள் சந்­தை­யில் அடி­ப­டு­கின்­றன. தற்­போது சம்­மட்­டி­யால் அடித்­தாற் போல் கீழே இறங்­கி­ய­தன் கார­ணம் கவர்­னன்ஸ் இஷ்­யூஸ் தான். அதா­வது ரானா கபூர் மறு­படி புற­வ­ழி­யாக போர்­டுக்­குள் வர நினைக்­கி­றார் என்ற யூகங்­கள் மற்ற கார்ப்­ப­ரேட் கவர்­னன்ஸ் கார­ணங்­கள் என்று பல­மாக கீழே இறங்­கி­யுள்­ளது. இண்­டி­பண்­டண்ட் டைரக்­ட­ராக முன்­னாள் ரிசர்வ் வங்­கி­யின் டிபுடி கவர்­னர் காந்தி அவர்­கள் தற்­போது இந்த வங்­கி­யில் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார்­கள். இது தவிர பல மேல்­மட்ட அதி­கா­ரி­கள் மாற்­றப்­பட்­டுள்­ளார்­கள். இத­னால் 2 அல்ல 3 வருட நோக்­கில் வாங்­கு­வ­தாக இருந்­தால் தற்­போது வாங்­க­லாம்.

டிசி­எஸ் பங்­கு­கள்

டிசி­எஸ் கம்­பெ­னி­யின் பங்­கு­கள்­உ­லக அள­வில் டெக் கம்­பெ­னி­க­ளின் பங்­கு­க­ளில்  மார்க்­கெட் கேபி­ட­லை­சே­ஷ­னில் ஒன்­ப­தா­வது இடத்­தில் இருக்­கி­றது. ஐபி­எம் போன்ற கம்­பெ­னி­க­ளுக்­கும் மேலே டிசி­எஸ் இருப்­பது குறிப்­பி­டத்­தக்­கது. உல­க­ள­வில் மார்க்­கெட் கேபி­ட­லை­சே­ஷ­னில் முத­லா­வது இடத்­தில் இருப்­பது மைக்­ரோ­சாப்ட் கார்ப்­ப­ரே­ஷன் ஆகும். இதன் மதிப்பு 1016 பில்­லி­யன் டாலர்­கள் ஆகும். அதற்கு அடுத்த இடத்­தில் இருப்­பது ஆப்­பிள் கார்ப் ஆகும், அத­னு­டைய மதிப்பு 886 பில்­லி­யன் டாலர்­கள் ஆகும். டிசி­எஸ் கம்­பெ­னி­யின் மதிப்பு 121 பில்­லி­யன் டாலர்­கள் ஆகும்.

நாம் தொடர்ந்து வலி­யு­ருத்தி வந்­தி­ருக்­கி­றோம், டிசி­எஸ் கம்­பெ­னி­யின் பங்­கு­களை நீண்­ட­கால அடிப்­ப­டை­யில் வாங்கி வைக்க. தற்­போ­தும் செய்­ய­லாம்.

என்ன பங்­கு­கள் வாங்­க­லாம்

பி.என்.சி. இன்­பி­ரா­டெக், அக்சோ நோபள், போக்­கர்னா, அப்­பல்லோ டயர்ஸ், பர்­சிஸ்­டண்ட் சிஸ்­டம்ஸ் ஆகிய பங்­கு­கள் உங்­கள்  போர்ட்ஃ­போ­லி­யோ­வில் இருக்­க­லாம்.

மேலும் அதானி குழு­மங்­க­ளின் பங்­கு­களை வாங்கி வையுங்­கள். அது நல்ல பலன் தரும் நீண்­ட­நாட்­கள் அடிப்­ப­டை­யில்.

அடுத்த வாரம் சந்­தை­கள் எப்­படி இருக்­கும்?

அடுத்த வாரம் சந்­தை­கள் சிறிது கீழே இருக்க வாய்ப்­பு­கள் உண்டு. கார­ணம் சென்­டி­மென்ட் அப்­படி இருக்­கி­றது. மோடி பிர­தம மந்­திரி ஆவ­தற்கு முன்பு, அதற்­குப் பின்பு நல்ல அளவு புள்­ளி­கள் மேலே ஏறி சந்­தை­கள் முடி­வ­டைந்­தி­ருக்­கின்­றன. அதில் லாபம் பார்ப்­ப­வர்­கள் இருக்­கி­றார்­கள், இது­வும் ஒரு கார­ணம்.

மத்­திய முழு பட்­ஜெட் தாக்­கல் செய்­யப்­ப­ட­வி­ருக்­கி­றது. இது பிஜேபி அர­சாங்­கத்­திற்கு ஒரு முக்­கி­ய­மான பட்­ஜெட்­டாக இருக்­கும். குறிப்­பாக நிர்­மலா சீதா­ரா­மன் அவர்­க­ளுக்கு ஒரு முக்­கி­ய­மான பட்­ஜெட்­டாக இரும்க்­கும். ஆத­லால் சில சலு­கை­க­களை எதிர்­பார்க்­க­லாம். இது சந்­தை­களை சிறிது கூட்­டும் வாய்ப்­பு­கள் அதி­கம்.

உங்கள் சந்தேகங்களுக்கு

உங்கள் சந்தேகங்களுக்கு எழுதுங்கள், எழுத வேண்டிய ஈமெயில் முகவரி: sethuraman.sathappan@gmail.com.  

ப்ளாக்: sethuramansathappan.blogspot.com.   மொபைல்: 098 204 51259. இந்த தொடரின் பழைய பகுதிகளை படிக்க www.startupfundingsources.com