கத்ரினா –சல்மான் ‘கலகல’ பேட்டி!

13-06-2019 03:33 PM

பாலி­வுட் நட்­சத்­தி­ரங்­கள் கத்­ரினா கைப்­பும் சல்­மான்­கா­னும் இணைந்து ஒரு டிவி சேன­லுக்கு அளித்த ‘கல­கல’ பேட்டி:

நிரு­பர் : ‘‘கத்­ரீனா... நீங்­கள் யாரு­டன் சேர்ந்து டின்­னர் சாப்­பிட விரும்­பு­கி­றீர்­கள்? உங்­க­ளுக்கு விருப்­ப­மான 3 நபர்­க­ளைக் கூறுங்­கள்’’

கத்­ரினா : ‘‘(மறைந்த ஹாலி­வுட் நடிகை) மர்­லின் மன்றோ, நரேந்­திர மோடிஜி, (அமெ­ரிக்க முன்­னாள் வெளி­யு­றவு அமைச்­சர்) கண்­ட­லீசா ரைஸ்!’’

நிரு­பர் : ‘‘இந்த லிஸ்ட்­டில் சல்­மான் கானை நீங்­கள் சேர்க்­க­வில்­லையே! என்ன கார­ணம்?’’

கத்­ரினா : ‘‘நான் சல்­மா­னு­டன் சேர்ந்து டின்­ன­ருக்கு சென்­றதே கிடை­யாது. ஏனென்­றால், அவர் டின்­ன­ருக்கு வெளியே செல்­வது இல்லை!’’

சல்­மான் : ‘‘கத்­ரி­னா­வின் டின்­னர் நேரம், மாலை 6.30 மணி... ஆனால், அந்த நேரம்­தான் எனக்கு லஞ்ச் நேரம்! இத­னால்­தான், கத்­ரி­னா­வு­டன் நான் டின்­ன­ருக்கு செல்­வ­தில்லை!’’.

நிரு­பர் : ‘‘சல்­மான்... நீங்­கள் யாரு­டன் சேர்ந்து டின்­னர் சாப்­பிட விரும்­பு­கி­றீர்­கள்? உங்­க­ளுக்கு விருப்­ப­மான 3 நபர்­க­ளைக் கூறுங்­கள்’’.

சல்­மான் : ‘‘கத்­ரினா குறிப்­பிட்ட அதே 3 பேர்­தான்! அவர்­க­ளு­டன் டின்­னர் சாப்­பி­டும் வாய்ப்பை மிகுந்த பெரு­மை­யா­கக் கரு­து­வேன். அதே வேளை­யில், லஞ்ச் மற்­றும் டின்­னரை வீட்­டில் எனது குடும்­பத்­தி­ன­ரு­டன் சேர்ந்து சாப்­பி­டு­வ­தில்­தான் எனக்கு அதிக விருப்­பம்!’’.

கத்­ரினா : ‘‘சல்­மான்... மகாத்மா காந்தி, நேரு, அன்னை தெரசா ஆகி­யோ­ரு­டன் காபி அருந்­தி­ய­ப­டியே உரை­யாட உங்­க­ளுக்கு விருப்­பம் இருக்­கி­றதா?’’.

சல்­மான் : ‘‘அந்த 3 பெரி­ய­வர்­க­ளை­யும் சந்­தித்­துப் பேச வாய்ப்பு கிடைத்­தால், அது எனக்கு மிகுந்த மகிழ்ச்­சியை ஏற்­ப­டுத்­தும். ஆனால், அதற்கு இன்­னும் நிறைய ஆண்­டு­கள் இருக்­கி­றதே!’’.

நிரு­பர், கத்­ரினா : ‘‘புத்­தி­சா­லித்­த­ன­மா­கப் பதி­ல­ளிக்­கி­றீர்­கள்! பாராட்­டுக்­கள்!’’

நிரு­பர் : ‘‘சல்­மான்... உங்­க­ளுக்கு ஏன் தேசிய விருது இன்­னும் கிடைக்­க­வில்லை?’’.

சல்­மான் : ‘‘எந்த விரு­தை­யும் நான் விரும்­ப­வில்லை. என்­னு­டைய படங்­களை பார்க்க மக்­கள் தியேட்­டர்­க­ளுக்கு செல்­வ­தைத்­தான் நான் மிகப்­பெ­ரிய விரு­தாக கரு­து­கி­றேன். நாடு முழு­வ­தும் என்­னு­டைய படங்­களை மக்­கள் பார்க்­கின்­ற­னர். இதைத்­தான் நான் பெரு­மை­யாக கரு­து­கி­றேன். இது தேசிய விருதை விட மிக­வும் பெரி­யது’’.Trending Now: