எது உண்மையான அழகு?

13-06-2019 03:33 PM

நடிகை காஜல் அகர்­வால், இன்ஸ்­டா­கி­ரா­மில் வெளி­யிட்­டுள்ள அவ­ரது க்ளோஸ்­அப் படம் வைர­லா­கி­யி­ருக்­கி­றது. கார­ணம் : அது, மேக்­அப் இல்­லாத அவ­ரது ஒரி­ஜி­னல் தோற்­றம்!

அந்த படத்­தில், மேக்­அப் இல்­லாத அவ­ரது முகம், இயல்­பான நிறத்­து­டன் சுருக்­கங்­க­ளு­டன் காணப்­ப­டு­கி­றது.

இதன் கீழ், கங்­கனா பதி­வு­செய்­துள்ள ‘தத்­துவ’ வாச­கங்­கள்:‘இந்த உல­கம், உடல்­தோற்­றத்­தின் மீது மோகம் கொண்­ட­தாக மாறி­விட்­டது. இத­னால், யாரும் தங்­க­ளது உண்­மையை இனி­மே­லும் அறிந்­து­கொள்ள முடி­யாது.

ஸ்டைலான அழ­குக்கு உத்­த­ர­வா­தம் என விளம்­ப­ரப்­ப­டுத்­தப்­ப­டும் மேக் அப் மற்­றும் அழகு சாதன பொருட்­க­ளுக்கு, கோடிக்­க­ணக்­கான ரூபாய் செல­வ­ழிக்­கப்­ப­டு­கி­றது. அந்த செயற்­கை­யான அழகை சேர்க்­கும் கூட்­டத்­து­டன் நாம் இணைந்­து­கொள்­கி­றோம்; அல்­லது, அவர்­க­ளு­டன் இணைய முடி­யா­த­தால் உல­கி­லி­ருந்தே வெளியே தள்­ளப்­பட்­டு­விட்­ட­தா­கப் பரி­த­விக்­கி­றோம்.

சமூக வலை­த­ளங்­கள் நம்­மு­டைய சுய­ம­ரி­யா­தையை விழுங்­கு­கின்­றன. சமூக வலை­த­ளங்­க­ளில் அங்­கீ­க­ரிப்பு பெறு­வ­தற்­காக, நமது இயற்­கை­யான தன்­மை­களை நாம் மறைக்க வேண்­டி­யி­ருக்­கி­றது.மேக்­அப், நமது வெளித்­தோற்­றத்தை அழ­கு­ப­டுத்­த­லாம். ஆனால், நமது குண­ந­லன்­களை நாம் மேம்­ப­டுத்தி நேசத்­தோடு செயல்­ப­டு­வ­து­தான், நமது உண்­மை­யான அழகு!’.

இந்த அட்­வைஸ், நெட்­டி­சன்­க­ளி­டம் வர­வேற்­பைப் பெற்­றி­ருக்­கி­றது.