ஜோதிடத்தில் குளிகன் யார்? – ஜோதிடர் டாக்டர் என்.ஞானரதம்

13-06-2019 03:37 PM

பொது­வாக எல்­லோ­ருக்­கும் நவ கிர­கங்­க­ளான சூரி­யன், சந்­தி­ரன், செவ்­வாய், புதன், குரு, சனி, சுக்­கி­ரன், ராகு, கேது வைத்து மட்­டும்­தான் பலன் கூறு­வதை பார்த்­தி­ருக்­கின்­றோம். நம்ப கம்­யூட்­டர் ஜாத­கம் போடும் போது மாந்தி அல்­லது குளி­கனை ஜாத­கத்­தில் பார்த்­தி­ருக்­கின்­றோம். ஆனால், அத­னைப் பற்றி நாம் யாரும் கவ­னத்­தில் கொள்ள மாட்­டோம்.(ஜோதி­டம் தெரிந்­த­வர்­க­ளைத் தவிர) அதா­வது மாந்தி மற்­றும் குளி­க­னின் பல­னைப் பற்றி மட்­டும் முக்­கி­யத்­து­வம் தரு­வ­தில்லை அல்­லது அத­னைப் பற்றி சிந்­திப்­ப­தும் கிடை­யாது.

இந்த மாந்­தி­யைப்­பற்றி கேர­ளா­வில் அதிக முக்­கி­யத்­து­வம் தந்து அதன் அடிப்­ப­டை­யில் ஜாத­கப் பலன் பார்க்­கி­றார்­கள் அங்­குள்ள ஜோதி­டர்­கள். ஆனால், தமிழ் நாட்­டில் அதன் முக்­கி­யத்­து­வம் குறை­வா­கவே உள்­ளது என­லாம்.  

யார் இந்த மாந்தி குளி­கன்?

இந்த மாந்தி யார்-? என்­றும் குளி­கன் யார்? என்­றும் ஒரு சில நபர்­க­ளுக்கு மட்­டும்­தான் சந்­தே­கம் எழும். ஜோதி­டத்­தில் மாந்தி மற்­றும் குளி­கன் யார் என்று நம் முன்­னோர்­கள் வழி வகுத்து வைத்­துள்­ள­னர். குளி­கன் என்­பது சனி­யின் மகன் என்­பர் அதா­வது பக­லில் பிறந்த குழந்­தைக்கு சனி­யின் மகனை குளி­கன் என்ற பெய­ரு­ட­னும் இர­வில் பிறந்த குழந்­தைக்கு சனி­யின் மகனை மாந்தி என்ற பெய­ரு­ட­னும் ஜாத­கத்­தில் குறிக்­கப்­ப­டு­கி­றது.

மாந்­திக்கு பார்­வை­கள் உண்டா?

இந்த மாந்­திக்கு குரு, செவ்­வாய், மற்­றும் சனி­யின் சிறப்பு பார்­வை­கள் போலவே மாந்­திக்­கும் உண்டா என்­றால் உண்டு என்றே கூற­மு­டி­யும். மாந்தி தன் இடத்­தி­லி­ருந்து 2, 12 ஸ்தானங்­க­ளை­யும் மற்­றும் மாந்தி தன் இடத்­தி­லி­ருந்து 7, 9 ஸ்தானங்­க­ளை­யும் பார்வை செய்­வார்.

இவ­ரது கார­கத்­து­வம் என்று பார்க்­கும் போது இவர் ஆயுளை நிர்­ண­யிக்­கும் கோளான சனி­யின் மகன் என்­ப­தால் இவ­ரும் ஆயுள் பாவத்­தைப் பற்றி அறிய உத­வும்.  இந்த மாந்­திக்­கும் ஆயு­ளுக்­கும் நெருங்­கிய  தொடர்­புண்டு. அதா­வது கேர­ளா­வில் இந்த மாந்­தியை வைத்­துத்­தான் கேரள ஜோதி­டர்­கள் ஆயுளை நிர்­ண­யம் செய்­கி­றார்­கள்.

மாந்தி எங்கே இருந்­தால் என்ன பலன்?

இந்த மாந்தி எங்­கெங்­கெல்­லாம் இருந்­தால் ஜாத­க­ருக்கு என்ன பலன் நடக்­கும் என்­பதை பொது பல­னாக ஜோதிட சாஸ்­தி­ரம் என்ன கூறு­கி­றது என்­பதை நாம் இங்கே காண­லாம்.

முதல் பாவத்­தில் மாந்தி இருந்­தால் மிக­வும் மந்­த­மா­க­வும், பயந்த சுபா­வ­மா­க­வும், எண்­ணங்­க­ளில் சல­ன­மா­க­வும் இருப்­பர்.

இரண்­டாம் பாவத்­தில் மாந்தி இருந்­தால் அதி­கம் செலவு செய்­ப­வ­ரா­க­வும், மற்­ற­வர்­க­ளின் மனதை புண்­ப­டும்­படி பேசு­ப­வ­ரா­க­வும், வீண் வம்­பினை விலைக்கு வாங்­கு­ப­வ­ரா­க­வும் இருப்­பர்.

மூன்­றாம் பாவத்­தில் மாந்தி இருந்­தால் காது சம்­பந்­தப்­பட்ட நோய் வரக் கூடும். கைக­ளில் அடி­பட வாய்ப்­புள்­ளது அல்­லது வெட்­டுக்­கா­யம் ஏற்­ப­டும் மற்­றும் தைரி­ய­மாக முடி­வெ­டுப்­ப­வர்

நான்­காம் பாவத்­தில் மாந்தி இருந்­தால் சொந்த உற­வில் நாட்­டம் இல்­லா­த­வர் அந்­நி­யர்­க­ளு­டன் அதி­கம் பழ­கு­ப­வர், தாய் சொல்­லிற்கு அடி­ப­ணி­யா­த­வன் மற்­றும் மார்­புப் பகு­தி­யில் நோய்­வர வாய்ப்­புள்­ளது எச்­ச­ரிக்­கை­யு­டன் இருப்­பது நல்­லது.

ஐந்­தாம் பாவத்­தில் மாந்தி இருந்­தால் அற்ப புத்­தி­ரன் உள்­ள­வன், ஞாபக சக்தி குறை­வா­ன­வன் மற்­றும் பெரி­ய­வர்­களை அவ­ம­திப்­ப­வன்.

       ஆறாம் பாவத்­தில் மாந்தி இருந்­தால் இவர்­கள் தங்­கள் எதிர்­பா­லி­னரை எளி­தில் வசி­யம் செய்­யும் அள­விற்கு உடல்­வாகு அமை­யப்­பெற்­ற­வர் மற்­றும் எதி­ரி­களே அஞ்­சும் அள­விற்கு வெற்றி காண்­ப­வன்.

ஏழாம்  பாவத்­தில் மாந்தி இருந்­தால் தன் துணை­யா­ரு­டன் கருத்து மோதல்­கள் அடிக்­கடி ஏற்­ப­டும். விட்­டுக் கொடுத்­துச் சென்­றால் பிரச்­சினை இல்லை.

எட்­டாம் பாவத்­தில் மாந்தி இருந்­தால் ஆயுள் பாவத்­தில் இருப்­ப­தால் உடல் ஆரோக்­கி­யத்­திற்கு அடிக்­கடி நோய் வரக்­கூ­டும். உடல் நல­னில் அக்­க­றைக் கொள்­வது நல்­லது.

ஒன்­ப­தாம் பாவத்­தில் மாந்தி இருந்­தால் சேர்த்து வைத்­தி­ருந்த பூர்­வீக சொத்­தினை அழிப்­ப­வன், தந்­தையை மதிக்­கா­த­வன், தன் இஷ்­டப்­படி நடப்­ப­வன்.

பத்­தாம் பாவத்­தில் மாந்தி இருந்­தால் அவ்­வப்­போது பய­ணம் மேற்­கொள்­ப­வன். பய­ணத்தை விரும்­பு­ப­வன், கட­வுள் நம்­பிக்கை குறைந்­த­வன்.

பதி­னொன்­றாம் பாவத்­தில் மாந்தி இருந்­தால் அதிக நண்­பர்­க­ளைப் பெற்­ற­வன், தர்ம காரி­யங்­க­ளில் விருப்­பம் உள்­ள­வன், புக­ழு­டை­ய­வன்.

பன்­னி­ரெண்­டாம் பாவத்­தில் மாந்தி இருந்­தால் நீண்ட தூர பய­ணம் மேற்­கொள்­ப­வன், பற்­றில்­லா­த­வன் மொத்­தத்­தில் சந்­நி­யா­சி­யாக வாழ்­ப­வன்.

மேலே குறிப்­பிட்ட பலன்­கள் யாவும் பொது­வா­ன­வையே. கார­ணம் அவ­ர­வர் ஜாத­கத்­தில் இருக்­கும் மற்ற மற்ற கிர­கங்­க­ளின் அமைப்­பைக் கொண்டு பலன்­கள் மாறு­ப­டும்.Trending Now: