மகுடி இசை மூளை வளர்ச்சியை அதிகரிக்கும்: சுவிஸ் விஞ்ஞானிகள்

14-06-2019 02:46 PM

இந்­தி­யா­வில் பாம்­பாட்­டி­கள் பயன்­ப­டுத்­தும் மகு­டி­யின் இசை, குறைப்­பி­ர­ச­வத்­தில் பிறந்த குழந்­தை­க­ளின் மூளை வளர்ச்­சியை அதி­க­ரிக்க உத­வும் என்று சுவிட்­சர்­லாந்து ஆராய்ச்­சி­யா­ளர்­கள் கண்டு பிடித்­துள்­ள­னர்.

சுவிட்­சர்­லாந்­தி­லும், பிரிட்­ட­னி­லும் ஒரு சத­வி­கித குழந்­தை­கள், குறை­பி­ர­ச­வத்­தில் பிறக்­கின்­றன. கர்ப்ப காலத்­தில் 32 வாரங்­க­ளுக்கு முன்­னரே பிறக்­கின்­றன. இவ்­வாறு குறை பிர­ச­வத்­தில் பிறந்­தா­லும், நவீன மருத்­து­வத்­தால் பல குழந்­தை­கள் உயிர் பிழைக்­கின்­றன. இருப்­பி­னும் பிற்­கா­லத்­தில் குறை­பி­ர­சவ குழந்­தை­க­ளுக்கு கற்­றல், கவ­னக்­கு­றை­பாடு, நரம்பு மண்­டல பிரச்­னை­கள் ஏற்­ப­டு­கின்­றன. தாயின் வயிற்­றுக்­குள் அமை­தி­யாக வாழும் குழந்­தை­கள், குறை பிர­ச­வத்­தால் குறிப்­பிட்ட காலத்­திற்கு முன்பே பிறப்­ப­தால், மருத்­து­வ­ம­னை­யின் அலா­ரம், மற்ற ஒலி­க­ளால் மன அழுத்­தத்­திற்கு ஆளா­கின்­றன. இதுவே கற்­றல், கவ­னக்­கு­றை­பாடு போன்­ற­வை­க­ளுக்கு கார­ணம் என்று ஆராய்ச்­சி­யா­ளர்­கள் கண்­டு­பி­டித்­துள்­ள­னர்.

இந்த பிரச்­னைக்கு இசை­யால் தீர்­வு­காண முடி­யுமா என்று ஜெனீவா பல்­க­லைக்­க­ழ­கம், பல்­க­லைக்­க­ழக மருத்­து­வ­ம­னை­யைச் சேர்ந்த விஞ்­ஞா­னி­கள் ஆராய்ச்­சி­யில் ஈடு­பட்­ட­னர். பிர­பல இதை மேதை மொசார்ட் இசை, குழந்­தை­க­ளின் மூளை செயல்­பாட்டை தூண்­ட­வல்­லது என்­பது ஏற்­க­னவே தெரிந்த விஷ­யம் என்­ப­தால், மொசார்ட் இசையை பயன்­ப­டுத்தி பார்ப்­பது என்று முடிவு செய்­த­னர். ஒவ்­வொரு இசைக்­க­ரு­வி­க­ளாக பயன்­ப­டுத்­தி­ய­தில் அனை­வ­ரும் வியக்­கும் வித­மாக இந்­தி­யா­வில் பாம்­பாட்­டி­கள் பயன்­ப­டுத்­தும் மகு­டி­யின் இசை மிக­வும் பய­னுள்­ள­தாக இருப்­பது தெரிய வந்­தது. மன உளைச்­ச­லில் இருந்த குழந்­தை­கள் மகு­டி­யின் இசையை கவ­னிக்க ஆரம்­பித்­தன.

அந்த குழந்­தை­க­ளின் மூளையை ஸ்கேன் செய்து பார்த்த போது, மகுடி இசையை கேட்ட குழந்­தை­க­ளின் மூளை­யின் செயல்­பாடு, இசையை கேட்­காத குழந்­தை­க­ளின் மூளை செயல்­பாட்டை விட, நன்கு முன்­னே­றி­யி­ருப்­பதை ஆராய்ச்­சி­யா­ளர்­கள் கண்­ட­றிந்­த­னர். இவ்­வாறு சோதனை செய்த குழந்­தை­க­ளுக்கு தற்­போது ஆறு வய­தா­கி­றது. அந்த குழந்­தை­களை மீண்­டும் பரி­சோ­தித்து, அவர்­கள் குழந்­தை­யாக இருந்த போது ஏற்­பட்ட முன்­னேற்­றம் தொடர்­கின்­றதா என ஆராய உள்­ள­னர்.