தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்!

14-06-2019 03:17 PM

மகா­ராஷ்­டி­ரா­வில் அவு­ரங்­க­பாத் மாவட்­டத்­தில் உள்ள பூலம்­பரி என்ற ஊரில் புதி­தாக அமைத்த சாலைக்கு சொட்டு சொட்­டாக தண்­ணீர் தெளித்­துக் கொண்டே லாரி செல்­கி­றது. அந்த லாரிக்கு பின்­பு­றம் ஆண்­க­ளும், பெண்­க­ளும் குடம், வாளி, டிரம்­களை தூக்­கிக் கொண்டு ஓடு­கின்­ற­னர். சாலை­யில் தெளிக்­கும் தண்­ணீரை பிடிப்­ப­தற்­கா­க­தான், இவர்­கள் லாரி பின்­னால் ஓடு­கின்­ற­னர். சென்ற 2ம் தேதி இந்த வீடியோ சமூக வலைத்­த­ளங்­க­ளில் வெளி­யா­னது. கிடைக்­கும் ஒரு சொட்டு தண்­ணீரை கூட இழக்க விரும்­பா­மல் மக்­கள் லாரி பின்­னால் ஓடு­கின்­ற­னர். இதில் இருந்து வளர்ச்சி பெற்ற மாநி­லம் என்று மார்­தட்­டிக் கொள்­ளும் மகா­ராஷ்­டி­ரா­வில் தண்­ணீர் தட்­டுப்­பாடு எந்த அளவு மக்­களை வாட்டி வதைக்­கின்­றது என்­பது புல­னா­கி­றது. பூலம்­ப­ரி­யில் உள்ள நிலை­தான் இந்­தியா முழு­வ­தும்.

கர்­நா­ட­கத்­தில் 80 சத­வி­கித மாவட்­டங்­க­ளி­லும், மகா­ராஷ்­டி­ரா­வில் 72 சத­வி­கித மாவட்­டங்­க­ளி­லும் வறட்சி நில­வு­கி­றது. பயிர்­கள் கரு­கி­விட்­டன. இரு மாநி­லங்­க­ளைச் சேர்ந்த 82 லட்­சம் விவ­சா­யி­கள் வாழ்­வா­தா­ரத்­திற்­காக போரா­டிக் கொண்­டுள்­ள­னர். மகா­ராஷ்­டி­ரா­வில் தின­சரி 6 ஆயி­ரம் லாரி­க­ளில், 4,920 கிரா­மங்­க­ளுக்­கும், 10,506 குடி­யி­ருப்பு பகு­தி­க­ளுக்­கும் தண்­ணீர் விநி­யோ­கம் செய்­யப்­ப­டு­கி­றது. இந்த இரண்டு மாநி­லங்­க­ளுக்­கும் இடையே நதி நீர் பங்­கீடு குறித்த பிரச்­சனை முடிவு பெறா­மல் நீடிக்­கின்­றது.

இந்­தியா முழு­வ­தும் இதே நிலை தான். எல்லா மாநி­லங்­க­ளி­லும் தண்­ணீர் பற்­றாக்­குறை, வறட்­சி­யால் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. தென் மேற்கு பரு­வ­மழை கால­மா­த­மாக தொடங்­கும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறி­வித்­துள்­ளது. அது­வும் இந்த வரு­டம் சரா­சரி மழை அளவை விட குறை­வாக பெய்­யும் என்­றும் கூறி­யுள்­ளது. இந்­தி­யா­வில் பெய்­யும் மொத்த மழை பொழி­வில், தென் மேற்கு பரு­வ­மழை மூலம் 80 சத­வி­கித மழை பொழிவு கிடைக்­கின்­றது. தென் மேற்கு பரு­வ­ம­ழையே உயிர்­நா­டி­யா­க­வும் உள்­ளது.

சென்ற மே 30 நில­வ­ரப்­படி நாட்­டின் 43.4 சத­வி­கித பகு­தி­கள் வறட்­சி­யால் பாதிக்­கப்­பட்­டுள்­ளன என்று வறட்சி பாதித்த பகு­தி­களை கணக்­கி­டும் என்ற அமைப்பு கூறி­யுள்­ளது. சென்ற வரு­டம் பரு­வ­மழை பொய்த்­துப் போனதே, இப்­போ­தைய வறட்­சிக்கு கார­ணம். கடந்த நான்கு ஆண்­டு­க­ளில் 2017ம் ஆண்டை தவிர, மற்ற வரு­டங்­க­ளில் வறட்­சியே ஏற்­பட்­டுள்­ளது.

வட கிழக்கு பரு­வ­ம­ழை­யின் போது (அக்­டோ­பர்–­டி­சம்­பர்), இந்­தி­யா­வின் மொத்த மழை பொழி­வில் 10 முதல் 20 சத­வி­கி­தம் மழை பெய்­கி­றது. (வட கிழக்கு பரு­வ­ம­ழை­யால் தமி­ழ­கத்­திற்கு மழை கிடைக்­கின்­றது.) இந்­திய வானிலை ஆய்வு மைய புள்ளி விப­ரங்­க­ளின் படி,  நீண்­ட­கால வட­கி­ழக்கு பரு­வ­ம­ழை­யின் சரா­சரி அள­வான 127.2 மில்லி மீட்­ட­ரு­டன் ஒப்­பி­டு­கை­யில் சென்ற வரு­டம் 44 சத­வி­கி­தம் மழை குறை­வாக பெய்­துள்­ளது. இதே போல் தென்­மேற்கு பரு­வ­மழை 9.4 சத­வி­கி­தம் குறை­வாக பெய்­துள்­ளது. சரா­சரி மழை அள­வை­விட 10 சத­வி­கி­தத்­திற்­கும் குறை­வாக மழை பெய்­தால் மட்­டுமே, இந்­திய வானிலை ஆய்வு மையம் வறட்சி என அறி­விக்­கின்­றது.

தென் மேற்கு பரு­வ­ம­ழைக்கு முன் மார்ச் மாதம் முதல் மே வரை பெய்­யும் மழை, கடந்த 65 வரு­டங்­க­ளில் இல்­லாத அளவு இந்த வரு­டம் மிக குறை­வாக பெய்­துள்­ளது. நிலத்­தடி நீர் மட்­டம் அதள பாதா­ளத்­திற்கு செல்­கின்­றது. பரு­வ­ம­ழை­யால் நிலத்­தடி நீர் மட்­டம் மீண்­டும் புதுப்­பித்­துக் கொள்­ளும் வாய்ப்பு ஏற்­ப­டு­கி­றது. (பரு­வ­மழை பொய்த்­துப் போகும் போது, தண்­ணீர் பற்­றாக்­கு­றையை சமா­ளிக்க எவ்­வித வரை­மு­றை­யும் இல்­லா­மல் நிலத்­தடி நீர் உறிஞ்­சப்­ப­டு­வ­தால், நன்­னீர் மட்­டம் கீழி­றங்கி, உவர்ப்பு நீர், உப்பு நீர் உள்ளே புகு­கின்­றது.)

சென்ற மாத இறுதி நில­வ­ரப்­படி, இந்­தி­யா­வில் உள்ள 91 பெரிய அணை­க­ளில் இருப்­பில் இருந்த நீரின் அளவு, அதன் மொத்த கொள்­ள­வில் 20 சத­வி­கி­தம் மட்­டுமே. இது கடந்த ஆண்­டு­டன் ஒப்­பி­டு­கை­யில் குறைவு. அத்­து­டன் கடந்த பத்து வரு­டங்­க­ளில் இருந்த சரா­சரி நீர் இருப்பு அளவை விட­வும் குறைவு.

இந்­தி­யா­வில் ஒவ்­வொரு வரு­ட­மும் மக்­கள் தொகை­யில் பாதி பேர், அதா­வது 60 கோடி பேர் தண்­ணீர் கிடைக்­கா­மல் பாதிக்­கப்­ப­டு­கின்­ற­னர். இந்த பாதிப்பு சில பகு­தி­க­ளில் மித­மா­க­வும், பல பகு­தி­க­ளில் கடு­மை­யா­க­வும் உள்­ளது. இரண்­டா­வது முறை­யாக பிர­த­மர் பத­வி­யேற்­றுள்ள நரேந்­திர மோடி, வரும் 2024ம் ஆண்­டிற்­குள் அனை­வ­ருக்­கும் குழாய்­கள் மூலம் சுத்­தி­க­ரிப்­பட்ட குடி­நீர் விநி­யோ­கிக்­கப்­ப­டும் என்று அறி­வித்­துள்­ளார். இதற்­காக ‘நல் சி ஜல்’ (Nal Se Jal) என்ற திட்­டத்தை அறி­வித்­துள்­ளார். இந்த திட்­டம் புதி­தாக அமைக்­கப்­பட்­டுள்ள ‘ஜல சக்தி’ அமைச்­ச­கம் மூலம் நிறை­வேற்­றப்­ப­டும். (இந்த அமைச்­ச­கம் நீர்­வ­ளம், குடி­நீர் மற்­றும் சுத்­தி­க­ரிப்பு, நதி­கள் மேம்­பாடு ஆகிய துறை­களை ஒருங்­கி­னைத்து உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.)  

இந்த புதிய ஜல சக்கி அமைச்­ச­கத்­தின் முன் உள்ள சவால், குழாய் மூலம் குடி­நீர் விநி­யோ­கிக்க எங்­கி­ருந்து தண்­ணீர் பெறு­வது என்­பதே.

இந்­தி­யா­வில் நிலத்­தின் மேல் மட்­டத்­தி­லும், ஆழத்­தி­லும் உள்ள நீரை­யும் சேர்த்து மொத்­தம் 2,518 பில்­லி­யன் கன மீட்­டர் தண்­ணீர் உள்­ளது. ( 1 பில்­லி­யன் என்­பது நூறு கோடி) இதில் மேல் மட்­டத்­தில் உள்ள 1,869 பில்­லி­யன் கன மீட்­டர் நீரில் 690 பில்­லி­யன் கன மீட்­டர் (37%) நீரை மட்­டுமே பயன்­ப­டுத்த முடி­யும். மற்­றவை பயன்­ப­டுத்த முடி­யாத அள­வுக்கு தூய்­மைக்­கே­டாக உள்­ளது. நிலத்­தின் ஆழத்­தில் உள்ள 400 பில்­லி­யன் கன மீட்­டர் நீரில் 230 பில்­லி­யன் கன மீட்­டர் (58%) மட்­டுமே எடுக்க முடி­யும் என்று நிதி ஆயோக்­கின் சென்ற வருட அறிக்­கை­யில் கூறப்­பட்­டுள்­ளது.

மேலும் நிதி ஆயோக்­கின் அறிக்­கை­யில், இந்­தி­யா­வின் மொத்த நீர் தேவை­யில் 40 சத­வி­கி­தம் நிலத்­தின் ஆழத்­தில் உள்ள தண்­ணீரை உறிஞ்சி எடுத்து பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. இத­னால் இந்த நீர் மட்­டம் கற்­பனை செய்து கூட பார்க்க முடி­யாத அள­விற்கு பாதா­ளத்­திற்கு சென்று கொண்­டுள்­ளது. உலக அள­வில் நிலத்­தின் ஆழத்­தில் இருந்து எடுக்­கப்­ப­டும் நீரில் 12 சத­வி­கி­தம் இந்­தி­யா­வில் உறிஞ்சி எடுக்­கப்­ப­டு­கி­றது. இத­னால் சென்னை, டில்லி, பெங்­க­ளூரு, ஹைத­ர­பாத் உட்­பட 21 நக­ரங்­க­ளில், அடுத்த சில வரு­டங்­க­ளில் நிலத்­தடி நீர் ஒரு சொட்டு கூட இருக்­காது. இத­னால் 10 கோடிக்­கும் அதி­க­மா­னோர் பாதிக்­கப்­ப­டு­வார்­கள். 2030ல் மக்­கள் தொகை­யில் 40 சத­வி­கி­தம் பேருக்கு குடி­தண்­ணீர் கிடைக்­காது.

தண்­ணீர் தேவைக்­கும், விநி­யோ­கத்­திற்­கும் இடையே உள்ள பற்­றாக்­குறை பிரச்­னைக்கு தீர்­வு­கா­ணா­விட்­டால், வரும் 2050ல் மொத்த உள்­நாட்டு உற்­பத்­தி­யில் 6 சத­வி­கி­தம் பாதிக்­கப்­ப­டும். எனவே மாநி­லங்­கள் இந்த பிரச்­னைக்கு தீர்­வு­காண துரித கதி­யில் நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும். அத்­து­டன் தண்­ணீர்  பற்­றாக்­கு­றை­யால் மக்­க­ளுக்கு உடல்­நல பாதிப்­பும் ஏற்­ப­டு­கி­றது. தற்­போ­தைய நிலை­யில் பாது­காக்­கப்­பட்ட குடி­தண்­ணீர் கிடைக்­காத கார­ணத்­தால் வரு­டத்­திற்கு இரண்டு லட்­சம் பேர் மர­ண­ம­டை­கின்­ற­னர் என்று நிதி ஆயோக்­கின் அறிக்­கை­யில் கூறப்­பட்­டுள்­ளது.

மேலும் நிதி ஆயோக்­கின் அறிக்­கை­யில், உலக அள­வில் மக்­கள் தொகை­யில் இந்­தி­யா­வில் 16 சத­வி­கி­தம் பேர் உள்­ள­னர். உலக அள­வில் நன்­னீ­ரில் 4 சத­வி­கி­தம் இந்­தி­யா­வில் உள்­ளது. இதில் 70 சத­வி­கித தண்­ணீர் பயன்­ப­டுத்த முடி­யாத அளவு சீர்­கெட்­டுப் போயுள்­ளது. உலக அள­வில் மக்­க­ளுக்கு பாது­காக்­கப்­பட்ட, சுகா­தா­ர­மான தண்­ணீர் கிடைக்­கும் (மொத்­தம் 122 நாடு­கள்) நாடு­க­ளின் பட்­டி­ய­லில், இந்­தியா 120 ஆவது இடத்­தில் உள்­ளது. அத்­து­டன் 24 மாநி­லங்­க­ளில் நிலத்­தடி நீர், பாசன வசதி, பயிர் செய்­யும் முறை, குடி­தண்­ணீர் உட்­பட 28 அம்­சங்­க­ளில் ஆய்வு மேற்­கொள்­ளப்­பட்­டது. நிலத்­தடி நீர் மட்­டத்தை பொருத்த அள­வில் 24 மாநி­லங்­க­ளில் 10 மாநி­லங்­க­ளில் 50 சத­வி­கித மதிப்­பெண் பெற்­றுள்­ளன. இது ஆபத்­தா­னது. 54 சத­வி­கித கிண­று­க­ளில் நீர்­மட்­டம் குறைந்­துள்­ளது.

2015–16ம் ஆண்­டு­க­ளில் 24 மாநி­லங்­க­ளில் நீர் மேலாண்மை குறித்து ஆரா­யப்­பட்­டது. இதில் 14 மாநி­லங்­கள் 50 சத­வி­கித மதிப்­பெண் பெற்று இருந்­தன. இந்த மாநி­லங்­கள்  நீர் மேலாண்­மை­யில் பின்­தங்­கியே உள்­ளன. இந்த மாநி­லங்­கள் வடக்கு, கிழக்கு, வட­கி­ழக்கு, இம­ய­மலை பிராந்­தி­யங்­க­ளில் அதிக அளவு விவ­சா­யம் செய்­யும் மாநி­லங்­கள். நீர் மேலாண்­மை­யில் குஜ­ராத் 76 மதிப்­பெண்­க­ளும், மத்­திய பிர­சே­தம் 69 மதிப்­பெண்­க­ளும், ஆந்­திரா 68 மதிப்­பெண்­க­ளும் பெற்­றுள்­ளன. கர்­நா­டகா, மகா­ராஷ்­டிரா, பஞ்­சாப், தமிழ்­நாடு, தெலுங்­கானா, இமா­ச­ல­பி­ர­தே­சம், திரி­புரா ஆகிய மாநி­லங்­கள் 50 முதல் 65 மதிப்­பெண் பெற்­றுள்­ளன என்று நிதி ஆயோக்­கின் அறிக்­கை­யில் கூறப்­பட்­டுள்­ளது.

எப்­படி நிலைமை மோச­மா­னது: சென்ற வரு­டம் தென்­மேற்கு பரு­வ­மழை பொய்த்­துப் போனது. 2015ம் ஆண்டு முதல் 2017 தவிர மற்ற வரு­டங்­க­ளில் வறட்சி நில­வி­யது என்று முன்­னரே கூறி­யுள்­ளோம். தென் மேற்கு பரு­வ­ம­ழைக்கு முன் பெய்­யும் (மார்ச் முதல் மே மாதங்­க­ளில் பெய்­யும் கோடை மழை) மழை­யும் மிக குறை­வா­கவே பெய்­துள்­ளது.     கடந்த 50 வரு­டங்­க­ளில் சரா­ச­ரியை விட கோடை மழை 23 சத­வி­கி­தம் குறை­வாக பெய்­துள்­ளது. கடந்த 65 ஆண்­டு­க­ளில் இல்­லாத அளவு, இந்த வரு­டம் மழை மிக குறைந்த அளவு பெய்­துள்­ளது. தென் தீப­கற்­பத்­தில் அடங்­கி­யுள்ள ஆந்­திரா, தெலுங்­கானா, கர்­நா­டகா, கேரளா, தமிழ்­நாடு ஆகிய மாநி­லங்­க­ளில் மிக குறைந்த அளவு மழை பெய்­துள்­ளது என்று இந்­திய வானிலை ஆய்வு மையத்­தின் புள்ளி விப­ரங்­க­ளில் இருந்து தெரி­ய­வ­ரு­கி­றது.  

தென் தீப­கற்­பத்­தில் 59 முதல் 20 சத­வி­கி­தம் மழை குறை­வாக பெய்­துள்­ளது. மத்­திய இந்­தி­யா­வில் 60 முதல் 99 சத­வி­கி­தம் மழை குறை­வாக பெய்­துள்­ளது. மழை குறை­வாக பெய்­துள்­ள­தால், இந்த மாநி­லங்­கள் அணை­க­ளில் இருந்த நீரை பயன்­ப­டுத்த வேண்­டிய நிலைக்கு தள்­ளப்­பட்­டுள்­ளன. 2019, மார்ச் மாத நில­வ­ரப்­படி 91அணை­க­ளின் நீர்­மட்­டம், அதன் மொத்த கொள்­ள­வு­வில் 20 சத­வி­கி­தமே இருந்­தது என்று முன்­னரே குறிப்­பிட்டு இருந்­தோம். தென் தீப­கற்­பத்­தில் அடங்­கி­யுள்ள ஆந்­திரா, தெலுங்­கானா, கர்­நா­டகா, கேரளா, தமிழ்­நாடு ஆகிய மாநி­லங்­க­ளில் உள்ள 31 அணை­க­ளில் நீர் மட்­டம், அதன் மொத்த கொள்­ள­வு­வில் 11 சத­வி­கி­தம் மட்­டுமே இருந்­தது. குஜ­ராத், மகா­ராஷ்­டிரா ஆகிய மாநி­லங்­கள் அடங்­கிய மேற்கு இந்­தி­யா­வில் உள்ள 27 அணை­க­ளில் நீர்­மட்­டம், அதன் மொத்த கொள்­ள­வு­வில் 11 சத­வி­கி­தம் மட்­டுமே இருந்­தது.

அணை­கள் உட்­பட நீர் நிலை­க­ளில் நீர் மட்­டம் குறை­வது, சுத்­த­மாக தண்­ணீர் இல்­லா­மல் காய்ந்து கிடப்­ப­தால், அனல் காற்று வீசு­வ­து­டன், பல மாநி­லங்­க­ளில் வெயி­லின் அளவு 50 டிகிரி செல்­சி­யஸ்க்­கும் அதி­க­ரித்­தது. மேற்கு ராஜஸ்­தா­னில் உள்ள சீரு என்ற இடத்­தில் சென்ற 2ம் தேதி அதி­க­பட்­ச­மாக 50.8 டிகிரி செல்­சி­யஸ் வெயில் வாட்­டி­யது. ஸ்ரீ கங்கா நக­ரில் 49.6 டிகிரி செல்­சி­யஸ் வெயில் இருந்­தது. சர்­வ­தேச அள­வில் அதிக வெப்­பம் இருக்­கும் 15 இடங்­க­ளில், இந்த இரண்டு ஊர்­க­ளும் இணைந்­துள்­ளன.

கடந்த நூறு ஆண்­டு­க­ளில் மழை பொழிவு புள்ளி விப­ரங்­களை ஆராய்ந்­தால், இந்­தி­யா­வில் எட்டு அல்­லது ஒன்­பது வரு­டத்­திற்கு ஒரு முறை கடு­மை­யான வறட்சி ஏற்­ப­டு­வது தெரி­ய­வ­ரு­கி­றது. இந்­தூர், கவு­காத்தி ஆகிய நக­ரங்­க­ளில் அமைந்­துள்ள இந்­திய தொழில்­நுட்ப கழ­கங்­கள் இணைந்து நடத்­திய ஆய்வு முடி­வு­கள் சென்ற வரு­டம் செப்­டம்­ப­ரில் வெளி­யி­டப்­பட்­டது. அதில் ஐந்து மாவட்­டங்­க­ளில் மூன்று மாவட்­டங்­கள் வறட்­சியை எதிர்­கொள்ள தயார் படுத்­திக் கொள்­வ­தில்லை என்று கூறப்­பட்­டி­ருந்­தது. ஆய்­வுக்கு எடுத்­துக் கொண்ட 634 மாவட்­டங்­க­ளில் 133 மாவட்­டங்­க­ளில் ஒவ்­வொரு வரு­ட­மும் வறட்சி ஏற்­ப­டு­கி­றது. இந்த மாவட்­டங்­கள் சத்­திஸ்­கர், கர்­நா­டகா, மகா­ராஷ்­டிரா, ராஜஸ்­தான் ஆகிய மாநி­லங்­க­ளில் அமைந்­துள்­ளன.

எப்­படி நீர் ஆதா­ரத்தை நிர்­வ­கிப்­பது: தண்­ணீரை சிக்­க­ன­மாக பயன்­ப­டுத்­தும் பாசன முறையை கடை­பி­டிக்க வேண்­டும். நக­ரங்­க­ளில் மழை நீர் சேமிக்­கும் வகை­யில் நகர்­புற நீர் கொள்­கையை வகுக்க வேண்­டும். நிலத்­தடி நீரை உறிஞ்சி எடுப்­பதை முறைப்­ப­டுத்த வேண்­டும். கழிவு நீரை சுத்­தி­க­ரித்து பயன்­ப­டுத்­து­வதை உட­ன­டி­யாக அதி­க­ரிக்க வேண்­டும் என்று நிபு­ணர்­கள் கூறு­கின்­ற­னர்.

இந்­தி­யா­வின் நீர் ஆதா­ரத்­தில் விவ­சா­யத்­திற்­காக 80சத­வி­கித தண்­ணீர் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. குடி­தண்­ணீ­ருக்கு 4 சத­வி­கி­தம் மட்­டுமே பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது என நிதி ஆயோக் அறிக்கை கூறு­கி­றது. விவ­சா­யத்­திற்கு தண்­ணீர் பயன்­ப­டுத்­து­வதை கட்­டுப்­ப­டுத்­து­வது கஷ்­ட­மான காரி­யம்.

இந்­தி­யா­வில் பயிர் செய்­யும் 140 மில்­லி­யன் ஹெக்­டேர் பரப்­ப­ள­வில், பாதி அள­வான 69.5 மில்­லி­யன் ஹெக்­டே­ரில் ‘மைக்ரோ இரி­கே­ஷன்’ எனப்­ப­டும் நுண் பாசன முறையை பயன்­ப­டுத்­தும் வாய்ப்பு உள்­ளது. ஆனால் இது வரை மொத்­தம் 7.73 மில்­லி­யன் ஹெக்­டே­ரில் மட்­டுமே நுண் பாசன முறை பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. இதில் 3.37 மில்­லி­யன் ஹெக்­டே­ரில் சொட்டு நீர் பாச­னம், 4.36 மில்­லி­யன் ஹெக்­டே­ரில்  தெளிப்­பான் பாச­னம் அமைக்­கப்­பட்­டுள்­ளது என்று கூறு­கி­றார் சமா­ரட் பசாக். இவர் வேர்ல்ட் ரிசோர்ச் இன்ஷ்­டி­யூட்­டைச் சேர்ந்த நீர் மேலாண்மை நிபு­ணர்.

வாய்க்­கால் பாச­னத்­து­டன் ஒப்­பி­டு­கை­யில் சொட்டு நீர் பாச­னத்­தில் 40 முதல் 60 சத­வி­கி­தம் குறை­வான தண்­ணீரே பயன்­ப­டு­கி­றது. தெளிப்­பான் பாச­னத்­தில் 30 முதல் 40 சத­வி­கி­தம் குறை­வான தண்­ணீரே பயன்­ப­டு­கி­றது என்று ஆய்­வில் தெரி­ய­வந்­துள்­ளது.

நிலத்­தடி நீர் பயன்­பாட்டை முறைப்­ப­டுத்­தலை கடு­மை­யாக பின்­பற்­று­வ­தன் மூலம் நிலத்­தடி நீர் மட்­டத்தை அதி­க­ரிக்­க­லாம். நீரின் தரத்தை கண்­கா­ணித்­தல், மழை நீர் சேக­ரிப்பை கட்­டா­யப்­ப­டுத்­து­தல், அதை முறை­யாக பரா­ம­ரித்­தல் ஆகி­ய­வற்­றால் மாநி­லங்­கள் நிலத்­தடி நீரை சிறந்த முறை­யில் நிர்­வ­கிக்­க­லாம் என்று சமா­ரட் பசாக் கூறு­கின்­றார்.

நாட்­டின் நிலத்­தடி நீரை கண்­கா­ணித்து, நிர்­வ­கிக்­கும் மத்­திய நிலத்­தடி நீர் வாரி­யம், 2018, ஜூன் நில­வ­ரப்­படி நாட்­டில் மொத்­தம் 22,339 நிலத்­தடி நீர் கண்­கா­ணிப்பு கிண­று­களை அமைத்­துள்­ளது. அதா­வது மைசூர் நக­ரின் விஸ்­தீ­ர­ணத்­தைப் போல் 147 கி.மீட்­டர் சதுர பரப்­ப­ள­வுக்கு ஒரு கண்­கா­ணிப்பு கிணறு அமைத்­துள்­ளது.

நன்றி: இந்­தி­யாஸ்­பெண்ட் இணை­ய­த­ளத்­தில் பிரியா சர்மா, பாஸ்­கர் திரி­பாதி எழு­திய கட்­டு­ரை­யின் சுருக்­கம்.