ஏற்­று­மதி உல­கம்: மே மாத இந்­தி­யா­வின் ஏற்­று­மதி 4 சத­வீ­தம் கூடு­தல்

16-06-2019 06:59 PM

மே மாதம், இந்­தி­யா­வின் ஏற்­று­மதி அளவு சென்ற வரு­டம் இதே காலத்தை விட 3.93 சத­வீ­தம் உயர்ந்­துள்­ளது. தோல் பொருட்­கள், கன­ரக பொருட்­கள், ஆப­ரண நகை­கள்,  இரும்பு ஆகி­ய­வற்­றின் ஏற்­று­மதி குறைந்­தி­ருந்­தி­ருந்­தது. மே மாதம் 29.99 பில்­லி­யன் டாலர் அள­விற்கு ஏற்­று­மதி இந்­தி­யா­வி­லி­ருந்து செய்­யப்­பட்­டி­ருக்­கி­றது.

சர்­வ­தேச சந்­தை­யில் காணப் படும் மந்­த­நிலை கார­ண­மாக இஞ்­சி­னி­ய­ரிங் பொருட்­க­ளின் ஏற்­று­மதி பிரச்­சி­னையை சந்­தித்து வரு­கின்­றது.

மின்­னணு சாத­னங்­கள், ஆடை கள், மருந்­துப் பொருட்­கள், ரசா யனங்­கள் போன்ற பொருட்­க­ளின் ஏற்­று­ம­தி­யும் மே மாதத்­தில் உயர்ந் திருக்­கி­றது.

2018-19 நிதி­யாண்­டில் மொத்த ஏற்­று­மதி 9.06 சத­வீத வளர்ச்­சியை அடைந்­துள்­ளது. அதன் மொத்த மதிப்பு 331 பில்­லி­யன் டாலர் ஆகும்.

அமெ­ரிக்கா பொருட்­க­ளின் மீது இந்­தியா அதி­கப்­ப­டி­யான வரி விதிப்பு

அமெ­ரிக்கா இந்­திய பொருட்­க­ளுக்கு கொடுத்­தி­ருந்த சலு­கை­களை திரும்­பப் பெற்­றுக் கொண்­ட­தால், அதற்கு பதி­லடி கொடுக்­கும் வித­மாக இந்­தி­யா­வும் அமெ­ரிக்­கா­வில் இருந்து இறக்­கு­ம­தி­யா­கும் 29 பொருட்­க­ளுக்கு அதி­கப்­ப­டி­யான இறக்­கு­மதி வரி விதிப்­பது என முடிவு செய்­துள்­ளது. இதில் குறிப்­பாக அல்­மாண்ட், வால்­நட், பருப்பு வகை­கள் ஆகி­யவை அடங்­கும். இந்த வரி­வி­திப்பு ஜூன் 16ஆம் தேதி முதல் அம­லுக்கு வரும் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இது அமெ­ரிக்க ஏற்­று­ம­தி­யா­ளர்­களை பெரி­த­ள­வில் பாதிக்­கும். இத­னால் இந்­தி­யா­விற்கு வரு­டத்­திற்கு 217 மில்­லி­யன் டாலர்­கள் அதி­கப்­ப­டி­யான வரி கிடைக்­கும். அமெ­ரிக்கா கடந்த வரு­டம் இந்­திய ஸ்டீல் பொருட்­க­ளுக்கு 25 சத­வீ­த­மும், அலு­மி­னிய பொருட்­க­ளுக்கு 10 சத­வீ­தம் வரி­யும் விதித்­தது ஞாப­கம் இருக்­க­லாம். வரி இல்­லா­மல் செய்து கொண்­டி­ருந்த பல ஏற்­று­மதி பொருட்­க­ளுக்கு அமெ­ரிக்கா சமீ­பத்­தில் 5 சத­வீத வரி விதிப்­ப­தி­ருக்­கி­றது.

இதற்கு பதி­லடி கொடுக்­கும் வித­மாக வால் நட்­டிற்கு இறக்­கு­மதி வரி 30 சத­வீ­தத்­தில் இருந்து 120 சத­வீ­த­மாக கூட்­டப்­பட்­டி­ருக்­கி­றது. பெங்­கால் கிராம், மசூர் தால் ஆகி­ய­வற்­றிக்கு  70 சத­வீ­த­மாக கூட்­டப்­பட்­டி­ருக்­கி­றது. லெண்­டி­லுக்கு இறக்­கு­மதி வரி 40 சத­வீ­த­மாக கூட்­டப்­பட்­டி­ருக்­கி­றது.

இன்கோ டேர்ம்ஸ் 2010

சரக்­கு­களை எடுத்­துச் செல்­லும் போது யார் யாருக்கு என்­னென்ன  பொறுப்­பு­கள் என்­பதை வரை­ய­றுக்­கும் டாக்­கு­மெண்ட் இன்கோ டேர்ம்ஸ்  விதி­கள்.

இது 2010ம் வரு­டம் உல­க­ள­வில் திருத்­தப்­பட்ட புதிய விதி­கள்­வெ­ளி­வந்­தது. இது உலக அள­வில் தற்­போது பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. முன்பு13 இன்கோ டேர்ம்ஸ் இருந்­தது. தற்­போது 11 இருக்­கி­றது. அவை:

EXW Ex Works

FCA Free Carrier

CPT Carriage Paid To

CIP Carriage And Insurance Paid To

DAT Delivered At Terminal

DAP Delivered At Place

DDP Delivered Duty Paid

FAS Free Alongside Ship

FOB Free On Board

CFR Cost and Freight

CIF Cost, Insurance and Freight

இறக்­கு­மதி, ஏற்­று­மதி கிளி­ய­ரன்­ஸில் யார் யாருக்கு என்­னென்­ன­பொ­றுப்­பு­கள் இருக்­கி­றது, சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளில் யார் யாருக்கு என்­னென்­ன­ரிஸ்க்­கு­கள் இருக்­கி­றது, என்­னென்ன செல­வு­கள் யாரின் பொறுப்பு சேரும்­என்­பதை விரி­வாக எடுத்­துக் கூறும் டாக்­கு­மெண்ட் இன்­கோ­டெர்ம்ஸ் 2010ஆகும். ஏற்­று­ம­தி­யா­ளர்­கள், இறக்­கு­ம­தி­யா­ளர்­கள் இதை கட்­டா­யம் படித்து தெரிந்து வைத்­துக் கொள்­வது அவ­சி­ய­மா­கும்.

இது 2020ம் ஆண்டு மறு­படி இண்­டர்­நே­ஷன்ல் சேம்­பர் ஆப் காமர்­ஸால் மாற்­றப்­பட உள்­ளது.

இது தவிர ஈ-யூ­சிபி, ஈ-யூ­ஆர்சி புதிய வடி­வங்­க­ளும் வர­வுள்­ளது.

கேள்வி :  ரிவோக்­க­புள் எல்.சி. இப்­போது இருக்­கி­றதா?

பதில் : ரிவோக்­க­புள் எல்.சி. 2007க்கு முன்பு இருந்­தது. தற்­போது இல்லை. ரிவோக்­கப்­புள் எல்.சி.என்­றால் எல்.சி. அனுப்­பிய இறக்­கு­ம­தி­யா­ளர், ஏற்­று­ம­தி­யா­ளர் அனு­மதி இல்­லா­மலே எல்.சி.யை கேன்­சல் செய்து விட முடி­யும். ஏற்­று­ம­தி­யா­ளர் சரக்­கு­களை தயார் செய்து ஏற்­று­மதி செய்­யும் நிலை­யில் இருக்­கும் போது எல்.சி.யை இறக்­கு­ம­தி­யா­ளர் கேன்­சல் செய்­தால் எப்­படி இருக்­கும் ஏற்­று­ம­தி­யா­ள­ரின் நிலை. இத­னால் 2007ல் ஐ.சி.சி. ரிவோக்­க­புள் எல்.சி. வேண்­டாம் என்று யூ.சி.பி.600 விதி­யி­லி­ருந்து எடுத்து விட்­டது.