பார்த்தது படித்தது ரசித்தது – சுதாங்கன் – 16–6–19

13-06-2019 02:58 PM

மீண்­டும் தமி­ழ­கத்­தில் மொழிப் போர் எதிர்ப்­புக்­கு­ரல்­கள் துவங்க ஆரம்­பித்து,, மத்­திய அர­சின் விளக்­கத்­திற்­குப் பிறகு அதற்கு ஒரு முற்­றுப்­புள்ளி விழுந்­தி­ருக்­கி­றது.  வரைவு அறிக்­கை­யில் இந்தி கட்­டா­ய­மில்லை என்ற திருத்­தத்தை வெளி­யிட்டு இப்­போ­தைக்கு பிரச்­னைக்கு முடிவு கட்­டி­யி­ருக்­கி­றது மத்­திய மனி­த­வள மேம்­பாட்டு அமைச்­ச­கம்.

புதிய கல்­விக் கொள்­கையை வகுப்­ப­தற்­காக இஸ்­ரோ­வின் முன்­னாள் தலை­வர் கஸ்­தூரி ரங்­க­னின் தலை­மை­யில் ஒன்­பது பேர் கொண்ட நிபு­ணர் குழு ஒன்று கடந்த ஆண்டு அமைக்­கப்

பட்­டது. அந்த குழு மத்­திய அர­சுக்கு வரைவு அறிக்­கையை வழங்­கி­யது. மனி­த­வள மேம்­பாட்­டுத் துறை அமைச்­சக இணை­யத்­தில் தேசிய கல்­விக் கொள்கை தொடர்­பான  பரிந்­து­ரை­கள் வெளி­யி­டப்­பட்டு, அதன் மீது கருத்­துத் தெரி­விக்­கும்­படி பொது மக்­க­ளி­டம் கேட்­டுக் கொள்­ளப்­பட்­டன. 484 பக்­கங்­கள் கொண்ட அந்த அறிக்கை மாநில மொழி ( தாய்­மொழி), ஆங்­கி­லம் ஆகி­ய­வற்­று­டன், ஆறாம் வகுப்பு முதல் மூன்­றா­வது மொழி­யாக  இந்­தி­யை­யும் கட்­டா­யம் கற்க வேண்­டும் என்று பரிந்­து­ரைத்­தி­ருந்­தது.  இப்­போது கட்­டா­ய­மாக ஹிந்தி கற்­க­வேண்­டும் என்­பது மாற்­றப்­பட்­டும், தங்­க­ளது மாநில மொழி அல்­லாத வேறு ஏதா­வது ஓர் இந்­திய மொழி­யைக் கற்க வேண்­டும் என்­கிற திருத்­தம் கொண்­டு­வ­ரப்­பட்­டி­ருக்­கி­றது.

 இந்தி எதிர்ப்பு என்­கிற பார்­வை­யில் மட்­டுமே தேசிய கல்­விக் கொள்­கையை பார்க்க முற்­ப­டு­வது புத்­தி­சா­லித்­த­ன­மா­னதா என்­பதை யோசிக்க வேண்­டும்.  1965ம் ஆண்டு தமி­ழ­கத்­தில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்­டம் நடந்த சூழ­லை­யும், இன்­றைய கால­கட்­டத்­தை­யும் ஒன்­றாக்க முடி­யாது.

அப்­போது இருந்த சூழல் என்ன ?

 காம­ரா­ஜ­ருக்கு பிறகு இங்கே தமி­ழ­கத்­தில் அப்­போது பக்­த­வத்­ச­லம் முதல்­வ­ரா­னார்.  அரசு நிர்­வா­கத்­தில் நீண்ட அனு­ப­வம் உள்­ள­வர்.  உட­னுக்­கு­டன் முடிவு எடுப்­பார்.

அப்­ப­டிப்­பட்ட திற­மை­சா­லி­யான பக்­த­வத்­ச­லம் முதல்­வ­ராக இருந்­த­போ­து­தான்  1965 ஜன­வரி, பிப்­ர­வரி மாதங்­க­ளில்  நடை­பெற்ற  `இந்தி எதிர்ப்பு போராட்­டம்’ பெரும் சோத­னை­யாக அமைந்­தது.

 தமி­ழ­கம் அதற்கு முன்போ, பின்போ கண்­டி­ராத அள­வுக்கு வன்­மு­றைச் சம்­ப­வங்­க­ளும், தீக்­கு­ளிப்பு நிகழ்ச்­சி­க­ளும் நிகழ்ந்­தன.  ஏறத்­தாழ 18 நாட்­கள் சட்­டம் ஒழுங்கு என்­பதே இல்­லா­மல் ` உள்­நாட்­டுப் போர்’ என்று நினைக்­கும் அள­வுக்கு இந்­திக்கு எதி­ராக மாண­வர்­கள் விஸ்­வ­ரூ­பம் எடுத்­துப் போரா­டி­னர்.

 இந்­தியை திணிக்க பல­முறை முயன்று தோல்வி அடைந்த ‘மத்­திய அரசு 1965 ஜன­வரி 26ம் தேதி ( குடி­ய­ரசு தினம்) முதல் இந்தி ஆட்சி மொழி ஆகும்’ என்று அறி­வித்­தது.

 உடனே தமி­ழ­கம் போர்க்­க­ளம் ஆனது.

 திமு கழ­கத்­தில் செயற்­குழு கூட்­டம்  1965 ஜன­வரி 8ம் தேதி கூடி­யது. ஜன­வரி 26ம் தேதி முதல் இந்தி ஆட்சி மொழி­யா­கும் என்று மத்­திய அரசு அறி­வித்து இருப்­ப­தால் அன்று நாடெங்­கும் கறுப்­புக்­கொடி ஏற்றி, துக்க நாளாக கடைப்­பி­டிப்­பது என்­றும், கறுப்­புச் சின்­னம்  அணி­வது என்­றும் இந்­தக் கூட்­டத்­தில் தீர்­மா­னம் நிறை­வே­றி­யது.

அன்­றைய தினம் தமிழ்­நா­டெங்­கும் கண்­ட­னக் கூட்­டங்­கள் நடை­பெ­றும் என்­றும், சென்­னை­யில் நடை­பெ­றும் கூட்­டத்­தில் அண்ணா பேசு­வார்  என்­றும் அறி­விக்­கப்­பட்­டது.

‘தடை விதிக்­கப்­பட்­டால் தடையை மீறு­வேன்’ என்று செய்­தி­யா­ளர்­க­ளி­டம் அண்ணா சொன்­னார்.

 ஜன­வரி 18, 1965ம் ஆண்டு திருச்­சி­யில் ‘இந்தி எதிர்ப்பு மாநாடு ஒன்றை முத்­த­மிழ்க் காவ­லர் கி.ஆ. பெ. விசு­வ­நா­தம் நடத்­தி­னார்.

 மாநாட்­டுக்கு பி.டி. ராஜன் தலைமை தாங்­கி­னார், மதுரை மில் அதி­ப­ரும் தமிழ்­நாடு பத்­தி­ரிகை ஆசி­ரி­ய­ரு­மான கரு­முத்து தியா­க­ராஜ செட்­டி­யார் தமிழ்க்­கொடி ஏற்றி வைத்­தார், அனை­வ­ரை­யும் வர­வேற்று கோவை விஞ்­ஞானி ஜி.டி. நாயுடு பேசி­னார்.

 இந்த மாநாட்­டில் ராஜாஜி கலந்து கொண்டு பேசி­னார்.  அப்­போது அவர், ` இந்தி ஆட்சி மொழி ஆகிற ஜன­வரி 26ந்தேதி திமு கழ­கத்­துக்கு எப்­படி துக்க நாளோ, அது­போல் எனக்­கும் துக்க நாள், சொல்­லப்­போ­னால், திமு கழ­கத்­தி­னரை விட எனக்கு 2 மடங்கு துக்­கம் இருக்­கி­றது. இந்தி திணிக்­கப்­ப­டு­கிற 26ந்தேதியை மட்­டும் திமு கழ­கம் துக்க நாளாக கொண்­டா­டு­கி­றது.  என்­னைக் கேட்­டால் இந்த ஆண்டு முழு­வ­தும் துக்க நாள்­தான்.  கறுப்­புக் கொடி தேவையே இல்லை. ஜன­வரி 26ம் தேதி காங்­கி­ரஸ்­கா­ரர்­கள் ஏற்றி வைக்­கும் மூவர்­ணக் கொடியே துக்­கக் கொடி­தான்.

 இந்­திய அர­சி­யல் சட்­டத்­தின் 17வது பிரிவு, இந்­தியை ஆட்சி மொழி ஆக்­கும்­படி கூறு­கி­றது. அந்­தச் சட்­டத்தை தீயிட்டு கொளுத்­து­வ­தால், வெறும் காகி­தம்­தான் எரி­யும். எனவே அதைக் கட­லில் எறிய வேண்­டும்.

 இந்த நல்ல காரி­யத்தை செய்ய அர­சாங்­கம் முன்­வ­ராது. எனவே, அந்த சட்­டத்தை அமல் நடத்­தா­மல் நிறுத்தி வைக்க வேண்­டும்.

 விருப்­பப்­படி எல்­லாம் சட்­டத்தை திருத்­து­கி­றார்­கள். அப்­ப­டி­யி­ருக்க, இந்தி திணிப்பு சட்­டத்தை ஏன் நிறுத்தி வைக்­கக்­கூ­டாது?

 காங்­கி­ரஸ்­கா­ரர்­க­ளுக்கு நாட்டை ஆளத் தகுதி இல்லை. எனவே, அவர்­களை ஆட்­சியை விட்டு விரட்ட வேண்­டும்.

 ஆங்­கி­லத்தை விரட்­டி­விட்டு, இந்­தி­யைத் திணிக்க நினைக்­கி­றார்­கள். எல்லா மொழிக்­கா­ரர்­க­ளுக்­கும் பொது­வான இணைப்பு மொழி­யாக ஆங்­கி­லம் இருந்து வரு­கி­றது. ஆங்­கி­லத்தை நீக்­கி­னால் ஒரு­மைப்­பாட்­டுக்கு ஆபத்து’  என்று ராஜாஜி பேசி­னார். மாநாட்­டில் ‘நாம் தமி­ழர்’ இயக்­கத் தலை­வர் சி.பா. ஆதித்­த­னார், முஸ்­லீம் லீக் தலை­வர் இஸ்­மா­யில் சாகிப், திமுக தலை­வர்­க­ளில் ஒரு­வ­ரான ரா. நெடுஞ்­செ­ழி­யன், பார்­வர்ட் பிளாக் கட்சி தலை­வர் மூக்­கையா தேவர் ஆகி­யோர் பேசி­னார்­கள்.

 1965ம் வரு­டம் ஜன­வரி 26ம் தேதி துக்க தினம் என்று திமுக அறி­வித்­தது, இந்­தியா முழு­வ­தும் பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யது.

அப்­போது பிர­த­ம­ராக லால் பக­தூர் சாஸ்­திரி இருந்­தார். ` இந்­தி­யைத் திணிக்க மாட்­டோம்’ என்று பிர­த­மர் சாஸ்­தி­ரி­யும், மற்ற மந்­தி­ரி­க­ளும் கூறி­னார்­களே தவிர, ‘இந்தி பேசாத மக்­கள் விரும்­பும் வரை ஆங்­கி­லத்தை அகற்ற மாட்­டோம்’ என்று நேரு கொடுத்த உறு­தி­மொ­ழிக்­குச் சட்ட வடி­வம் கொடுக்க முன்­வ­ர­வில்லை.

‘குடி­ய­ரசு தினத்தை துக்க நாளாக கடைப்­பி­டிக்­கப் போவ­தாக திமு கழ­கத்­தி­னர் அறி­வித்­துள்­ளார்­கள். இது குறித்து அர­சாங்­கம் தக்க நட­வ­டிக்கை எடுக்­கும்’ என்று முதல் பக்­த­வத்­ச­லம் கூறி­னார். ‘துக்க நாள் பொதுக்­கூட்­டத்­துக்கு அனு­மதி கொடுக்க மாட்­டோம்’ என்று போலீ­சார் கூறி­னார்­கள்.

 பொதுக்­கூட்­டத்­துக்கு அனு­மதி கோரி திமு கழ­கம் கொடுத்த மனு தள்­ளு­படி செய்­யப்­பட்­டது. குடி­ய­ரசு தினம் நெருங்க நெருங்க,  பதட்­ட­மும், பர­ப­ரப்­பும் அதி­க­மா­யின.

`திமு கழ­கத்­தி­னர் மீது என்ன நட­வ­டிக்கை எடுக்­கப் போகி­றீர்­கள்?’ என்று பக்­த­வத்­ச­லத்­தி­டம் செய்­தி­யா­ளர்­கள் கேட்­டார்­கள்.

` தகுந்த நட­வ­டிக்கை எடுப்­போம். ஆனால் என்ன நட­வ­டிக்கை என்­பதை இப்­போது கூற முடி­யாது ‘ என்று பக்­த­வத்­ச­லம் பதி­ல­ளித்­தார்.

 விடிந்­தால் குடி­ய­ரசு தினம், நள்­ளி­ரவு 1.30 மணிக்கு அண்ணா கைது செய்­யப்­பட்­டார்.

 சென்னை நுங்­கம்­பாக்­கம்  ஏரிக்­கரை மைதா­னம் அரு­கே­யுள்ள முன்­னாள் நக­ர­சபை திமுக உறுப்­பி­னர் ஒரு­வர் வீட்­டில் அண்ணா தங்­கி­யி­ருந்­தார். போலீ­சார் நள்­ளி­ரவு 1.30 மணிக்கு அங்கு சென்று அவரை கைது செய்­த­னர். அவ­ரு­டன் இருந்த மதி­ய­ழ­கன், அரங்­கண்­ணல், இரா. செழி­யன், காஞ்சி மணி­மொ­ழி­யார், அ.பொ. அரசு, சி.வி. ராஜ­கோ­பால், ரா. சம்­பந்­தம் மற்­றும் சில திமுக உறுப்­பி­னர்­க­ளும் கைது செய்­யப்­பட்­ட­னர்.

  திமு­க­வின் முன்­ன­ணித் தலை­வர்­க­ளெல்­லாம் கைது செய்­யப்­பட்­டார்­கள். போராட்­டம் வெடித்­தது.  26ம் தேதி குடி­ய­ரசு தினத்­தன்று 2 தமி­ழர்­கள் இந்­திக்கு எதிர்ப்பு தெரி­வித்­துத் தீக்­கு­ளித்­த­னர். ஒரு­வர் பெயர் சிவ­லிங்­கம். வயது 24. இவர் கோடம்­பாக்­கம் விஸ்­வ­நா­த­பு­ரத்­தைச் சேர்ந்­த­வர். இவ­ருக்கு பெற்­றோர் இல்லை. அண்­ணன் வீட்­டில் தங்­கி­யி­ருந்­தார். வன்­னி­யர் சமூ­கத்­தைச் சேர்ந்­த­வர்.

குடி­ய­ரசு தினத்­தன்று நள்­ளி­ர­வில் ரங்­க­நா­தன் என்ற 32 வயது இளை­ஞர் தீக்­கு­ளித்­தார். இவர் சென்னை விரு­கம்­பாக்­கத்­தில் பஜனை கோயில் தெரு­வைச் சேர்ந்­த­வர். கல்­யா­ணம் ஆன­வர். மனை­வி­யும், 3 குழந்­தை­க­ளும் உண்டு.  இவர் ஆயி­ரம் விளக்­குப் பகு­தி­யில் உள்ள தபால் நிலை­யத்­தில் சேவ­க­ராக

(பியூன்) வேலை பார்த்து வந்­தார். இந்தி எதிர்ப்பு போராட்­டத்­தில் மட்­டும் போலீஸ் துப்­பாக்­கிச் சூட்­டில் 55 பேர் பலி­யா­னார்­கள். 2 போலீஸ்­கா­ரர்­கள்  உயி­ரோடு எரிக்­கப்­பட்­டார்­கள்.

 பல­ரின் உயி­ரி­ழப்­பில்­தான் இந்தி எதிர்ப்பு போராட்­டம் நடந்­தது. அப்­போது தமிழ்­நாட்­டில் தனி­யார் பள்­ளி­கள் அதி­கம் கிடை­யாது. மாண­வர்­கள்  தமிழ் படித்­தார்­கள். தமிழ் மீடி­யத்­தில் படித்­தார்­கள். அன்று இந்­தியை ஆட்சி மொழி­யாக்­கவே இங்கே இந்தி எதிர்ப்பு போராட்­டம் நடந்­தது. இப்­போது தமி­ழ­க­மெங்­கும் ஏரா­ள­மான தனி­யார் பள்­ளி­கள்.  ‘இந்தி பெண்ணே ஓடு’ என்­பதை அன்­றைய போராட்­டத்­தின் கோஷ­மாக இருந்­தது. ஆனால் தமிழ்ப் பெண்ணை வாழ­வைக்­க­வில்லை. இன்­றைக்கு  மாண­வர்­கள் தமி­ழைப் படிப்­பதே கேவ­லம் என்ற நிலைக்கு தள்­ளப்­பட்­டு­விட்­டார்­கள். திமு­க­வி­னர் பல­ரும் சிபி­எஸ்.எசி பள்­ளி­க­ளையே நடத்தி இந்தி பாடம்­தான் நடத்­து­கி­றார்­கள். மொழிப் போர் என்­பது மாண­வர்­க­ளின் எதிர்­கா­லத்­தையே பாதிக்­கும் என்­ப­து­தான் உண்மை.