ஆன்மிக கோயில்கள் :பாவம், தோஷங்கள் நீக்கும் கேடி­லி­யப்­பர்

13-06-2019 03:44 PM

 தல வர­லாறு:    

திருச்­செந்­தூ­ரில் முரு­கப்­பெ­ரு­மான் சூரனை கொன்ற கொலைப்­பா­வம் நீங்க சிவனை வேண்­டி­னார். கீழ்­வே­ளூர் திருத்­த­லத்­தில் குளம் உண்­டாக்கி சிவனை வழி­பட்­டால் பாவம் வில­கும் என சிவன் அரு­ளி­னார். அதன்­படி முரு­கப்­பெ­ரு­மா­னும் நவ­வீ­ரர்­க­ளு­டன் இத்­த­லம் வந்­தார். முத­லில் முழு­மு­தற்­க­ட­வு­ளான விநா­ய­கரை மஞ்­ச­ளால் பிடித்து வழி­பட்­டார். அதுவே இப்­போது கீழ்­வே­ளூர் அருகே "மஞ்­சாடி' எனப்­ப­டு­கி­றது. அடுத்து சிவ­லிங்க பூஜை செய்­வ­தற்­காக, தேவ­தச்­சன் மயனை கொண்டு அரு­மை­யான சிவா­ல­யத்தை கட்டி, புஷ்­க­லம் எனப்­ப­டும் விமா­னத்­தை­யும் அமைத்­தார்.

கோயி­லின் கிழக்கு கோபுர வாச­லில் தனது வேலால் தீர்த்­தத்தை உண்­டாக்கி அதில் தானும், தன்­னு­டன் வந்த நவ­வீ­ரர்­க­ளை­யும், சேனா­தி­பதி களை­யும், பூதப்­ப­டை­யி­ன­ரை­யும் சேர்ந்து நீரா­டி­னார். இத­னால் இத்­த­லம் "வேளூர்' ஆனது. பின் முரு­கன் சிவனை நோக்கி கடும் தவம் மேற்­கொண்­டார். இந்த தவம் முழு­மை­ய­டை­யா­மல் இருக்க தீய சக்­தி­கள் இடை­யூறு விளை­வித்­தன. இதி­லி­ருந்து தன்னை காக்க பார்­வ­தியை அழைத்­தார் முரு­கன். முரு­கன் அழைத்­த­வு­ட­னேயே தாய் பார்­வதி, "அஞ்­சு­வட்­டத்­தம்­மன்' என்ற திரு­நா­மம் கொண்டு நான்கு திசை மற்­றும் ஆகா­யத்­தி­லு­மாக சேர்த்து காவல் புரிந்­தார்.

சிங்­கத்­து­வ­ஜன் என்­னும் அர­சன் காட்­டில் வேட்­டை­யாடி அலைந்த போது களைப்­பால் தாகம் ஏற்­பட்­டது. ஒரு முனி­வ­ரின் ஆஸ்­ர­மத்­துக்கு சென்று, அர­சன் என்ற ஆண­வத்­து­டன் தண்­ணீர் கொண்டு வரும்­படி ஆர­வா­ர­மா­கக் கத்­தி­னான். இத­னால், தியா­னத்­தில் இருந்த முனி­வர் கோபத்­து­டன் வெளி­யில் வந்து, "கழுதை போல் கத்­து­கி­றாயே, நீ கழு­தை­யா­கப் போ,'' என்று சபித்­தார். மற்­றொரு காட்­ட­ர­சன் விந்­திய மலை­யில் தவம் செய்து கொண்­டி­ருந்த அகஸ்­தி­ய­ரைத் தரி­சிக்க சென்­ற­வர்­களை துன்­பு­றுத்தி வந்­தான். இத­னால் அந்த அர­ச­னை­யும் கழு­தை­யா­கு­மாறு அகஸ்­தி­யர் சபித்­தார்.அவர்­கள் கழு­தை­யா­கப் பிறந்­த­னர். வணி­கன் ஒரு­வன் அவற்றை பொருள் சுமக்க பயன்­ப­டுத்­தி­னான். ஒரு­நாள், கழு­தை­கள், தற்­போ­தைய அட்­ச­ய­லிங்க சுவாமி கோயி­லி­லுள்ள பிரம்­மத் தீர்த்­தத்­தில் நீர் பரு­கின. இறை­வ­னின் அரு­ளால் அவை தமது முற்­பி­றப்பு வர­லாற்றை உணர்ந்­தன. அதை மனித மொழி­யில் பேசிக்­கொண்­டன. கழு­தை­கள் பேசு­வ­தைக் கவ­னித்த வணி­கன், அவற்றை விட்­டு­விட்டு ஓடி­விட்­டான். இரண்டு கழு­தை­க­ளும் கோயிலை வலம் வந்­தன. அட்­ச­ய­லிங்க சுவா­மி­யின் அருள் பெற்­றன. ஆடி­மா­தம் பவுர்­ணமி முதல் சதுர்த்தி வரை­யில் பிரம்­ம­தீர்த்­தத்­தின் நீர­ருந்­தி­னால், நீங்­கள் மீண்­டும் மனித வடிவை அடை­வீர்­கள் என்று அச­ரீரி ஒலிக்­கவே, இரண்­டும் நீர் அருந்தி மனித வடி­வத்­தைப் பெற்­றன. சிரஞ்­சீ­வி­யாக விளங்­கும் மார்­கண்­டேய முனி­வர் ஒரு நாள் தம் நித்­திய சிவ பூஜையை துவங்­கி­னார். அப்­போது பிரம்­ம­கற்­பம் முடிந்து, கடல் பொங்கி அண்­ட­ப­கி­ரண்­டங்­கள் அழி­யத் துவங்­கி­யது. "எந்­தக்­கா­லத்­தி­லும் அழி­யாத தென்­னி­லந்தை வனம் சென்று கீழ்­வே­ளூர் கேடி­லியை வணங்­கு­வாய்''என்று அச­ரீரி ஒலித்­தது. அதன்­படி மார்­கண்­டேய முனி­வர் வணங்கி பேரு பெற்ற இடம் அட்­ச­ய­லிங்க சுவாமி கோயில். இது உல­கம் அழி­யும் காலத்­தி­லும் அழி­யாத தல­மாக விளங்­கு­மென குறிப்பு உள்­ளது.

 தல­பெ­ருமை:    

நோய் தீரும் பிரார்த்­தனை: இங்­குள்ள திரு­மஞ்­ச­னக்­கு­ளம் தோஷ நிவர்த்­தியை அளிக்­கி­றது. நிருதி மூலை­யி­லுள்ள இந்­திர தீர்த்­தத் தடா­கத்­தில் இந்­தி­ரன் மூழ்கி தன் சாபம் நீங்­கப் பெற்­றான். தென்­மேற்கு மூலை­யி­லுள்ள அக்னி தீர்த்­தத்­தில் நீரா­டி­னால் தோல் நோய் குண­ம­டை­வ­தாக நம்­பிக்­கை­யுள்­ளது.

சிற்ப வேலைப்­பாடு: அம்­பிகை பிம்­பம் சுதை­யால் ஆன­தால் அபி­ஷே­கம் கிடை­யாது. கோயி­லி­லுள்ள சிங்க உரு­வங்­க­ளும், யாளி வரி­சை­க­ளும், வளைந்து தொங்­கும் சட்­டங்­க­ளும், அவற்­றின் நுனி­யில் வாழைப்­பூத் தொங்­கல்­க­ளும், அதைத் தம் மூக்­கால் கொத்­தும் கிளி­க­ளும் சிற்ப வேலைப்­பா­டுக்கு எடுத்­துக்­காட்­டாக உள்­ளன.

விசேஷ அம்­பாள்: மூல­வர் அட்­ச­ய­லிங்க சுவாமி என்ற கேடி­லி­யப்­பர் என்­றும், அம்­பாள் சுந்­தரகுஜாம்­பாள் என்­றும், வன­முலை நாயகி என்­றும் அழைக்­கப்­ப­டு­கின்­ற­னர். பத்­ர­கா­ளி­யின் அம்­ச­மான "அஞ்­சு­வட்­டத்­தம்­மன்' என்ற தெய்­வ­மும் இங்கு குடி­யி­ருக்­கி­றாள். நான்கு திசை­கள் மற்­றும் ஆகா­யம் ஆக ஐந்து புறங்­க­ளி­லும் இருந்து பிரச்னை ஏற்­பட்­டா­லும், பாது­காப்பு தரு­ப­வ­ளாக விளங்­கு­வ­தால் இந்­தப்­பெ­யர் சூட்­டப்­பட்­டது.

பொது தக­வல்:    

ஏழு நிலை ராஜ­கோ­பு­ரத்­து­டன் கிழக்கு நோக்­கிய சன்­னதி. இரண்டு பிர­கா­ரங்­கள். உள்­பி­ர­கா­ரத்­தில் முரு­கன், பத்­ர­காளி, நட­ரா­ஜர், சோமாஸ்­கந்­தர், தெட்­சி­ணா­மூர்த்தி, அகத்­தி­யர், விஸ்­வ­நா­தர், கைலா­ச­நா­தர், பிர­க­தீஸ்­வ­ர­ரர், அண்­ணா­ம­லை­யார், ஜம்­பு­கேஸ்­வ­ரர் ஆகிய சன்­ன­தி­கள் உள்­ளன. குபே­ர­னுக்­கும், முரு­கப்­பெ­ரு­மா­னுக்­கும் தனித்­த­னி­யாக மிகப்­பெ­ரிய சன்­ன­தி­கள் அமைந்­துள்­ளன. இத்­தல விநா­ய­கர் பத்ரி விநா­ய­கர் என்ற திரு­நா­மத்­து­டன் அருள்­பா­லிக்­கி­றார்.

பிரார்த்­தனை    

பாவங்­கள்,தோஷங்­கள் நீங்க பிரார்த்­தனை செய்து கொள்­கின்­ற­னர்.    

நேர்த்­திக்­க­டன்:    

பிரார்த்­தனை நிறை­வே­றி­ய­தும் கோயில் திருப்­ப­ணிக்கு தங்­க­ளால் இயன்ற நன்­கொடை அளித்து வழி­பாடு செய்­கின்­ற­னர்.

 திரு­விழா:    

சித்­ரா­ப­வுர்­ண­மி­யில் பிர­மோற்­ச­வம் நடை­பெ­று­கி­றது.      

திறக்­கும் நேரம்:    

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்­தி­ருக்­கும்.    

முக­வரி:    

கேடி­லி­யப்­பர் (அட்­ச­ய­லிங்க சுவாமி) திருக்­கோ­யில், கீழ்­வே­ளூர் – 611 104. நாகப்பட்டினம் மாவட்­டம்.Trending Now: