196 நாடு­க­ளில் சுற்­றுப்­ப­ய­ணம் செய்து இளம் பெண் சாதனை

14-06-2019 02:48 PM

அமெ­ரிக்­கா­வில் உள்ள கலி­போர்­னியா மாநி­லத்­தைச் சேர்ந்த 21 வயது இளம் பெண் லெக்ஸி அல்­போர்டு. இவ­ரது தந்தை டிரா­வல்ஸ் நிறு­வ­னம் நடத்­து­கின்­றார். சிறு வயது முதல் உலக நாடு­களை சுற்­றிப் பார்க்க வேண்­டும் என்­பது லெக்­ஸி­யின் விருப்­பம்.

பள்ளி விடு­முறை நாட்­க­ளில் பெற்­றோர் லெக்­ஸியை பல்­வேறு நாடு­க­ளுக்கு அழைத்­துச் சென்­றுள்­ள­னர். இத­னால் 126 நாடு­க­ளை­யும் சுற்­றிப் பார்க்க வேண்­டும் என்று லெக்ஸி முடி­வெ­டுத்­துள்­ளார். கடந்த மே 31ம் தேதி 126வது நாடாக (கடைசி நாடு) வட­கொ­ரியா சென்­றுள்­ளார். அங்கு இந்த இளம் பெண்­ணின் சாத­னையை பாராட்டி “இளம் வய­தி­லேயே எல்லா நாடு­க­ளை­யும் சுற்றி வந்­த­வர்” என்ற பட்­டம் வழங்­கப்­பட்­டுள்­ளது.

தனது சாதனை குறித்து லெக்ஸி கூறு­கை­யில், “உல­கத்தை எனக்கு அறி­மு­கப்­ப­டுத்­தி­ய­தில் எனது பெற்­றோ­ருக்கு முக்­கிய பங்கு உள்­ளது. மனி­தர்­க­ளின் வாழ்க்கை அழ­கா­னது. அவர்­கள் வாழ்க்­கையை எப்­படி எல்­லாம் மகிழ்ச்­சி­யாக வாழ்­கி­றார்­கள் என்­பதை தெரிந்து கொள்ள ஆர்­வ­மாக இருக்­கும். பய­ணத்­துக்­காக அதிக அளவு பணம் செலவு செய்ய தேவை­யில்லை. நான் பய­ணத்­தின் போது ஆடம்­ப­ர­மான இடங்­களை தேர்வு செய்ய மாட்­டேன். கிடைக்­கின்ற இடத்தை சரி­யாக பயன்­ப­டுத்­திக் கொள்ள வேண்­டும் என்று நினைப்­பேன்.

அதே போல் முன்­னரே திட்­ட­மிட்டு எந்த இடங்­க­ளுக்­கும் சென்­ற­தில்லை. ஆனால் போகின்ற இடங்­க­ளில் எல்­லாம் புது புது அனு­ப­வங்­கள் கிடைக்­கும். விமான டிக்­கட்டை சலுகை இருக்­கும் போது வாங்­கு­வேன். பெற்­றோர்­க­ளி­ட­மும் அதிக பணம் கேட்டு தொந்­த­ரவு செய்­த­தில்லை. தேவை­யில்­லாத பொருட்­க­ளை­யும் வாங்க மாட்­டேன். கிடைக்­கும் பணத்தை பய­ணத்­திற்­காக சேமித்து வைப்­பேன் என்று கூறி­யுள்­ளார் சாதனை பெண் லெக்ஸி.