டி.வி.பேட்டி : ஐ லவ் ஆக்டிங்! – ஷிவானி

13-06-2019 03:36 PM

*    “கடைக்­குட்டி சிங்­கம்” சீரி­ய­லில் (விஜய்  டிவி) ‘மீனாட்­சி”­யாக நடிப்­ப­வர், ஷிவானி.

*    அவ­ரு­டைய முழு பெயர், ஷிவானி நாரா­ய­ணன்.

*    ‘ஷிவானி,’  ‘ஷிவு  பாப்பா’  என்­றெல்­லாம் அவ­ரு­டைய வீட்­டில் செல்­ல­மாக கூப்­பி­டு­வார்­கள்.

*    மே 5, 2001 -  அவ­ரு­டைய டேட் ஆப் பெர்த்.

*    சாத்­தூரை பூர்­வீ­க­மாக கொண்­ட­வர்.

*    அவர் வசித்து வரு­வது சென்­னை­யி­லுள்ள மண­லி­யில்.

*    அப்பா – நாரா­ய­ணன்.   அம்மா  - அகிலா.

*    5 அடி 3 அங்­கு­லம் உய­ர­மும்,  58 கிலோ எடை­யும் கொண்­ட­வர்.

*    அவர் ஏரோ­னாட்­டிக்ஸ் படித்­த­வர்.

*    அவர் ’மூடி’ டைப் கிடை­யாது. ஆனால், அதே நேரத்­தில், செய்ய வேண்­டு­மென்று அவர் நினைத்த காரி­யத்தை செய்ய முடி­யா­மல் போய்­விட்­டால், மூட் – அவுட் ஆகி­வி­டு­வார்.

*    ஒரு டிவி நடி­கை­யாக இருப்­ப­தோடு மாட­லா­க­வும்,  டப்ஸ்­மே­ஷா­க­வும் உள்­ளார்.

* அவர் முதன்­மு­த­லாக அறி­மு­க­மா­னது “சர­வ­ணன் மீனாட்சி” 3ம் பாகத்­தில்.  அதில் அவர் ‘காயத்ரி’ நெகட்­டிவ் கேரக்­ட­ரில் வெளுத்து வாங்­கி­யி­ருந்­தார்.

* அடுத்­த­தாக, அவர் “பகல் நிலவு” சீரி­ய­லில் நடித்­தார். அதில் அவர் ‘சினே­கா’­வாக  புகழ் பெற்­றார்.

* இவை தவிர, ஷிவானி விஜய் டிவி­யில் ஒளி­ப­ரப்­பான ‘ஜோடி பன் அன்­லி­மி­டெட்’ ரியா­லிட்டி ஷோவி­லும் போடி­யா­ள­ராக பங்­கேற்­றார்.

* முன்­னாள் தெலுங்கு சினிமா சூப்­பர் ஸ்டார் சிரஞ்­சீ­வி­யும், ஐஸ்­வர்­யா­ரா­யும் அவ­ரு­டைய அபி­மான நட்­சத்­தி­ரங்­கள்.

* பெங்­க­ளூ­ரு­வும்,லண்­ட­னும் மிக­வும் பிடித்த நக­ரங்­கள்.

* உணவு அயிட்­டத்­தில், சிக்­கன் பிரி­யா­ணியை ரொம்ப பிடிக்­கும்.

* ரெட், பிங்க்  இரண்­டும் பேவ­ரிட் கலர்ஸ்.

* மணி­ரத்­னத்­தின் “இந்­திரா” படத்தை எத்­தனை தடவை வேண்­டு­மா­னா­லும் பார்ப்­பார். அதை அவ்­வ­ளவு பிடிக்­கும்.

* ஷிவா­னி­யின் மெய்ன் ஹாபியே டப்ஸ்­மேஷ் பண்­ணு­வ­து­தான்.

* “நீங்­கள் யாரை­யா­வது லவ் பண்­ணு­கி­றீர்­களா என்று சில பேர் கேட்­ப­துண்டு.  அதற்கு என் பதில், “ஆமாம். லவ் பண்­ணு­கி­றேன்…….. நடிப்பை!”

– இரு­ளாண்டி