ஆசியாவின் பெர்முடாவில் சிக்கி மீண்ட மீனவர்

14-06-2019 02:45 PM

சீனா, ஜப்­பான், இந்­தோ­னி­ஷியா, பிலிப்­பைன்ஸ் ஆகிய நாடு­க­ளுக்கு இடை­யி­லான கட­லில் அமைந்­துள்ள முக்­கோ­ணம் ஆசி­யா­வின் பெர்­முடா என்று அழைக்­கப்­ப­டு­கி­றது. இந்த பகுதி 2008ம் ஆண்டு தைவான் நிபு­ணர்­க­ளால் அடை­யா­ளம் காணப்­பட்­டது.

இந்த பகு­தி­யில் இது­வரை பல ராணுவ விமா­னங்­க­ளும், கப்­பல்­க­ளும் விபத்­தில் சிக்­கி­யுள்­ளன. இந்த பகு­தி­யில் 2016ம் ஆண்­டில் மட்­டும் 85 சரக்கு கப்­பல்­கள், பய­ணி­கள் கப்­பல்­கள் சிக்­கி­யுள்­ளன. இத­னால் இப்­ப­குதி ஆசி­யா­வின் பெர்­முடா முக்­கோ­ணம் என்று அழைக்­கப்­ப­டு­கி­றது.

சீனா­வைச் சேர்ந்த மீன­வர் நியான் ஜிங்­குவா (52) என்­ப­வர் கடந்த மே மாதம் மீன் பிடிக்க கட­லுக்கு சென்­றுள்­ளார்.பிங்­டாம் பிராந்­தி­யம் அருகே மீன் பிடித்­துக் கொண்டு இருந்த போது தீடீ­ரென அப்­ப­குதி முழு­வ­தும் மூடு­பனி சூழ்ந்­துள்­ளது.

அவ­ரது மொபைல் போனும் வேலை செய்­ய­வில்லை. கரைக்கு திரும்­ப­லாம் என்ற நிலை­யில் எரி பொரு­ளும் தீர்ந்­து­விட்­டது. என்ன செய்­வது என்று தெரி­யா­மல் நியான் ஜிங்­குவா கட­லில் தனி­யாக தத்­த­ளித்­துள்­ளார்.

 கட­லில் சிக்­கிய இரண்­டா­வது நாளே குடி­தண்­ணீ­ரும் காலி­யா­கி­விட்­டது. சிறு நீரை குடித்தே உயிர் வாழ்ந்­துள்­ளார். மீன்­பி­டிக்க வைத்­தி­ருந்த புழுக்­களை சாப்­பிட்டு பசி­யா­றி­யுள்­ளார்.

கட­லில் 11 நாட்­கள் அந்த பகு­தி­யில் ஏதா­வது கப்­பல் வருமா என்று தூங்­கா­மல் இரவு பக­லாக கண் விழித்து பார்த்­துள்­ளார். இறு­தி­யில் அவரை அந்த வழி­யாக வந்த சரக்கு கப்­பல் மீட்டு கரை சேர்த்­துள்­ளது.