ஒரு பேனாவின் பயணம் – 212 – சுதாங்கன்

16-06-2019 06:58 PM

இங்கிலீஷ்காரர்கள் காட்டு மிராண்டிகள் !

பலர் பல தடவை  இந்­நா­டு­க­ளின் மீது படை­யெ­டுத்து வந்து கொள்­ளை­ய­டித்து நாசம் செய்­தி­ருக்­கி­றார்­கள். அரச பரம்­ப­ரை­கள் பல நூறு வரு­டங்­கள்  ஆண்ட பிறகு மறைந்து அவற்­றின் இடத்­தில் வேறு பல அரச பரம்­ப­ரை­கள் தோன்றி ஆண்டு வந்து, அவை­யும் மறைந்து இவ்­வாறு மாறி மாறி  வந்­தி­ருக்­கின்­றன. மற்ற நாடு­க­ளி­லும் இவை நிகழ்ந்­தன. ஆனால், இந்­தி­யா­வி­லும் சீனா­வி­லும் மட்­டுமே பழைய நாக­ரி­கம் அறு­ப­டா­மல் தொடர்ச்­சி­யாக வந்­தி­ருக்­கி­றது. மாறு­தல்­கள், சண்­டை­கள், படை­யெ­டுப்­பு­கள் எல்­லா­வற்­றை­யும் மீறி அந்­தப் பழைய நாக­ரி­கம் வற்­றாத ஜீவ நதி­போல் ஓடிக்­கொண்­டி­ருக்­கி­றது. இந்­நா­டு­கள் தங்­க­ளு­டைய பழைய உயர்­நி­லை­யி­லி­ருந்து வீழ்ந்து விட்­ட­தும் இவற்­றி­னு­டைய பழைய அரும்­பெ­றல் கலைப்­பண்பு காலத்­தின் கொடு­மை­யால் மங்கி மாச­டைந்­தி­ருப்­ப­தும் உண்­மையே. ஆயி­னும் அவை இறந்­து­வி­டாது உயி­ரு­டன் இருக்­கின்­றன. இன்­றும் இந்­திய வாழ்க்­கை­யின் அடிப்­படை, இந்­தி­யா­வின் பழைய நாக­ரி­க­மே­யா­கும். இப்­போது உல­கில் பல புதிய மாறு­தல்­கள்  ஏற்­பட்­டி­ருக்­கின்­றன. ரயில் வண்டி, நீரா­விக் கப்­பல். பெரிய தொழிற்­சாலை – இவை ஏற்­பட்ட பிறகு உல­கமே மாறி­விட்­டது. இந்­தி­யா­வி­லும் இம்­மா­று­தல் நிக­ழ­லாம், நிகழ்ந்­தும் வரு­கி­றது. ஆனால் சரித்­தி­ரம் பிறந்த நாளி­லி­ருந்து பல்­லா­யி­ரம் ஆண்­டு­க­ளாக வாழை­யடி வாழை­யாக வந்து கொண்­டி­ருக்­கும் இந்­தி­யா­வின் கலை நாக­ரி­கங்­களை உன்­னிப்­பார்க்­கும்­போது யார்­தான் உவ­கை­யும், வியப்­பும் அடை­யா­ம­லி­ருக்க முடி­யும்? ஒரு வகை­யில் இன்று இந்­தி­யா­வில் வாழும் நாம் அப்­பண்­டைக் காலத்­தின் நேர் வாரி­சு­கள். பிரம்­மா­வர்த்­தம், ஆரி­யா­வர்த்­தம், பாரத வர்­ஷம், இந்­துஸ்­தா­னம் என்று பிறகு அழைக்­கப்­பட்ட வளப்பு மிகுந்த இத்­தே­சத்­துக்கு வட­மேற்கு மலைக்­க­ண­வாய்­க­ளின் வழி­யாக வந்த அப்­ப­ழம்­பெ­ரு­மக்­க­ளின் நேர்­கால் வழி­யில் வந்­தி­ருப்­ப­வர்­களே நாம். தாங்­கள் கண்­டும் கேட்­டு­மி­ராத நிலத்தை நாடி அம்­மலை கன­வாய்­க­ளின் வழி­யாக அவர்­கள் கூட்­டங்­கூட்­ட­மா­க­வும், வரிசை வரி­சை­யா­க­வும் வரு­வதை இன்­னும் நமது மனக்­கண்­ணால் பார்க்க முடி­கி­ற­தல்­லவா? விளை­வது கரு­தா­மல், யாது நேரி­னும் நேரட்­டு­மென்று எதற்­கும் அஞ்­சா­மல் அவர்­கள் முன்­னே­றிச் சென்­றார்­கள். மர­ணம்­வ­ரி­னும் அவர்­கள் கலங்­க­வில்லை. அதைப் புன்­மு­று­வ­லு­டன் வர­வேற்­றார்­கள். இடுக்­கண்­க­ளைப் பொருட்­ப­டுத்­தா­மல், தோல்வி வீழ்ச்­சி­க­ளுக்கு அஞ்­சா­மல் செல்­வதே வாழ்க்­கை­யில் இன்­பம் நுக­ரும் வழி என்று அவர்­கள் அறிந்­தி­ருந்­தார்­கள். ஏனெ­னில், அச்­ச­மி­லா­தான் ஒரு­வ­னைக் கண்டு தோல்­வி­யும் துன்­ப­மும் கூட வழி வில­கிப் போகும். இவ்­வாறு வழி நடந்து வந்த நமது மூதா­தை­யர்­கள் திடீ­ரென்று கம்­பீ­ர­மாக செல்­லும் கங்கை நதி­யின் கரையை அடைந்­த­வு­டன் எவ்­வ­ளவு ஆனந்­தம் அடைந்­தி­ருப்­பார்­கள்! கங்­கா­தே­விக்கு அவர்­கள் தலை­வ­ணங்கி அவ­ளு­டைய புகழ்­க­ளைத் தங்­க­ளு­டைய மது­ர­மொ­ழி­யில் பாடி­ய­தில் ஏதே­னும் ஆச்­ச­ரி­ய­முண்டா? இவ்­வ­ளவு பழமை பெற்ற காலத்­தின் வாரி­சு­கள் நாம் என்று நினைக்க ஆச்­ச­ரி­யத்­தால் மெய்­ம­றந்து போகி­றோம். ஆனால் நாம் கர்­வம் படைக்­கக் கூடாது. ஏனெ­னில் பழ­மை­யி­லுள்ள நல்­லது தீயது இரண்­டுக்­கும் நாம் வாரி­சு­கள். நமக்­குக் கிடைத்­துள்ள இப்­பூர்­வீ­கச் சொத்­தில் தீமை நிறைய இருக்­கி­றது. உல­கி­லேயே இன்று நாம் இழிந்த நிலை­யில் வறுமை வாய்ப்­பட்டு உழு­வ­தற்­கும், எடுப்­பார் கைப்­பிள்­ளை­யாக ஏமாந்து விழிப்­ப­தற்­கும் நமது பழைய நாக­ரி­கத்­தி­லுள்ள  தீய அம்­சமே கார­ண­மா­கும். ஆனால், இந்­நிலை இனி ஒழி­ய­வேண்­டு­மென்று நாம் திட சங்­கல்­பம் செய்து கொண்­டி­ருக்­கி­றோம் அல்­லவா?

கிரேக்­கர்­கள்

ஜன­வரி 10,1931

 நீங்­கள் யாரும் இன்று என்னை பார்க்க வர­வில்லை. சந்­திப்பு நாள் வெற்று நாளாய் முடிந்­தது. நான் பெரிய ஏமாற்­றம் அடைந்­தேன். உன் தாத்­தா­வுக்கு உடம்பு சரி­யில்­லா­த­தால்­தான் பார்க்க வர­வில்லை என்று கேட்டு இன்­னும் கவலை அடைந்­தேன். அதற்கு மேல் ஒன்­றும் தெரி­ய­வில்லை. உங்­க­ளைப் பார்ப்­பது இல்­லா­மல் போகவே என்­னு­டைய ராட்­டையை எடுத்து வைத்­துக்­கொண்டு கொஞ்­சம் நூல் நூற்­றேன். ராட்­டை­யில்   நூல் நூற்­ப­தும் நாடா செய்­வ­தும் இனி­மை­யா­க­வும் ஆறு­த­லா­க­வும் இருக்­கின்­றன.ஆகவே, உனக்கு மன­தில் கவலை உண்­டா­னால் நூல் ஆரம்­பித்­து­விடு!

 சென்ற கடி­தத்­தில் நாம் ஆசி­யா­வுக்­கும் ஐரோப்­பா­வுக்­கும் முள்ள ஒற்­றுமை, வேற்­று­மை­களை கவ­னித்­தோம். பழைய காலத்­தில் ஐரோப்பா எப்­படி இருந்­தது என்று சிறிது பார்ப்­போம். நீண்ட நாட்­க­ளாக ஐரோப்பா என்­றாலே மத்­தி­ய­த­ரைக் கட­லைச் சுற்­றி­யுள்ள நாடு­க­ளையே அது குறித்து வந்­தது. அக்­கா­லத்­தில் ஐரோப்­பா­வின் வட­பா­கத்­தி­லி­ருந்த தேசங்­க­ளைப் பற்றி ஒன்­றும் தெரி­ய­வில்லை. மத்­திய தரைக் கடல் நாடு­க­ளில் வாழ்ந்­த­வர்­கள் ஜெர்­மனி, இங்­கி­லாந்து, பிரான்ஸ் ஆகிய இடங்­க­ளில் நாக­ரி­க­மற்ற காட்­டு­மி­ராண்­டி­கள் வசித்­த­தா­கக் கருதி வந்­தார்­கள். ஆரம்­பத்­தில், உண்­மை­யி­லேயே கிழக்கு மத்­திய தரைக்­க­டல் நாடு­க­ளைத் தாண்டி நாக­ரி­கம் பர­வ­வில்லை. எகிப்து  ( இது ஆப்­­­­­ரிக்­கா­வில் இருக்­கி­றது. ஐரோப்­பா­வில் இல்லை) நாசாசு இவ்­வி­ரண்டு நாடு­களே முதன்­மையா­ னவை என்­பதை நீ அறி­வாய். சிறிது சிறி­தாக ஆரி­யர்­கள் ஆசி­யா­வி­லி­ருந்து மேற்கே கிளம்பி, கிரீ­சை­யும் அதைச் சுற்­றி­லு­முள்ள நாடு­க­ளை­யும் கைப்­பற்­றிக்­கொண்­டார்­கள். இந்த ஆரிய கிரேக்­கர்­க­ளையே பண்­டைய கிரேக்­கர்­கள் என்று நாம் போற்­று­கி­றோம். இதற்கு முன்பே இந்­தி­யா­வுக்­குள் வந்த ஆரி­யர்­க­ளுக்­கும் இவர்­க­ளுக்­கும் ஆரம்­பத்­தில் அதிக வேற்­றுமை இல்லை என்று எண்­ணு­கி­றேன். ஆனால் பல மாறு­தல்­கள் கார­ண­மாக ஆரிய ஜாதி­யின்  இவ்­விரு பிரி­வி­ன­ருக்­குள்­ளும் சிறிது சிறி­தாக வேற்­று­மை­கள் அதி­க­ரித்­துக் காணப்­ப­ட­லா­யின. ஆரி­யர்­கள் இந்­தி­யா­வுக்கு வரு­முன்பே இங்கு பர­வி­யி­ருந்த மிகப்­ப­ழைய நாக­ரி­க­மான திரா­விட நாக­ரி­கம் இந்­திய ஆரி­யர்­களை  வெகு­வாக ஆட்­கொண்­டது. ஒரு வேளை இந்த மொகஞ்ச தாரோ அழி­வுற்­றுக் காணப்­ப­டும் நாக­ரி­க­மும் அவர்­களை பாதித்­தி­ருக்­க­லாம்.  ஆரி­யர்­க­ளும், திரா­வி­டர்க­ ளும் ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் உள்­ளத்தை கொடுத்து இல்­லா­ததை வாங்­கிக் கொண்­டார்­கள்.இரு­வ­ரும் சேர்ந்து இந்­தி­யா­வில் பொது­வான ஒரு நாக­ரி­கத்தை வளர்த்­தார்­கள்.

 அதே போல ஆரிய கிரேக்­கர்­க­ளும் கிரேக்­கர் நாட்­டில் சிறப்­புற்று விளங்­கிய நாசாசு நாக­ரி­கத்­தால் பெரி­தும் பாதிக்­கப்­பட்­டி­ருக்­க­வேண்­டும். ஆனால் அவர்­கள் அந்த நாக­ரி­கத்தை  அழித்து அதன்­மீது தங்­கள் சொந்த நாக­ரி­கத்தை எழுப்­பி­னார்­கள். அந்த நாளில் ஆரிய இந்­தி­யர்­க­ளும் ஆரிய கிரேக்­கர்­க­ளும் மூடர்­க­ளா­க­வும், சண்­டை­யில் சளைக்­கா­த­வர்­க­ளா­க­வும் இருந்­தார்­கள் என்­பதை நாம் இங்கு நினை­வில்  வைக்க வேண்­டும். மென்­மை­யும் முதிர்ந்த நாக­ரி­க­மும் படைத்­த­வர்­கள் எதிர்ப்­பட்ட போது வலிமை மிகுந்த அவ்­வா­ரி­யர்­கள் அவர்­களை ஒன்று அழித்­தார்­கள்

அல்­லது சுவீ­க­ரித்­துக்­கொண்­டார்­கள்.

ஆகவே கிறிஸ்து பிறப்­ப­தற்கு ஆயி­ரம் ஆண்­டு­க­ளுக்கு முன்பே நாசாசு  அழிக்­கப்­பட்­டு­விட்­டது. புதிய கிரேக்­கர்­கள் கிரீ­சி­லும் அதைச் சுற்­றி­யுள்ள தீவு­க­ளி­லும் நிலை­பெற்­றுக் குடி­யே­ றி­னார்­கள். அவர்­கள் கடல் வழி­யா­கச் சின்ன ஆசி­யா­வின் மேற்கு கரைக்­கும்,  இத்­தா­லி­யின் தென்­பா­கம், சிசிலி, பிரான்­சின் தென்­பா­கம் முத­லிய இடங்­க­ளுக்­குப் போனார்­கள். பிரா­சி­லுள்ள மார்­சேல்ஸ் என்­னும் பட்­ட­ணம் இவர்­க­ளால் தோற்­று­விக்­கப்­பட்­டது. ஆனால், இவர்­கள் போவ­தற்கு முன்பே பினி­ஷி­யர்­கள் அங்கு குடி­யே­றி­யி­ ருந்­தார்­கள். சின்ன ஆசி­யா­வைச் சேர்ந்த பினி­ஷி­யர்­கள் வியா­பா­ரத்தை நாடிக் கடல்­க­டந்து பல தூர தேசங்­க­ளுக்­குப் போனார்­கள் என்­பது உனக்கு நினை­வி­ருக்­க­லாம். அந்த நாட்­க­ளி­லேயே அவர்­கள் இங்­கி­லாந்­துக்­குச் சென்­றார்­கள். ஜிப்­ரால்­ட­ருக்கு அரு­கி­லுள்ள குறு­கிய கடல் வழி­யாக அவர்­கள் செய்த பிர­யா­ணம் மிக­வும் அபா­யம் நிறைந்­த­தாக இருந்­தி­ருக்க வேண்­டும். இங்­கி­லாந்து அப்­போது காட்­டு­மி­ராண்­டி­கள் வாழும் நாடாக இருந்­தது.

 கிரி­சில் ஏதென்ஸ், ஸ்பார்ட்டா, தீப்ஸ், கொரிந்து முத­லிய நக­ரங்­கள் தோன்­றிப் பேரும் புக­ழும் பெற்று விளங்­கின. கிரேக்­கர்­க­ளின் – அவர்­க­ளுக்கு ஹெல­னி­யர் என்­றும் ஒரு பெயர் உண்டு. பழைய வர­லா­று­க­ளைக் கூறும் மகா­கா­வி­யங்­கள் ‘இலி­யாது’, ‘ஓதி­சி­யன்’ என்­பன ஆகும். இவற்­றைப் பற்றி உனக்­குக் கொஞ்­சம் தெரி­யும். இவை ஒரு­வ­கை­யில் நமது இதி­கா­சங்­க­ளால ‘ராமா­ய­ண’த்­தை­யும், ‘மகா­பா­ர­த’த்­தை­யும் ஒத்­தி­ருக்­கின்­றன. இவற்றை இயற்­றி­ய­வர் ஹோமர் என்­னும் அந்­த­கக்­கவி. கிரீ­சி­லி­ருந்த ஹெலன் என்­னும் அழ­கிய மாதை­பா­ரிஸ் என்­ப­வன் திராய் என்­னும் தன்­னு­டைய பட்­ட­ணத்­திற்கு கவர்ந்து கொண்டு போன­தை­யும்,  கிரீ­சி­லி­ருந்த அர­சர்­க­ளும், சிற்­ற­ர­சர்­க­ளும் சேர்ந்து ஹெலனை மீட்­கத் திராய் நகரை முற்­று­கை­யிட்­ட­தை­யும் கூறு­வதே ‘இலி­யாது’ என்­னும் காவி­யம். திராய் நகரை முற்­று­கை­யிட்­டுத் திரும்­பும்­போது ஓதீ­சி­யஸ் அல்­லது உலீ­ஸஸ் என்­ப­வன் வழி­யில் அடைந்த அனு­ப­வங்­களை கூறும் கதையே ‘ஒதீ­சி­யம்’ என்­னும் காவி­யம். சின்ன  ஆசி­யா­வின் கடற்­க­ரைக்­க­ரு­கில் இந்த திராய் நக­ரம் இருந்­தது. அந்­ந­க­ரம் மறைந்து நெடுங்­கா­ல­மா­யிற்று. ஆனால் ஒரு மகா­க­வி­யின் கற்­பனா சக்­தி­யி­னால் அது இன்­றும் இற­வாது விளங்­கிக் கொண்­டி­ருக்­கி­றது.

 இவ்­வாறு கிரீஸ் சிறப்­புற்று உச்­ச­நி­லைக்கு வரும் நாளிலே பிற்­கா­லத்­தில் கிரீசை வென்று அதன் ஸ்தானத்தை வகிக்க இருக்­கும் ரோமா­புரி பிறந்­தது. ஏறக்­கு­றைய இக்­கா­லத்­தில்­தான் ரோம் நக­ரம் தோற்­று­விக்­கப்­பட்­டது. ஆனால் சில நூற்­றாண்­டு­கள் வரை­யில் உல­கத்­தில் அது முக்­கி­யம் வாய்ந்­த­தாக இல்லை. அப்­ப­டி­யா­யின் இப்­போது ஏன் அதைக் கூறி­னேன் என்­றால், பிற்­கா­லத்­தில் ரோமா­புரி பல நூற்­றாண்­டு­க­ளுக்கு ஐரோப்­பா­வின் தலை­ந­க­ர­மாக விளங்­கி­யது. ` புவி­ய­ரசி’ என்­றும், `என்­று­முள நக­ரம்’ என்­றும் அது பெரு­மை­யாக அழைக்­கப்­பட்­டது. அத்­த­கைய நக­ரம் பிறந்­த­தைச் சொல்ல வேண்­டு­மல்­லவா? ரோமா­பு­ரி­யின் உற்­பத்­தி­யைப் பற்றி பல வேடிக்கை கதை­கள் வழங்­கு­கின்­றன. அதைத் தோற்­று­வித்த ரீமஸ், ரோமல்ஸ் என்­ப­வர்­கள் ஒரு பெண் ஓநாய் எடுத்­துக்­கொண்டு போய் வைத்­தி­ருந்­த­தாம். ஒரு வேளை உனக்கு அந்­தக் கதை தெரிந்­தி­ருக்­க­லாம்.

 ரோமா­புரி தோற்­று­விக்­கப்­பட்ட காலத்­தி­லேயே அல்­லது அதற்கு சற்று முன்பு இருக்­க­லாம். இன்­னொரு பழம்­பெ­ரும் பட்­ட­ணம் தோற்­று­விக்­கப்­பட்­டது. ஆப்­ரிக்­கா­வின் வட­க­ரை­யில் பினி­ஷீ­ யர்­கள் கார்­கேஜ் என்­னும்  இப்­பட்­ட­ணத்தை நிர்­மா­னித்­தார்­கள். அது கட­லா­திக்­கம் பெற்­றுத் திகழ்ந்­தது. ரோமா­பு­ரிக்­கும், கார்­தே­ஜுக்­கும் இடையே தீராப் பகை ஏற்­பட்டு பல போர்­க­ளும் நிகழ்ந்­தன. முடி­வில் ரோமா­புரி வெற்றி பெற்­றது. கார்­தேஜ் அழிந்து போயிற்று.

 இக்­க­டி­தத்தை முடிக்கு முன்பு பாலஸ்­தீ­னத்­தைச் சிறிது கவ­னிப்­போம் பாலஸ்­தீ­னம் ஐரோப்­பா­வில் இல்லை. அது சரித்­திர முக்­கி­யத்­து­வம் வாய்ந்­த­தல்ல. பழைய ஏற்­பாட்­டில் அதன் சரித்­தி­ரம் கூறப்­பட்­டி­ருப்­ப­தால் அதை அறி­யப் பல­ரும் ஆவல் கொள்­கி­றார்­கள். அந்­நாட்­டில் வாழ்ந்த யூத ஜாதி­ய­ரைப் பற்­றி­யும் அவர்­க­ளுக்­குப் பக்­கத்­தில் வாழ்ந்த பாபி­லோ­னி­யர்,  ஆசீ­ரி­யர், எகிப்­தி­யர் ஆகி­யோ­ரால் அவர்­கள் அடைந்த துன்­பங்­க­ளைப் பற்­றி­யும் பழைய ஏற்­பாடு கூறு­கி­றது. யூத கிறிஸ்­துவ மதங்­க­ளின் ஒரு பாக­மாக இக்­கதை அமைந்­தி­ரா­விட்­டால் இதை அறிந்­த­வர் மிக­வும் குறை­வா­கவே இருப்­பர்.

 நாசாசு அழி­வுற்ற காலத்­தில் பாலஸ்­தீ­னத்­தில் ஒரு பாக­மா­கிய இஸ்­ரே­லுக்கு சவுல் அர­ச­னா­யி­ருந்­தான். அவ­னுக்கு பிறகு தாவீது அர­சாண்­டான். அவ­னுக்­குப் பின்பு சிம்­மா­ச­னம் ஏறிய சால­மோன் மகா­மே­தா­வி­யாக விளங்­கி­னான். இம்­மூ­வ­ரைப் பற்­றி­யும் நீ அறிந்­தி­ருக்க வேண்­டும். அத­னால் அவர்­க­ளைப் பற்றி சொன்­னேன்.

கிரேக்க நகர – ராஜ்­ஜி­யங்­கள்

ஜன­வரி 11, 1931

 நான் கடை­சி­யாக எழு­திய கடி­தத்­தில் கிரேக்­கர்­க­ளைப் பற்­றிச் சிறிது கூறி­யி­ருந்­தேன். அவர்­கள் எப்­படி இருந்­தார்­கள் என்று தெரிந்து கொள்ள முயற்­சிப்­போம். நாம் பாரத மக்­க­ளைப் பற்றி உண்­மை­யைத் தெரிந்து கொள்­வது கடி­னம்­தான். தற்­கா­லத்­திய நிலை­மை­க­ளி­லும் வாழ்க்கை முறை­க­ளி­லும் நாம்  பழகி ஊறிப் போயி­ருப்­ப­தால் இதற்கு மாறு­பட்ட ஓர் உல­கத்தை நம்­மால் நினைத்­துப் பார்ப்­பதே கஷ்­ட­மாக இருக்­கி­றது. ஆயி­னும் இந்­தி­யா­வி­லும் சரி, சீனா­வி­லும் சரி, கிரீ­சி­லும் சரி, பழங்­கா­லத்து நிலை தற்­கா­லத்து நிலை­யி­னின்­றும் முற்­றி­லும் மாறு­பட்­டி­ருந்­தது. கல்­வெட்­டுக்­கள், தோண்­டி­யெ­டுக்­கப்­பட்­டவை. இவற்­றின் துணை­கொண்­டும் பழங்­கால மக்­கள் எப்­படி இருந்­தார்­கள் என்று ஒரு­வாறு ஊகிக்­க­லாம். இது­தான் நாம் செய்­யக்­கூ­டி­யது.

 கிரேக்­கர்­க­ளைப் பற்றி ஒரு ரச­மான விஷ­யம் தெரி­ய­வ­ரு­கி­றது. அவர்­கள் பெரிய ராஜ்­ஜி­யங்­க­ளை­யும் சாம்­ராஜ்­யங்­க­ளை­யும் விரும்­ப­வில்லை சிறிய நகர ராஜ்­ஜி­யங்­க­ளையே அவர்­கள் விரும்பி ஏற்­ப­டுத்­தி­னார்­கள். அதா­வது ஒவ்­வொரு நக­ர­மும் ஒரு தனிப்­பட்ட ராஜ்­ஜி­யம். நடு­வில் ஒரு நக­ரம் அதை சுற்­றி­லும் விளை­நி­லங்­கள். அவற்­றில் விளைந்து பொருட்­கள் நக­ரத்­துக்கு உண­வா­யின.  இது ஒரு குடி­ய­ரசு. இம்­மா­திரி பல குடி­ய­ர­சு­கள். குடி­ய­ரசு என்­றால் அர­சன் கிடை­யாது. கிரேக்க நகர – ராஜ்­ஜி­யங்­க­ளுக்­கும் அர­சர்­கள் இல்லை. நக­ரத்­தில் உள்ள செல்­வர்­கள் அவற்றை ஆண்டு வந்­தார்­கள். சாதா­ரண ஜனங்­க­ளுக்கு அர­சாங்­கத்­தில் உள்ள செல்­வாக்கு மிக­வும் கொஞ்­சம். அங்கு பல அடி­மை­கள் இருந்­தார்­கள். அவர்­க­ளுக்கு  அர­சாங்­கத்­தில் யாதொரு உரி­மை­யும் கிடை­யாது. பெண்­க­ளுக்கு உரிமை கிடை­யாது. அந்­ந­கர – ராஜ்­ஜி­யங்­க­ளில் வாழ்ந்த ஜனத்­தொ­கை­யில் ஒரு பகு­தி­யி­னரே நக­ர­மாந்­தர்­க­ளா­கக் கரு­தப்­பட்­ட­னர்.  அவர்­க­ளுக்­குத்­தான் பொது விஷ­யங்­களை வாக்கு அளித்­துத் தீர்­மா­னிக்க உரிமை உண்டு. இந்­ந­கர மாந்­தர்­கள் ஓர் இடத்­தில் கூடி வாக்­க­ளிப்­பது கஷ்­ட­மான காரி­ய­மல்ல. இதற்­குக் கார­ணம் அவை ஓர் அர­சாங்­கத்­தில் ஆளு­கைக்­குட்­பட்ட பெரிய தேச­மா­யி­ரா­மல் சிறு சிறு நகர – ராஜ்­ஜி­யங்­க­ளாக இருந்­த­மை­தான். இந்­தியா முழு­வ­தி­லு­முள்ள மாகா­ணத்­தின் வாக்­கா­ளர்­கள் ஓர் இடது ஒன்று சேரு­வ­தாக வைத்­துக் கொள் ! இது சாத்­தி­யமா? ஒரு காலும் சாத்­தி­ய­மில்லை.  பிற்­கா­லத்­தில் மற்ற தேசங்­க­ளில் இந்­தக் கஷ்­டம் ஏற்­பட்­ட­போது அத்­தே­சத்­தார்­கள் பிர­தி­நி­தித்­து­வம் வாய்ந்த அர­சாங்க முறையை கடைப்­பி­டித்­தார்­கள். இதன்­படி ஒரு தேசத்­தின் வாக்­கா­ளர்­கள் அனை­வ­ரும் தங்­கள் பிரச்­னை­க­ளைத் தீர்த்­துக் கொள்ள ஓரி­டத்­தில் கூடு­வ­தற்­குப் பதி­லா­கத் தங்­கள் ` பிர­தி­நிதி’ களைத் தேர்ந்­தெ­டுக்­கி­றார்­கள்.

(தொட­ரும்)