ஹோலோகிராம் கணினி வந்தாச்சு!

13-06-2019 03:31 PM

புதிய பொருட்­களை வடி­வ­மைப்­பது முதல், கணினி விளை­யாட்­டு­கள் வரை பல­வற்­றுக்­கும், இப்­போது ஹோலோ­கி­ராம் எனப்­ப­டும்­முப்­ப­ரி­மாண பிம்­பத் தொழில் நுட்­பம் பயன்­ப­டத்­து­வங்கி உள்­ளது.

இந்­நி­லை­யில், 'லுக்­கிங் கிளாஸ் பேக்­டரி' என்ற நிறு­வ­னம் முதல் முறை­யாக ஹோலோ­கி­ராம் திரை கொண்ட பிரத்­யேக கணி­னியை அண்­மை­யில் அறி­மு­கப்­ப­டுத்தி உள்­ளது. 'லுக்­கிங் கிளாஸ் புரோ' மருத்­து­வம், பொறி­யி­யல் வடி­வ­மைப்பு, கணினி விளை­யாட்டு உள்­ளிட்ட பல துறை­யி­ன­ருக்கு, இப்­படி ஒரு கணினி மிக­வும் தேவை­யாக இருப்­ப­தாக, இதை வெளி­யிட்ட அந்­நி­று­வ­னத்­தின் அதி­கா­ரி­கள் ஊட­கங்­க­ளி­டம் தெரி­வித்து உள்­ள­னர்.

இன்­டெல் என்.யு.சி.,சில்லை அடிப்­ப­டை­யா­கக் கொண்ட லுக்­கிங் கிளாஸ் புரோ கணி­னி­யில், ஒரு பெரிய திரை­யும், பக்­க­வாட்­டுத் திரை­யும் உள்­ளன. திரை­யில் முப்­ப­ரி­மா­ணத்­தில் தெரி­யும் ஹோலோ­கி­ராம் உரு­வங்­களை, 360 டிகிரி கோணத்­தி­லும் சுழற்­றிப் பார்ப்­பது போன்ற கட்­டுப்­பா­டு­களை, பக்­க­வாட்­டில் உள்ள சிறிய திரை மூலம் செய்ய முடி­யும்.இவை தவிர, ஹோலோ­கி­ராம் வடி­வங்­க­ளைக் கொண்ட பல­வி­த­செ­ய­லி­க­ளை­யும், மென்­பொ­ருள்­க­ளை­யும் இந்­தக் கணி­னி­யில் பயன்­ப­டுத்­த­லாம்.Trending Now: