பத்திரிகையாளர் சுதாங்கனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை!’ – 91

13-06-2019 03:11 PM

அவ­ருக்கு இந்­திய திரைப்­ப­டத் துறை­யி­னர் என்ன செய்­த­னர் என்­ப­தைப் பற்றி  இன்று நான் விவா­திக்க விரும்­ப­வில்லை. அணு அணு­வாக முன்­னேறி வரும் திரை உலக சரித்­தி­ரத்­தில் அது ஒரு மாசு படிந்த அத்­தி­யா­யம்.

26 வரு­டங்­க­ளுக்கு முன், மறைந்து போன­வரை இன்று நாம் நினை­வு­கூர்­கி­றோம். அவ­ருக்கு அஞ்­சலி செலுத்­து­கி­றோம். அவ­ரு­டைய நூற்­றாண்டு நினைவு நாளை இந்­தியா முழு­வ­தும் சிறப்­பா­கக் கொண்­டா­டு­கி­றோம். அவர் நினை­வில் சிறப்­புப் பரிசை இந்­திய அர­சாங்­கம் ஏற்­ப­டுத்தி யிருக்­கி­றது.  அவர் உயி­ரோடு இருந்­த­போது இதெல்­லாம் நடந்­தி­ருந்­தால், அவர் உள்­ளம் பெரு­மைப்­பட்­டி­ருக்­கும்.

இன்று, `நன்றி மறக்­காத மனி­தர்­கள் திரைப்­ப­டத்­து­றை­யில் இருக்­கி­றார்­கள்’ என்று அவர் ஆத்மா பெரு­மைப்­ப­டு­கி­றதோ  என்­னவோ?

ஒரு முறை தவறு செய்­து­விட் டோம், மற்­றொரு முறை­யும்  அதே தவறை செய்­ய­லாமா?

திரு நட­ராஜ முத­லி­யார் இந்த 86 வய­தி­லும் தின­சரி பத்­தி­ரி­கை­களை படிக்­கி­றார். ` பால்கே’ நூற்­றாண்டு விழா­வைப் பற்றி அவர் படிக்­கா­மலா இருந்­தி­ருப்­பார்?

ஒன்று மட்­டும் சொல்­கி­றேன். நட­ராஜ முத­லி­யார் ஒரு கவு­ரவ மான மனி­தர், பண்­புள்­ள­வர்.  அவர் நம்­மி­டம் எதை­யும் எதிர்­பார்க்­க­வில்லை.  ஆனால் அவ­ரி­ட­மி­ருந்­து­தான் நாம்  நிறைய எதிர்­பார்க்­கி­றோம்.  அவ­ரு­டைய அனு­ப­வங்­களை, அவ­ரு­டைய அறி­வு­ரை­களை தெரிந்து கொள்ள வேண்­டிய நிலை­யில் நாம்­தான் இருக்­கி­றோம்.

யார் யாரையோ,எதெ­தற்கோ நாம் பாராட்­டு­கி­றோம். ஆனால், இவரை இதற்­குத்­தான்  பாராட்­டு­கி­றோம் என்­பதை புரிந்து கொள்ள நாம் ஏன் தயக்­கம் காட்­ட­வேண்­டும் ?

 திரு நட­ராஜ முத­லி­யாரை பெரு­மைப்­ப­டுத்த நாம் அவரை பாராட்ட வேண்­டாம். நம்மை பெரு­மைப்­ப­டுத்­திக் கொள்­ளத்­தான்  நாம் அவரை பாராட்ட வேண்­டும்.

 இந்த நல்ல காரி­யத்தை  நாம் உடனே செய்­தாக வேண்­டும்.

 ஆனால், தனிப்­பட்­ட­வர்­கள் தனித்­த­னி­யாக அவரை பாராட்­டு­வதை விட, எல்­லோ­ரும் ஒன்று சேர்ந்து ஒரே குர­லா­கப் பாராட்டி, நாம் நன்­றியை அவ­ருக்­குத் தெரி­வித்­தால்­தான் உயர்­வாக இருக்­கும்.

 இந்த நல்ல பணியை செய்­யக்­கூ­டிய  ஒரே அமைப்பு தென்­னிந்­திய திரைப்­பட தயா­ரிப்­பா­ளர் சங்­கம்­தான்.  தூய்­மை­யான உள்­ள­மும், மேன்­மை­யான உணர்ச்­சி­க­ளை­யும் கொண்ட திரு ஏ.எல்.சீனி­வா­சன் அந்த சங்­கத்­தின் தலை­வ­ராக இருக்­கி­றார்.  `  எடுத்­துக் கொடுத்­தால் போதும் அவர் எதை­யும் அழ­காக தொடுத்­து­வி­டு­வார்’ என்ற நம்­பிக்கை எனக்கு இருக்­கி­றது.

நல்­ல­வர்­க­ளுக்கு விழா எடுத்­தால்,  அதற்­கா­கும் செலவை ஏற்க நம்­ம­வர்­கள் என்­றுமே தயங்­கி­ய­தில்லை.

ஆகவே செல­வைப் பற்றி கவ­லைப்­பட வேண்­டாம். `சித்­ரா­லயா’ பத்­தி­ரிகை சார்­பில் இப்­போதே நான் ரூ 1,000 த்திற்கு நான் தென்­னிந்­திய  திரைப்­பட தயா­ரிப்­பா­ளர் சங்­கத்­திற்கு செக் அனுப்­பி­விட்­டேன். இந்த என் காணிக்கை ஒரு சிறு துளி.

`சிறு துளி பெரு­வெள்­ளம்’ என்ற பழ­மொ­ழியை நாம் என்ன மறந்தா விட்­டோம்?

எங்­க­ளி­டம் பேசிக்­கொண்­டி­ருந்­த­போது நட­ராஜ முத­லி­யார்  ‘‘நல்ல காலம் என்­னைப் பற்றி தெரிந்து கொண்டு இப்­போதே வந்து விட்­டீர்­கள்.  அடுத்த வரு­டம் வந்­தால் நான் இருக்க மாட்­டேன்’’ என்­றார்.

 அடுத்த வரு­டம் வரை நாம் காத்­தி­ருக்­கப் போகி­றோமா?

 இது ஸ்ரீதர் எழு­திய தலை­யங்­கம்.

 ஸ்ரீதர் ஒரு  எழுத்­தா­ளர், இயக்­கு­நர், தயா­ரிப்­பா­ளர் மட்­டு­மல்ல, தான் சார்ந்த தொழி­லின் மீதும், அந்த துறை­யின் மீதும் மிகுந்த அக்­கறை கொண்­ட­வர். சமூக விழிப்­பு­ணர்ச்சி என்­பது அவ­ரது இயற்கை குணம்.

 1965ல் பாகிஸ்­தான்  – இந்­தியா யுத்­தம் வந்­த­போது, சிவாஜி கணே­சனை சந்­தித்து, போருக்­காக நிதி திரட்ட ஒரு கலை நிகழ்ச்­சியை ஏற்­பாடு செய்­தார். அதில் எல்லா நட்­சத்­தி­ரங்­க­ளை­யும் கலந்து கொள்­ளச் செய்­தார். அதில் நடந்த ஒரு சிறு நாட­கம்­தான் பின்­னால், ‘கலாட்டா கல்­யா­ணம்’ என்ற திரைப்­ப­ட­மாக வந்­தது.

 அந்த கலை நிகழ்ச்­சிக்­காக கோபு எழு­திய ஒரு சிறு நகைச்­சுவை நாட­கம் அது. அதை பார்த்த சிவாஜி தன்­னு­டைய ராம்­கு­மார் பிலிம்ஸ் சார்­பில் சி.வி.ராஜேந்­தி­ரன் இயக்­கத்­தில் ‘கலாட்டா கல்­யா­ணம்’ பட­மாக எடுத்­தார்.

 தமிழ் சினி­மா­வில் ஒரு நடி­க­ருக்கு கிடைத்த வர­வேற்பு ஒரு இயக்­கு­ந­ருக்­கும் கிடைத்­தது என்­றால் அது இயக்­கு­நர் ஸ்ரீத­ருக்­குத்­தான். கல்­லூரி பெண்­க­ளி­டம் அவ­ருக்கு அப்­படி ஒரு வர­வேற்பு இருந்­தது.

தமிழ் சினி­மா­வின் போக்கை மாற்­றிய பெருமை இயக்­கு­நர் ஸ்ரீத­ரையே சாரும். முத­லில் தானும் சினிமா போய்க்­கொண்­டி­ருந்த பாணி­யில்­தான் பய­ணித்­தார். பிறகு தான் இயக்­கு­ந­ரா­ன­தும், அதை நடி­கர்­க­ளின் இடம் என்­பதை மாற்றி அதை ஒரு இயக்­கு­ந­ரின் கள­மாக மாற்­றிக் காட்­டி­ய­வர் ஸ்ரீதர்­தான்.  அவ­ருக்­குள் ஒரு பெரிய கலா ரசி­கன் இருந்­தான். தன் படங்­க­ளில் அவர் பாடல்­க­ளுக்கு அதிக முக்­கி­யத்­து­வம் கொடுப்­பார். ஒவ்­வொரு பாட­லும், அதன் வரி­க­ளும் அரு­மை­யாக இருக்க வேண்­டும் என்­ப­தில் அதிக அக்­கறை செலுத்­தி­னார்.

 தன் முதல் பட­மான ` கல்­யா­ணப்­ப­ரிசு’ படத்­திற்கு ஏ. எம்.ராஜா­வைத்­தான் இசை­ய­மைப்­பா­ள­ராக்­கி­னார். அந்த படத்­தின் பாடல்­கள் அனைத்­துமே அரு­மை­யாக அமைந்­தன. அப்­போது ஸ்ரீத­ரின் ஆஸ்­தான கவி­ஞர் பட்­டுக்­கோட்டை கல்­யா­ண­சுந்­த­ரம்­தான். அதே போல் நாட­கங்­க­ளைப் பார்த்து அதில் நடிக்­கும் நல்ல நடி­கர்­க­ளைத் தேர்ந்­தெ­டுத்து  அவர்­க­ளுக்கு நல்ல கதா­பாத்­தி­ரம் கொடுப்­ப­தில் வல்­ல­வர்.

 ஸ்ரீதர் தமிழ் சினி­மா­வில் ஒரு சகாப்­தம் என்றே சொல்­ல­லாம். அவர் நேற்­றைய சினிமா தமி­ழை­யும் அதா­வது சரித்­திர  பின்­னணி படங்­க­ளுக்கு அதே பாணி­யில் எழு­தி­னார். பின்­னர் ` காத­லிக்க நேர­மில்லை’ போன்ற தமிழ் சினி­மா­வால் மறக்க முடி­யாத படத்­தில் சாதா­ரண பேசும் தமி­ழை­யும்  கையாண்­டார்.

ஸ்ரீதர் வந்­த­பி­ற­கு­தான் தமிழ் சினி­மா­வின் கேமிரா நக­ரத் தொடங்­கி­யது என்­பார்­கள். அது­வ­ரை­யில் தமிழ் சினிமா நாடக பாணி­யி­லேயே இருந்­தது. ஸ்ரீதர் வந்­தார், கேமிரா கோணங்­க­ளும் காட்­சி­க­ளும் மாறத் துவங்­கின.  ஒரு செட்­டுக்­குள் ஒரு முழு படத்­தை­யும் எடுக்க முடி­யும் . அது­வும் குறைந்த செல­வில்  குறைந்த நாட்­க­ளில் ஒரு படத்தை எடுத்து வெற்றி பெறச் செய்ய முடி­யும் என்­ப­தை­யும் ஸ்ரீதர்­தான் நிரூ­பித்­துக் காட்­டி­னார். அந்­தப் படம்­தான் `நெஞ்­சில் ஓர் ஆல­யம்’. ஒரு ஆஸ்­பத்­திரி செட்­டுக்­குள், 23 நாட்­க­ளில் அந்­தப் படம் முழு­வ­தை­யும் எடுத்து முடித்­தார்.

 அந்­தப் படத்­தில்­தான் அரு­மை­யான நடி­கர் முத்­து­ரா­ம­னை­யும், நடி­கர் நாகே­ஷை­யும் அவர் அறி­மு­கப்­ப­டுத்­தி­னார். அந்த இரு நடி­கர்­க­ளும் தமிழ் சினி­மா­வில் சரித்­தி­ரத்­தில் நீங்­காத இடம் பெற்­ற­வர்­கள். அது­வரை இரண்­டாம் கதா­நா­ய­கி­யாக இருந்த தேவி­காவை அவர்­தான் கதா­நா­ய­கி­யாக்­கி­னார். ஸ்ரீதர் என்­பது தமிழ் சினி­மா­வின் ஒரு மறக்க முடி­யாத சரித்­தி­ரம் என்­பதை யாரும் மறுக்க முடி­யாது.

(நிறை­வ­டைந்­தது)