உலகிலேயே அதிக வெப்பமான நகரம்

14-06-2019 02:44 PM


உலக வெப்பமயமாதலால் பருவமழை தவறி பல மாநிலங்களில் வறட்சி தாண்டவமாடுகிறது. மக்கள் தண்ணீரை தேடி அலைகின்றனர். கடும் கோடை வெயில் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வாட்டி வதைக்கின்றது.

உலகில் அதிக அளவு வெப்பம் உள்ள நகரமாக ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சுரு என்ற நகரம் விளங்குகிறது. இந்த நகரத்தில் கடந்த சில நாட்கள் முன் பெப்பம் 120 டிகிரி பாரன்ஹீட்டையும் தாண்டியது. சென்ற முதல் தேதி 124.5 டிகிரி பாரன்ஹீட்டாக வெப்பம் இருந்தது.

இங்குள்ள மக்கள் வெயில் கொடுமையை தாங்கிக் கொள்ள மதிய நேரங்களில் மோர் மட்டுமே குடிக்கின்றனர். வசதி உள்ளவர்கள் தினமும் ஐஸ்கட்டிகளை வாங்கி ஏர்கூலர் இயந்திரத்திலும், தண்ணீர் தொட்டிகளிலும் போட்டு வைப்பதாக கூறுகின்றனர்.