தெலுங்கானாவை குறிவைக்கும் பா.ஜ.,

14-06-2019 03:22 PM

நரேந்­திர மோடி­யின் அலை வட தெலுங்­கா­னா­வில் மாற்­றத்தை உண்­டாக்கி விட்­டதா? அப்­ப­டி­தான் தெரி­கின்­றது. தெலுங்­கா­னா­வில் செகந்­தி­ர­பாத், கரிம்­ந­கர், அடி­லா­பாத், நிஜா­மா­பாத் ஆகிய நான்கு தொகு­தி­க­ளில் பா.ஜ,வெற்றி பெற்­றுள்­ளது. இதில் வட தெலுங்­கா­னா­வில் உள்ள நான்கு லோக்­சபா தொகு­தி­க­ளில் மூன்­றில் பார­திய ஜனதா வெற்றி பெற்­றுள்­ளது. அவை கரிம்­ந­கர், அடி­லா­பாத், நிஜா­மா­பாத் ஆகி­யவை. இந்த பிராந்­தி­யம் முழு­வ­தும் ஒரு காலத்­தில் மாவோ­யிஸ்­டு­க­ளின் செல்­வாக்­கில் இருந்­தன. மாவோ­யிஸ்ட் தலை­வர்­கள் கிசன்ஜி, கண­பதி இரு­வ­ரும் கரிம்­ந­கர் அருகே உள்ள கிரா­மத்­தைச் சேர்ந்­த­வர்­கள்.

 இந்த பகு­தி­யைச் சேர்ந்த அறி­வு­ஜு­வி­க­ளும் மாவோ­யிஸ்­டு­க­ளுக்கு ஆத­ர­வா­ளர்­க­ளாக இருந்­த­னர். தற்­போது நடை­பெற்ற லோக்­சபா தேர்­த­லில் முக்­கிய பங்­காற்­றி­யது இந்­து–­­முஸ்­லீம் சமூ­கத்­தி­னர் மத்­தி­யில் உண்­டான பிரி­வி­னையே. கரீம்­ந­கர் தொகு­தி­யில் போட்­டி­யிட்ட பா.ஜ.,வேட்­பா­ளர் பண்டி சஞ்­சய் குமார் மீது, அகில இந்­திய மஜ்­லிஸ்–­­இ–­­இ­டி­ஹ­துல் முஸ்­லி­மேன் ஆத­ர­வா­ளர் தாக்­கு­தல் நடத்­தி­ய­தாக வெளி­யான வீடியோ சமூக வலைத்­த­ளங்­க­ளில் காட்­டுத் தீ போல் பர­வி­யது. அதன் பிறகு இளை­ஞர்­கள் பண்டி சஞ்­சய் குமார் பின்­னாள் அணி­வ­குக்க தொடங்­கி­னார்­கள். இத்­து­டன் செகந்­தி­ரா­பாத் தொகு­தி­யி­லும் பா.ஜ,வெற்றி பெற்­றுள்­ளது.

தெலுங்­கானா முத­ல­மைச்­ச­ரும், தெலுங்­கான ராஷ்­டி­ரிய சமிதி தலை­வ­ரு­மான கே.சந்­தி­ர­சே­கர ராவ், மார்ச் 29ம் தேதி நடை­பெற்ற பொதுக்­கூட்­டத்­தில், பிர­த­மர் நரேந்­திர மோடியை விட, தான் தீவிர இந்து என்று கூறி­னார். இதை திரித்து கூறி, பா.ஜ,,பிர­சா­ரத்­திற்கு பயன்­ப­டுத்­தி­னார்­கள். கரீம்­ந­க­ரைச் சேர்ந்த வாக்­கா­ளர் ஒரு­வர், அவர் (சந்­தி­ர­சே­கர ராவ்) அகில இந்­திய மஜ்­லிஸ்–­­இ–­­இ­டி­ஹ­துல் முஸ்­லி­மேன் தலை­வர் ஓவைசி உடன் நெருக்­க­மாக இருக்­கின்­றார். இத­னால் அவ­ருக்கு பாடம் கற்­பிக்க எண்­ணி­னேன்.

சுய­ம­ரி­யாதை உள்ள இந்து என்­கின்ற முறை­யில் மோடிக்கு வாக்­க­ளித்­தேன்” என்று தெரி­வித்­தார். சந்­தி­ர­சே­கர ராவ்­வுக்கு நெருக்­க­மா­ன­வ­ராக கரு­தப்­ப­டும், தெலுங்­கான ராஷ்­டி­ரிய சமிதி லோக்­சபா கட்­சி­யின் துணைத்­த­லை­வ­ராக இருந்த வினோத் குமார் போயன்­பள்ளி, 90 ஆயி­ரம் வாக்­கு­கள் வித்­தி­யா­சத்­தில், பா.ஜா., வேட்­பா­ளர் பண்டி சஞ்­சய் குமா­ரி­டம் தோல்­வி­ய­டைந்­தார்.

சென்ற டிசம்­ப­ரில் தெலுங்­கானா சட்­ட­சபை தேர்­தல் நடை­பெற்­றது. அப்­போது பா.ஜ., 7.1 சத­வி­கித வாக்­கு­களை வாங்­கி­யி­ருந்­தது. இப்­போது நடை­பெற்ற லோக்­சபா தேர்­த­லில் 19.45 சத­வி­கித வாக்­கு­களை வாங்­கி­யுள்­ளது. இது பா.ஜ. கட்­சி­யி­ன­ருக்கே ஆச்­ச­ரி­யத்தை கொடுத்­தது. “இதற்கு முக்­கிய கார­ணம் மோடி­யின் இமேஜ். அத்­து­டன் முஸ்­லீம்­கள் அதி­கம் வாழும் தொகு­தி­க­ளில் அல்­லது அகில இந்­திய மஜ்­லிஸ்–­­இ–­­இ­டி­ஹ­துல் முஸ்­லி­மேன் கட்சி பல­மாக உள்ள இடங்­க­ளில் பா.ஜ,,பலம் அடைந்­துள்­ளது என்று கூறு­கின்­றார் பா.ஜ.,தேசிய பொதுச் செய­லா­ளர் பி.முர­ளி­தர் ராவ். அவர் மேலும் கூறு­கை­யில், தெலுங்­கா­னா­வில் ராஜாக்­கர்­களை (நிஜாம் ராணு­வம்) எதிர்த்து போரிட்ட வர­லாறு உண்டு. இந்த வர­லா­றுக்கு சொந்­தக்­கா­ரர்­கள் பா.ஜ.,வினரே. இது சுதந்­திர போராட்­டத்­தில் முக்­கி­ய­மான அம்­சம். பா.ஜ,.,வைத் தவிர மற்ற எந்த கட்­சி­யும் இதை அங்­கீ­க­ரிக்­க­வில்லை. இதை எப்­படி மக்­கள் மறப்­பார்­கள். ஒன்று அல்­லது இரண்டு வரு­டங்­க­ளில் பா.ஜ.,வின் வளர்ச்சி வெளிப்­ப­டை­யாக தெரி­யும்”  என்று கூறி­னார்.

தெலுங்­கா­னா­வில் தற்­போ­தைய வெற்றி, தென் இந்­தி­யா­வில் கர்­நா­டா­க­வுக்கு அடுத்து பா.ஜ.,வின் வளர்ச்­சிக்கு தெலுங்­கானா இரண்­டா­வது நுழைவு வாயி­லாக இருக்­கும் என்ற துணிவை பா.ஜ.,வுக்கு ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.  

தன்னை வெளிக்­காட்­டிக் கொள்ள விரும்­பாத காங்­கி­ரஸ் மூத்த தலை­வர் ஒரு­வர் கூறு­கை­யில், “ சில தொகு­தி­க­ளில் பா.ஜ,,வேட்­பா­ளர் பிர­சா­ரம் கூட செய்­ய­வில்லை. அவ­ரது பெயரே கூட யாருக்­கும் தெரி­யாது. அப்­படி இருந்­தும் லட்­சக்­க­ணக்­கான வாக்­கு­களை வாங்­கி­யுள்­ள­னர். இது மோடி­யின் வலி­மையை எடுத்­துக் காட்­டு­வ­தாக உள்­ளது” என்று தெரி­வித்­தார்.

முதல்­வர் சந்­தி­ர­சே­கர ராவ் மகள் கவிதா, நிஜா­மா­பாத் தொகு­தி­யில் பா.ஜ.,வைச் சேர்ந்த அர­விந்த் தர்­ம­பு­ரி­யி­டம் தோல்வி அடைந்­தார். சமீ­பத்­தில் சிறந்த பார்­லி­மென்ட் உறுப்­பி­னர் விருது பெற்­ற­வர் கவிதா. இந்த தொகு­தி­யில் பா.ஜ.,வினர் பிற்­ப­டுத்­தப்­பட்ட சமூ­கத்­தைச் சேர்ந்த ஒரு பிரி­வி­ன­ரை­யும், நில­வு­ட­மை­யா­ளர்­க­ளான ரெட்டி சமூ­கத்­தி­ன­ரின் ஆத­ரவை திரட்­டி­னர். இளை­ஞர்­க­ளும் பா.ஜ.விற்கு ஆத­ரவு அளித்­த­னர். அத்­து­டன் காங்­கி­ரஸ், தெலுங்­கானா ராஷ்­டி­ரிய சமி­தி­யைச் சேர்ந்த உள்­ளூர் தலை­வர்­க­ளும் பா.ஜ,,வுக்கு ஆத­ர­வாக செயல்­பட்­ட­னர். இதற்கு கார­ணம் ஜாதி அபி­மா­ன­மும், சந்­தி­ர­சே­கர ராவ் மீதான கோபமே.

அடி­லா­பாத் தொகு­தி­யின் வெற்­றிக்கு கார­ணம், மாநில அர­சின் நலத்­திட்ட உத­வி­களை பெறு­வ­தில் உள்­ளூர் ஆதி­வா­சி­க­ளுக்­கும், லம்­பாடி ஆதி­வா­சி­க­ளுக்­கும் இடையே இருந்த பிளவு பா.ஜ.,வின் வெற்­றிக்கு உத­வி­யது. சாதா­ர­ண­மாக அர­சி­யல் கட்­சி­கள் ஒரு பிரி­வி­ன­ருக்கு சாத­க­மாக நடந்து கொள்ள தயங்­கு­வார்­கள். பா.ஜ.,ஆதி­வாசி சமூ­கத்­தைச் சேர்ந்­த­வரை வேட்­பா­ள­ராக நிறுத்­தி­யது.    

தற்­போது தெலுங்­கா­னா­வில் பா.ஜ,.,வெற்றி பெற்ற நான்கு தொகு­தி­க­ளி­லும், காங்­கி­ரஸ் கட்­சி­யின் போட்டி பெய­ர­ள­வுக்கு கூட இல்லை. இதன் வேட்­பா­ளர்­கள் தேர்­தல் களத்­தி­லேயே இல்லை. செகந்­தி­ரா­பாத் தொகு­தி­யில் உள்­துறை இணை அமைச்­சர் ஜி.கிஷன் ரெட்டி வெற்றி பெற்­றுள்­ளார். இவரை எதிர்த்து காங்­கி­ரஸ் சார்­பில் போட்­டி­யிட்ட அஞ்­சன் குமார் யாதவ், தேர்­தல் களத்­தி­லேயே இல்லை. இவர் இரண்டு முறை எம்.பி.,யாக இருந்­த­வர். இது போன்ற கார­ணங்­க­ளால் காங்­கி­ரஸ், பா.ஜ,,இடையே புரி­தல் இருந்­ததா? என தெலுங்­கானா ராஷ்­டி­ரிய சமிதி சந்­தே­கத்­தைக் கிளப்­பு­கி­றது.

சமீ­ப­கா­லம் வரை பா.ஜ.,வும்,தெலுங்­கானா ராஷ்­டி­ரிய சமி­தி­யும் மறை­முக உடன்­பாடு கொண்­டுள்­ளன என்ற குற்­றச்­சாட்டு கூறப்­பட்டு வந்­தது. லோக்­சபா தேர்­த­லில் அதிக தொகு­தி­களை கைப்­பற்­றி­வி­ட­லாம் என்று தெலுங்­கானா ராஷ்­டி­ரிய சமீதி எதிர்­பார்த்­தது. மற்ற எதிர்­கட்­சி­களை ஒருங்­கி­னைத்து, பா.ஜ,, காங்­கி­ரஸ் அல்­லாத கட்­சி­கள் பங்கு பெறும் கூட்­ட­ணி­யின் பிர­த­ம­ராக சந்­தி­ர­சே­கர ராவ் முன்­னி­றுத்­தப்­பட்­டார். ஆனால் மொத்­த­முள்ள 17 லோக்­சபா தொகு­தி­க­ளில், தெலுங்­கானா ராஷ்­டி­ரிய சமிதி 9 தொகு­தி­க­ளில் மட்­டுமே வெற்றி பெற்­றுள்­ளது. மாநி­லத்­தில் ஆளும் கட்­சி­யாக இருந்­தா­லும் கூட, பாதிப்பை எதிர் நோக்கி உள்­ளது. கடந்த நான்கு வரு­டங்­க­ளில் சந்­தி­ர­சேக ராவ், பிர­தான எதிர்­கட்­சி­யான காங்­கி­ரஸ் கட்­சியை பல­வீ­னப்­ப­டுத்த எல்லா வித முயற்­சி­க­ளை­யும் செய்­தார். காங்­கி­ரஸ் பல­வீ­ன­ம­டைந்­த­தன் பலன், பா.ஜ.,வுக்கு சாத­க­மாக திரும்­பி­யது.

மோடிக்­கும், சந்­தி­ர­சே­கர ராவ்­வுக்­கும் இடையே நட்­பு­றவு கொடி­கட்டி பறந்­தது. அப்­போது காங்­கி­ரஸ் கட்­சி­யின் பல மூத்த தலை­வர்­களை சந்­தி­ர­சே­கர ராவ், தன்­பக்­கம் இழுத்து,  காங்­கி­ரஸ் கட்­சியை நிலை­ குலை­யச் செய்­தார். அப்­போது சந்­தி­ர­சே­கர ராவ், பா.ஜ.,வின் தந்­தி­ரத்தை புரிந்து கொள்­ளா­மல் இருந்­தி­ருக்­க­லாம்.

தற்­போது டில்லி தலை­மை­யின் உத­வி­யு­டன், தெலுங்­கானா பா.ஜ., எழுச்சி பெற்று, தெலுங்­கானா ராஷ்­டி­ரிய சமீ­திக்கு சவால் விடும் அளவு வளர்ச்சி பெற்­றுள்­ளது. அடுத்த சில வரு­டங்­க­ளுக்கு கட்­சி­யின் வளர்ச்­சிக்­காக திட்­ட­மிட்டு செய­லாற்­று­கி­றது. இது பற்றி தெலுங்­கானா பா.ஜ., தலை­வர் கே.லட்­சு­ம­ணன் கூறு­கை­யில், “இந்த மாநி­லத்­தில் பா.ஜ..பலம் பொருந்­திய கட்­சி­யாக வளர வேண்­டும் என, எங்­கள் தேசிய தலை­வர் அமித் ஷா கரு­து­கி­றார். மக்­கள் தெலுங்­கானா ராஷ்­டி­ரிய சமிதி மீது நம்­பிக்­கையை இழந்­து­விட்­ட­னர். ஏனெ­னில் அந்த கட்சி ஆண­வத்­தில் ஆடு­கி­றது. காங்­கி­ரஸ் கட்­சி­யின் தலை­வர்­கள் சுய­ந­லம் மிக்­க­வர்­கள். ஏனெ­னில் அவர்­க­ளுக்கு தொழில், வர்த்­தக தொடர்பு உள்­ளது. நாங்­கள் மட்­டுமே எதற்­கும் வளைந்து கொடுக்­கா­த­வர்­கள் என்­பதை மக்­கள் அறி­வார்­கள்” என்று கூறி­னார்.

தெலுங்­கா­னா­வில் பிர­பல தலை­வர்­களை கட்­சி­யில் இழுப்­ப­தும், தீவிர பிர­சா­ரம் செய்­வ­துமே பா.ஜ.வின் அடுத்த திட்­டம். அடுத்த சில மாதங்­க­ளில், மற்ற கட்­சி­யி­னர் அதிர்ச்சி அடை­யும் வகை­யில் சில நட­வ­டிக்­கை­கள் இருக்­கும் என்­றும் கோடிட்டு காட்­டி­யுள்­ளது.

நாங்­கள் இப்­போது பிர­தான எதிர்­கட்­சி­யாக செயல்­ப­டு­வோம் என்று முர­ளி­தர் ராவ் தெரி­வித்­தார். இதற்­கும் ஒரு படி மேலே சென்று மாநில தலை­வர் கே.லட்­சு­ம­ணன், “நாங்­கள் வரும் 2023ல் முத­ல­மைச்­சர் பத­வியை கைப்­பற்­று­வோம்” என்று தெரி­வித்­தார். ஆனால் அர­சி­யல் நிபு­ணர்­கள், அது ஒன்­றும் சாதா­ரண விஷ­ய­மல்ல என்­கின்­ற­னர். மூத்த அர­சி­யல் நிபு­ண­ரும், முன்­னாள் எம்.எல்.சி.,யுமான கே.நாகேஷ்­வர் கூறு­கை­யில்,

லோக்­சபா தேர்­த­லால் பா.ஜ.,வுக்கு வாக்­கா­ளர்­கள் வாக்­க­ளித்­துள்­ள­னர். இதன் அர்த்­தம் அந்த கட்சி வளர்ச்சி பெற்­றுள்­ளது என்­ப­தல்ல. இது வாக்­கா­ளர்­க­ளின் மன­நி­லை­யின் பிர­தி­ப­லிப்பு மட்­டும்­தான்.

இதே போல் சட்­ட­சபை தேர்­தல் முடி­வு­கள் இருக்­கும் என்று கூற முடி­யாது. பா.ஜ., முக்­கி­யத்­து­வம் அளிக்­கும் விஷ­யங்­களை பார்த்­தால், அது தென் இந்­தி­யா­வுக்கு முக்­கி­யத்­து­வம் அளிப்­ப­தாக தெரி­ய­வில்லை. தெலுங்­கா­னா­வில் இருந்து நான்கு பேர் வெற்றி பெற்று இருந்­தா­லும், யாருக்­கும் கேபி­னெட் அந்­தஸ்து உள்ள அமைச்­சர் பதவி கொடுக்­க­வில்லை” என்று தெரி­வித்­தார்.

நன்றி: தி வீக் வார­இ­த­ழில் ராகுல் தேவ­லா­பள்ளி